Friday, July 14, 2017

மாற்றம் சில நாள் குழப்பத்தான் செய்யும்

மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் சில  மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை
புரிந்து கொண்டால் குழப்பமில்லை

உதாரணமாய்...

நில உடமைச் சமுதாயத்தின்
எச்சமாய் இருந்த
எங்கள் ஊர்
நான் சிறுவனாய் இருக்கையில்...

கீழக்கடைசியில் பச்சேரி
மேலக்கடைசியில் அக்ரஹாரம்
இரண்டுக்குமிடையில்
பிள்ளைமார தெரு
யாதவர் தெரு
நாடார் தெரு
தெற்குப் பகுதியனைத்தும்
சேர்வார் வீதி
அதை ஒட்டி
சௌராஸ்டிரா தெருவென
ஜாதியாகத்தான் பிரிந்திருந்தது

அறுபத்தியேழுக்குப் பின்
எழுந்த ஒரு பெரும்
சமூக நீதிப்புரட்சியில்
ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தில்
சாதிப்பெயர்கள் அனைத்தும்
அழித்தொழிக்கப்பட்டு

கீழக்கடைசியில் அம்பேத்கர் நகர்
மேலக்கடைசி ஈஸ்வரன் கோவில்தெரு
இரண்டுக்குமிடையில்
வ.வு.சி வீதி,மற்றும்
கோபாலகிருஷ்ணன் தெரு
காமராஜர் தெரு
தெற்குப்பகுதியனைத்தும்
மருதுபாண்டியர் தெரு
அதை ஒட்டி பிரஸ்ன்ன காலனி
என அரசின் உத்திரவால்
சமத்துபுரமாகிப் போனது

மனம் மாற்றி பெயர் மாற்றாததால்  
சில நாட்கள் பெயர்க்குழப்பமிருந்தது

விளக்கம் சொல்பவர்கள்
"அதுதாம்பா "எனச் சொல்லிப்
பழைய பெயரைச்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்

இப்போதெல்லாம்
பெயரிலேயே விளக்கம் இருப்பதால்
யாரும் குழம்புவதில்லை

ஆம்மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை

புரிந்து கொண்டால் குழப்பமில்லை


8 comments:

KILLERGEE Devakottai said...

கவிஞரே பெயர்தானே மாறி இருக்கிறது மாற்றத்தின் அவசியம் மாறிவிட்டதா ?
த.ம.

திண்டுக்கல் தனபாலன் said...

சரிதான்... உண்மை...

Unknown said...

உண்மைதான் இரமணி!

மனோ சாமிநாதன் said...

மிகவும் அருமை!

G.M Balasubramaniam said...

குழப்பங்கள் தெளிந்தால் சரி

Thulasidharan V Thillaiakathu said...

தெருப் பெயர் குழப்பங்கள் இங்கு சென்னையிலும் மாற்றப்படும் போது அதிகக் குழப்பம். நமக்கே இப்படி என்றா போஸ்ட் மேனுக்கு? அவர்களுக்குப் பழைய பெயர்களு, புதுப்பெயர்களும் கொடுத்திருப்பார்களோ??!!

கீதா

Unknown said...

பெயர் மாறியது ,குணம் மாறியதா :)

வெங்கட் நாகராஜ் said...

அருமை. மாற்றங்கள்.... மனதிலும் வேண்டும்.

Post a Comment