Monday, July 10, 2017

என் அப்பன் குதிருக்குள் இல்லை

ஆத்துல போடுவதாக இருந்தாலும்
அளந்துப் போடப்
பயிறுவிக்கப்பட்டவர்கள் நாம்

ஆகவே அளத்தல் சரிதான்

கறாராக என்பதுவும் சரிதான்

ஆனால் எதை எதனால் எப்படி ?

தூரத்தைத்  தராசில் நிறுத்தா ?

திரவத்தை அடிக் குச்சிக் கொண்டா ?

மணத்தை நாவின் மூலமா ?

ருசியைச் செவியின் மூலமா ?

இல்லையாயின்

மனம் கொள்ளும் நம்பிக்கைகளை

அறிவால் அளக்க முயல்வோமா?

காட்டு யானையை
பயிற்றுவிக்க
பயிற்றுவிக்கப்பட்டக்  கும்கியாய்

அனுபவத்தால்
அடைந்த சில
வழிமுறைகளை, நெறிமுறைகளை

சடங்காய் சம்பிராதயங்களாய்
வகுத்து வைத்திருக்கிறோம்

(பல விஷயங்கள் கண்ணை
மூடிக்  கொண்டு  ஏற்கும்படியாய்

சில விஷயங்கள் அடியோடு
அறுத்தெறியும்படியாய்  ) 

குட்டியில் சங்கிலியால்
கட்டப்பட்ட யானை
பலங்கொண்டதும் சணலுக்கு
அடங்கிடும் கதையாய்....

புரிந்துத் தொடர்கிற
புரிந்து மறுக்கிற
இருவரும்
நிச்சயம் புத்திசாலி

மாறாக
நாத்திகம் என் உயிர் மூச்சு

கோவிலுக்கு வந்தது
மனைவிக்காக என்பது

காவி உடுத்தியபடி
உத்திராட்சம் அணிந்தபடி
பகுத்தறிவு மேடையில் நாடகமாடுவதும்  

நிச்சயம்
இரசிக்கத் தக்கதில்லை

மாறாக
ஊரை ஏமாற்றுவதாய் நினைத்து
தன்னையே ஏமாற்றிக் கொள்ளும்
............................... கூட

(சமீபத்தில் ஒரு பகுத்தறிவுக் கூட்டத்
தலைவர் தன் அறுபதாம் கல்யாணத்தினை
அதற்கான கோவிலில் சென்று
செய்து கொண்டார்

அப்போது நிருபர்கள் கேட்டக் கேள்விக்கு
இது  என் தனிப்பட்ட விஷயம் என்றார்

ஒரு ஆதீனத் தலைவர் எப்போதும்
எப்போதும் கடவுள் மறுப்பாளர்களைச்
சுற்றியே காட்சித் தருவார்

இந்த இரண்டுக்கும்  இந்தப் பதிவிற்கும்
எந்தச்சம்பந்தமில்லை

ஆம் என் அப்பன் குதிருக்குள் இல்லை )

13 comments:

ஸ்ரீராம். said...

​நிறம் மாறாத பூக்கள்.

Yaathoramani.blogspot.com said...

நிறம் மாறும் பூக்களா ?
மாறாத பூக்களா ?

ஸ்ரீராம். said...

சுயத்தை மறைக்க முடியாததால் 'மாறாத'!

Yaathoramani.blogspot.com said...

ஆம் அது கூட இல்லை
அதுவே மிகச் சரி

Unknown said...

எல்லோரும் பெரியார் ஆகமுடியாது ,ஆதீனமும் ஆக முடியாது :)

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

என்னத்த சொல்ல... ம்...

கோமதி அரசு said...

//குட்டியில் சங்கிலியால்
கட்டப்பட்ட யானை
பலங்கொண்டதும் சணலுக்கு
அடங்கிடும் கதையாய்.//

அருமை.

M0HAM3D said...

அருமை

Unknown said...

முற்றும் சரியே

G.M Balasubramaniam said...

ஆங்கிலத்தில்சொல்லப்படுவதுபோல you have to have the courage of conviction

Thulasidharan V Thillaiakathu said...

யாரென்று சொல்லிவிட்டு, அப்பன் குதிருக்குள் இல்லை என்றதை மிகவும் ரசித்தோம்!!! உண்மைதான்!!! ஆல் ஹிப்போக்ரைட்ஸ்..

தி.தமிழ் இளங்கோ said...

எல்லாம் நாடக மேடை.

Post a Comment