Thursday, July 27, 2017

எங்கள் அப்துல் "கலாமே '


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் சிறிது  ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்து
சொர்க்கத்தில் சிறிது ஓய்வெடுப்பீர் 

9 comments:

KILLERGEE Devakottai said...

கலாமின் அஞ்சலி நன்று
த.ம.பிறகு

Unknown said...

கலாம் கண்ட கனவை நனவாக்குவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி :(

ஸ்ரீராம். said...

போற்றுவோம் அவர் நினைவை.
நிறை வேற்றுவோம் அவர் கனவை.

இரண்டாம் வாக்கு என்னுடையது!!!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான அஞ்சலி.....

த.ம. 4

கரந்தை ஜெயக்குமார் said...

கலாம் போற்றுவோம்

Anuprem said...

அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

கலாம் கலாம்... சலாம் சலாம்...

G.M Balasubramaniam said...

ராமேஸ்வ்ரத்தில் அப்துல் கலாமின் வீட்டுக்கும் நினைவிடத்துக்கும்சென்று வந்தோம் அவர் புகழ் ஓங்குக,

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான அஞ்சலி!! அவர் புகழ் நிலைத்து நிக்கட்டும். நீங்கள் இவ்வளவு அருமையாக எழுதியிருக்க...

எல்லோரும் புகழ்ந்துகொண்டிருக்க ....ஏதோ ஒரு டிவியாமே அதில் கலாம் நினைவிடத்தில் கீதை, வீணை வைத்திருப்பது சரியா...கலாம் வீணை வாசித்தது என்று வெட்டிப் பேச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். கலாமின் தனிப்பட்ட விருப்பத்தைக் கூட இன்று ஹிந்துத்வா ஆக்கி அசிங்கமாக இருக்கிறது...இப்படியுமா நம் ஊடகத் துறை இருக்கும்? பண்பட்டு ஹெல்தியாக இல்லை என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது...

கீதா

Post a Comment