Saturday, July 15, 2017

பொலிடீசியன் பிகேவியரா/பிக் பாஸ் ப்ரொமோஷனா

நகரமயமானபின்னே
சேரிக்கான பொருளே
வேறுவகையாகிப்போனதே

வேளச்சேரி,கூடிவான்சேரியை
மட்டும் சொல்லவில்லை
கூவத்தோரம் இருப்பவர்களுக்கும்
சேர்த்துத்தான் சொல்கிறேன்

கிராமங்களில்
பழையபச்சேரிகள்
எனச் சொல்லப்பட்டதெல்லாம்
அம்பேத்கார் நகர் எனவே
பொதுப்பெயர் பெற்றுப் போக

சேரிகள் எனில்
பொருளாதார ரீதியாக
பின் தங்கியோர்
வாழும் பகுதி என ஆனபின்
ஜாதிப்பிரச்சனை ஏன் வருகிறது ?

அவர்களை முன்னேறாது
அவர்களாகவே வைத்திருத்தலே
தங்கள் நிலைப்புக்கு வசதி
எனக் கருதும் அரசியல் வியாதிகள்

அவர்களே மறந்துபோன
அவர்களுக்கான அடையாளங்களை
மீண்டும் நிலை நிறுத்த
முயல்வதுதான்
பொலிடீசியன் பிகேவியரா ?

இல்லை இது கூட
பிக் பாஸுக்கு மறைமுகமாய்
ப்ரொமோஷன் செய்யும் தந்திரமா ?

7 comments:

Unknown said...

நன்றி நண்பரே என் வலை வருதில்லையே தாங்கள் ஏன்?

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம்.... எல்லாம் அரசியல், இங்கே ஆர்.டி.பி. மட்டுமே முக்கியம்....

Thulasidharan V Thillaiakathu said...

அரசியல் வியாதிகள் தொற்று நோயாய் ஆகிப்போனதே..புதியதாய் நல்ல மருந்து வந்தாலே அதற்குத் தீர்வு....

கீதா

KILLERGEE Devakottai said...

இங்கும் பிக்பாஸா ? இருக்கலாமோ....

கரந்தை ஜெயக்குமார் said...

இருக்கலாம்
தம+1

G.M Balasubramaniam said...

இதெல்லாம் நம் மக்களின் மனநிலை அரசியல்வாதிகளிடம்மட்டும் அல்ல பொடுவாக பாரம்பரியதைக்காக்கும் செயலோ.....!>?

திண்டுக்கல் தனபாலன் said...

அங்கும் அரசியல்...

Post a Comment