Friday, February 17, 2012

அடங்காத மனசு

நான் எங்கள் வீட்டு நடுக் கூடத்தில் உட்கார்ந்து
படித்துக் கொண்டிருக்கிறேன்.எப்போதுமே நாங்கள்
வீட்டில்  உட்காரும்போது இப்படித்தான்
தெற்குப் புறச்  சுவற்றில் சாய்ந்து
 உட்கார்ந்து கொள்வோம்

இப்படி உட்கார்ந்தால் இடது புறம் கூடம் ,நடை,
திண்ணை தாண்டி தெருவாசல் வரை
தெளிவாகத்தெரியும்

அதேபோல வலது புறம் கூடம்,இருட்டுக் கூடம்
சமையலறைவெளி சமயலறை,முற்றம்,
மாட்டுக் கொட்டகை,கிணறு ,தோட்டம் தாண்டி
 பின் தெரு வரை முழுமையாகத்  தெரியும்

நாங்கள் எப்போதுமே வாசல் கதவுகளை
மூடுவதில்லை
மாலையில் எனில்  வாயில் புறம் வந்த லெட்சுமி
கொல்லைப் புறம்போய் விடுவாள் என
பின்புற வாசல் மட்டும் பூட்டி விடுவோம்
மற்றபடி எப்போதும் இருபுற கதவுகளும்
திறந்தே இருக்கும் இப்படி படித்துக் கொண்டிருந்தாலும்
வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் இங்கு
உட்கார்ந்து கொண்டால்  வாசலையும்
கொல்லையையும்.கவனித்துக் கொள்வது ரொம்ப வசதி

 குனிந்து படித்துக் கொண்டிருக்கும் போதே
திடுமென வாசல் பக்கம் யாரோ வருவது போல
நிழலாட திரும்பிப் பார்க்கிறேன்.எனக்கு "பக்" என்றது

செத்துப் போன வெங்கு தாத்தா தடியை ஊன்றியபடி
படியேறிக் கொண்டிருந்தார்.

எனக்கு கைகால்நடுக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது
என்னசெய்வது எனத்தெரியவில்லை.
ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
மிக வேகமாக ஓடி வாசல் கதவை மூடப் பார்க்கிறேன்
அதற்குள் அவர் வாசல் தாண்டி திண்ணைக்குள்
நுழைந்து விட்டார்.ஓடி வந்த அவசரத்தில் டிராயர் வேற
கழற ஆரம்பித்துவிட்டது.யோசிப்பதற்கு நேரமில்லை
சடாரெனப் பாய்ந்து அவர் உள்ளே நுழையாதபடி
மண்டி போட்டு அவர் முட்டியோடு சேர்த்துப்
பிடித்துக் கொண்டு "தாத்தா நீங்க செத்துப் போயாச்சு
இனிமே நீங்கள்வீட்டுக்குள் வரக்கூடாது ஆகாது "
என கத்துகிறேன்

அவர் என்னைக் கண்டு கொண்டதாகவே
தெரியவில்லை
என் பிடிக்குள் அவர் இல்லவே இல்லை
அவர் பாட்டுக்கு நடந்து நடைக்கு வந்து விட்டார்

ஏற்கெனவே எனக்கு நடைரூம்  என்றாலே பயம்
அதில் அப்பா தங்கை  பெரிய பாட்டி ஆகியோரின்
உடல்களை படுக்க வைத்துப் பார்த்ததிலிருந்து
பகலில் நடைப்பக்கம் வந்தால் கூட
கண்ணை மூடிக் கொண்டுதான் வாசல் பக்கம் வருவேன்
இப்போது இவர் வேறு அங்கு நிற்க 
உடல் நடுங்கத் துவங்கியது

வெங்கு தாத்தா இப்போதுதான் என்னைப் பார்ப்பது போல
"நான் இங்கிருந்துதான்  சுடுகாடு போக ஆசைப் பட்டேன்
என் நேரம் நடக்காமப் போச்சு " என்று சொல்லியபடி
மேற்கொண்டு வீட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்
நானும் விடாது " உள்ளே போகாதீர்கள் வெங்குத் தாத்தா
வீட்டிற்கு ஆகாது தாத்தா வந்தவுடன் வாங்க தாத்தா "
என கத்திக் கொண்டே பின்னால் போனேன்

அவர் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை
ஒவ்வொரு இடமாக நின்று  ஏதோ சிற்பத்தை
ரசிப்பதைப் போலரசிப்பதும் பின் தொடர்ந்து
நடப்பதுமாக வந்து சமையலறையில்
கொஞ்ச நேரம் நின்றார்.பின் என்னை பார்த்து
 "சமையலறையில்மட்டும் கொஞ்சம் வேலை
பார்த்திருக்கிறானாக்கும் " என்றார்

எனக்கு இப்போது எரிச்சல் அளவு கடந்து போயிற்று
"எங்கள் வீடு நாங்கள் என்னவும் செய்வோம்
உங்களுக்கென்ன ஆச்சு " என்றேன்

அவர் நிதானமாக"உங்க வீடா உங்க தாத்தனைக்
கேட்டுப் பாருஒவ்வொரு செங்கலா நான் அடுக்கி
 ரசித்து கட்டிய வீடாக்கும் "என்றார்

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பயம் ஒருபக்கம்வீட்டில் யாரும் இப்போது பார்த்து
 இல்லையே என்கிற எரிச்சல் ஒருபக்கம்
எப்படியும் இவரை வெளியே துரத்திவிடவேண்டும்
என்கிற வெறி ஒருபக்கம்
இனி வேறு வழியில்லை .கொல்லைப்புற
வாசலைத் தாண்டியதும்கதவைச் சட்டெனப்
 பூட்டிவிடுவோம் என மெதுவாக
அவர் பின்னாலேயே நடக்கத் துவங்கினேன்

நான் எதிர்பார்த்தபடியே பின் புற வாசல்
நிலையில் நின்று பின்புறத்தை ஒரு நோட்டம் விட்டார்.
நான் கதவடைக்கரெடியாக இருந்தேன்.
என்ன நினைத்தாரோ சட்டென திரும்பவும்
உள்ளே திரும்பி நடக்கத் துவங்கிவிட்டார்

இனி இவரை உள்ளே விட்டால் போச்சு என சட்டென
தரையில் விழுந்து அவர் கணுக்காலை கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு எவ்வளவு சப்தமாகக் கத்த முடியுமோ
அவ்வளவு சப்தமாக கண்ணை மூடிக்கொண்டு
கத்தத் துவங்கினேன்.
இப்போதுஅவர் காலகள் இரண்டும்என் கைப்பிடியில்
இருந்தது.அவரால் நகரமுடியவில்லை

நான் மெதுவாக கண்விழித்துப் பார்த்தபோது
என் அம்மாவின்கைகளை கெட்டியாகப் பிடித்திருந்தார்
அவர்கள் மடியில்குப்புறப் படுத்திருந்தேன்.
புரண்டு திரும்பிப் பார்க்கையில்
தாத்தாவும் பாட்டியும் குனிந்து என்னையே
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கூடத்தில் சுவற்றில்
தெரிந்த அவர்கள் நிழல்கள் இன்னும் என் பயத்தை
அதிகமாக்கிக் கொண்டிருந்தது நிச்சயமாக
அது கனவில்லைவெங்குதாத்தா
உள்ளே தான் இருக்கிறார் எனக் கத்தவேண்டும்
போல இருந்தது கத்தவும் செய்தேன்.சப்தம்தான்
வெளியே வரவில்லை

"உன் பேரன் என்னவோ பேய் கனவு கண்டுப்
பயந்திருக்கிறான்
சாமி கூண்டில் இருந்து விபூதி எடுத்து நெற்றியில் வை
அப்படியே வாயிலும் போட்டு தண்ணீர் கொஞ்சம்
குடிக்கக் கொடு "எனச் சொல்லி தாத்தா அவர் கட்டிலுக்கு
படுக்கப் போய்விட்டார்

"நிலைக்கு நேராக படுக்காதே எனச் சொன்னால்
கேட்டால்தானே " எனச் சொல்லியபடி  என் நெற்றியில்
திரு நீறு பூசி அப்படியே கொஞ்சம் வாயிலும் போட்டு
கொஞ்சம் தண்ணீரை குடிக்கவைத்தாள் பாட்டி
நான் மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்

"என்னடா கனவு கத்தி ஊரையே கூட்டுகிற மாதிரி "
நெஞ்சைத் தடவி விட்டபடிக் கேட்டாள் அம்மா

"நிஜம்மாம்மா செத்துப் போன வெங்குத்தாத்தா
வீட்டுக்கு வந்தார் .இப்போ கூட உள்ளே இருக்கார்
நம்பும்மா " என்றேன்

"சரி சரி விடிஞ்சு போச்சு நீ  போய் தாத்தாகிட்ட
படுத்துக்கோ.நான் உள்ளே இருக்கிறாரான்னு பாக்கிறேன் "
எனச் சொல்லி அம்மா எழுந்து வாசல் தெளிக்கப் போனாள்
நான் ஓடிப் போய் தாத்தாவை
கட்டிப் பிடித்துப் படுத்துக் கொண்டேன்

"என்ன வெக்குத் தாத்தா ரொம்ப பய முறுத்திவிட்டானா  "
என என்னைத் தடவிக் கொடுத்தபடியே தாத்தா கேட்டார்
எனக்கு அது கொஞ்சம் தெம்பாகவும் இருந்தது
கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது

"இல்லை தாத்தா செத்தவர் உள்ளே வரக்கூடாதுன்னு
கத்திக் கத்தி சொல்றேன் கேக்காம உள்ளே வர்ராரு
கேட்டா என் வீடு உன் தாத்தன் கிட்ட வேற கேளுன்னு
சொல்றாரு.அவர் வீடா தாத்தா உன் வீடுதானே தாத்தா "
என்கிறேன்

"அப்பிடிச்சொன்னானா " எனச் சொன்னவர் சிறிது நேரம்
எதையோ நினைத்தபடி பேசாமல் இருந்தார்
பின் அவரே அவருக்கே சொல்லிக் கொள்ளுகிற மாதிரி
பேசத் துவங்கினார்

"அவன் சொல்வது நிஜம்தான் அவன்தான்
இந்த வீட்டை கட்டினான்.ஆசை ஆசையா
பாத்துப் பாத்துக் கட்டினான்.அதிகக் கடன் ஏறிப்போச்சு
நாலு பொண் பிள்ளைங்க வேற இரண்டு பையன்களும்
தறுதலையா போனாங்க.சமாளிக்க முடியாம
எங்கிட்டதான் வித்தான்.

உங்க அம்மா சின்னப் புள்ளையா
இருக்கிறப்பவே இதுவெல்லாம் நடந்து போச்சு
தெருவில் வெங்கையாத் தாத்தா அவ்வளவு வசதியா
வாழ்ந்தவருன்னு இப்ப இருக்கிற யாருக்குமே தெரியாது
போன வருஷம் சாகிறதுக்கு முன்னாடி கூட
வீட்டை ஒருதடவை நல்லா  பாத்துக்கறேண்டான்னு
சொல்லி பாத்துட்டுப் போனான்.
ரொம்ப மனசு சரியில்லைன்னு போன இப்படி இங்கே தான்
கூடத்தில வந்து உட்கார்ந்துப்பான்
எனக்கு கூட அவங்கிட்ட வாங்கி இருக்கக் கூடாதோன்னு
அப்பப் அப்பத் தோணு ம்....."

தாத்தா பேசிக் கொண்டே இருந்தார்
நான் எப்போது   தூங்கினேன் என்று எனக்கேத் தெரியவில்லை
நான் விழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்திருந்தது
அவசரம் அவசரமாக குளித்து முடித்து
வழக்கம்போல ஈஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிடக்
கிளம்பினேன்

அம்மா சமையல் கட்டிலிருந்து
" நீ சின்னப் பையன் இல்லை ஆறு முடிச்சு
ஏழு போகப் போறே.படிப்போட தைரியத்தையும் கொடுன்னு
அம்பாள வேண்டிண்டு வா "ன்னு கத்தினாள்

நான் மண்டைய ஆட்டிவிட்டு தெருவுக்கு வந்தேன்
வாசலுக்கு வந்ததும் என்னையும் அறியாமல் ஏனோ
தெருவுக்கு நடுவில் இருந்த வெங்குத்தாத்தா பையன்
வீட்டைத்தான் பார்த்தேன்

வாசலில் ரிக்க்ஷாவில் இருந்து நாராயணன் சாஸ்திரிகளும்
அவர் அசிஸ்டெண்டும் இறங்கி அவர்கள் வீட்டுக்குள்
போய்க் கொண்டிருந்தார்கள்.என்னவாக இருக்கும்
என யோசித்தபடி நடக்கத் துவங்கினேன்

வெங்குத்தாத்த விட்டுக்கு எதிர்வீடுதான்  கோபால் வீடு
அவனும் வாசலில் இருந்து ரிக்க்ஷாவில் இருந்து
பை ,சட்டி பானைகளை இறக்குவதை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

நான் அவன் அருகில் போய் " இவர்கள் வீட்டில்
என்ன விஷேசம்  "என்றேன்

"உனக்குத் தெரியாதா வெங்குத்தாத்தா செத்து
இன்றோடு ஒரு வருஷம் ஆகிப் போச்சு.
இன்று முதல் திவசம் " என்றான்

77 comments:

Avargal Unmaigal said...

உங்கள் கனவு கதை நன்றாக இருக்கிறது. இது போல அனுபவங்கள் பலருக்கு சிறுவயதில் ஏற்பட்டிருக்கும் எழுதிய விதமும் அதை முடித்த விதமும் அருமை வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லது நடக்கும் என்று எனது வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வதுண்டு அது போல கல்யாணகாட்சி கனவில் வந்தால் கெட்டது நடக்கும் என்றும் சொல்வதுண்டு.

உங்கள் கனவில் இறந்தவர் வந்ததால் நல்ல பல விஷ்யங்கள் நடந்துள்ளன என்பது நிருபணம் ஆகிறது. இதற்கு உங்கள் வாழ்க்கையயே உதாரணம். என்ன நான் சொல்வது சரிதானே ரமணி சார்.

Unknown said...

சிலவற்றை உணரத்தான் முடியும்! உணர்வுகளும் அதன் பிண்ணனியான புரிதல்களுமே இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படை!

உணர்வுகள் புரியும்போது சிலிர்ப்பைத் தந்துவிட்டு செல்லும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

சார், இது படிக்க எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உண்மையில் இது போல சில கனவுகள் வருவதுண்டு. ஆராய்ந்து பார்த்தால் அதில் இதுபோல சில விஷயங்களுடன் நெருங்கிய சம்பந்தமும் இருப்பதுண்டு. சொன்னால் பிறர் நம்ப மாட்டார்கள்.

அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

raji said...

உண்மை சம்பவமோ?

Madhavan Srinivasagopalan said...

சார்.. சார்.... நீங்க கதையும் எழுதுவீங்களா..?
சென்ஷேஷனல்.. அருமை.. அருமை... தொடர்ந்து எழுதுங்கள்..

முனைவர் இரா.குணசீலன் said...

ஆரம்பத்திலிருந்து நீரோட்டம் போன்ற எழுத்து நடையால் தொடர்ந்து படிக்கமுடிந்தது..

நன்று.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! ஏதோ ஒரு சக்தி. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சில சமயம் நினைவலைகளாய் எல்லோருக்கும் வரும். இடம் மாறி படுத்தாலும் வரும் என்றும், அமுக்கி விட்டது என்றும் சொல்வார்கள். அனுபவத்தை விரிவாகச் சொல்லி எல்லோரையும் அமுக்கி விட்டீர்கள்

ஸாதிகா said...

இந்த அனுபவத்தை நான் படிக்கும் பொழுது இரவு 12 மணி.பயம் மனம் முழுக்க பரவ திகிலுடன் படித்தேன்.இன்னும் திகிலில் இருந்து மீளவில்லை.

ஹேமா said...

கவிதைகள் போலவே கதைகூட அருமையாக சரளமாக எழுத வருகிறது.உங்கள் கதைக்குள் நிலைப்படிக்கு நேரே படுக்கிறது,கனவு கண்டால் தண்ணீர் குடிப்பது போன்றசில நம்பிக்கைகள் தொடர்ந்தே வருகின்றன.அதுபோல இந்தக் கனவின்
நம்பிக்கையும் !

Anonymous said...

kathai superaa irukku...


starting payam vanthathu..appuram payam illai...jolly yaa pochi..super

kowsy said...

இது உண்மையாக நடந்ததா? இல்லை கதையா? அதனை முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். கதை ஆரம்பத்தில் எனக்குள்ளே ஒரு நெருடல் தோன்றியது . கட்டிப் பிடித்து அடிக்கொரு தடவை முத்தம் கொடுத்து இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்தளித்து வாழும் நாம் ஒருவர் இறந்துவிட்டால் எவ்வளவு தள்ளி வைக்கின்றோம். பயப்படுகின்றோம். உள்ளே வரவிடாமல் தடுக்கின்றோம் . கனவில் கூட ஒதுக்குகின்றோமே ? கவலையாக இருக்கின்றது. வாழும் போது எவ்வளவு கற்பனையுடன் சொத்துக்களைச் சேகரிக்கின்றோம். ஆனால் எதுவும் எமக்குச் சொந்தமில்லை என்பதை உங்கள் கதை எடுத்துக் காட்டுகின்றது. இருக்கும் வரைதான் உலகம் வாழ்க்கை சொந்தம் உறவு அனைத்தும். பலமாக யோசிக்க வைத்த கதை. நீங்கள் எழுதிய வீட்டின் அமைப்பு மிகப் பிடித்திருக்கின்றது . இது படித்த போது எனது கனவு ஒன்றையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. வாசிக்க வாசிக்க ஆர்வத்தை ஏற்ப்படுத்திய பதிவு. நன்றி.

Avargal Unmaigal said...

சந்திர கெளரி அவர்களின் பதிலும் மிக அருமையாக உள்ளதோடு சிந்திக்கவும் வைக்கிறது நல்ல பதில்

Avargal Unmaigal said...

சந்திர கெளரி உங்கள் பதில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஓவ்வொரு வரிகளும் மிக மிக அருமை

கீதமஞ்சரி said...

அனுபவமோ, புனைவோ... எப்படியிருந்தாலும் கடைசிவரை திகில் குறையாத எழுத்தும் நடையும். சந்திரகௌரி சொன்னதுபோல் எவ்வளவு பாசத்துக்குரியவராயிருந்தாலும் இறந்தபின் ஒரு பயம் வந்துவிடுவது வியப்புதான். வெங்குத் தாத்தாவின் வீடு என்பதை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அரைகுறையாகக் கேள்விப்பட்டிருந்து அதை கவனத்தில் கொள்ளாவிட்டாலும் மூளையில் பதிந்துபோய் கனவாக வெளிப்பட்டிருக்கலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், அடுத்தநாள் அவரது திவசம் என்று தெரியவரும்போது திடுக்கிடத்தான் வேண்டியுள்ளது. அசரவைக்கும் கருவும் எழுத்தோட்டமும் கண்டு வியந்து பாராட்டுகிறேன் ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாக்மூட்டும் அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

சிலவற்றை உணரத்தான் முடியும்! உணர்வுகளும் அதன் பிண்ணனியான புரிதல்களுமே இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படை! //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

உங்கள் கனவில் இறந்தவர் வந்ததால் நல்ல பல விஷ்யங்கள் நடந்துள்ளன என்பது நிருபணம் ஆகிறது. இதற்கு உங்கள் வாழ்க்கையயே உதாரணம//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

சிறுகதை மன்னரால் பாராட்டப் பட்டதை
மிகப் பெரிய விருதாக அங்கீகாரமாக எண்ணி
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
இதற்கு முன்னைய உறவுகள் குறித்த
தங்கள் கருத்தை அதிகம் எதிர்பார்த்தேன்

Yaathoramani.blogspot.com said...

raji //

உண்மை சம்பவமோ? //


மிகச் சரி
சிறுவயதில் நடந்தது இப்போதும் மறக்காமல்
மனதடியிலேயே பதிந்து கிடந்தது
பதிந்து வைப்போமே என பதிவாக்கினேன்

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

சார்.. சார்.... நீங்க கதையும் எழுதுவீங்களா..?
சென்ஷேஷனல்.. அருமை.. அருமை... தொடர்ந்து எழுதுங்கள்.. //


சமயத்துக்கு இட்டிலிக்கு சரியாக வரவில்லையென்றால்
தோசை வார்த்துவிடுகிற மாதிரி
கவிதைக்குள் அடங்காதசில விஷயங்களை கதையாக்கி விடுவது என எழுதினேன்

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

அனுபவத்தை விரிவாகச் சொல்லி எல்லோரையும் அமுக்கி விட்டீர்கள் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

இந்த அனுபவத்தை நான் படிக்கும் பொழுது இரவு 12 மணி.பயம் மனம் முழுக்க பரவ திகிலுடன் படித்தேன்.இன்னும் திகிலில் இருந்து மீளவில்லை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

கவிதைகள் போலவே கதைகூட அருமையாக சரளமாக எழுத வருகிறது.

அந்த நிகழ்வு சம்பத்தப் பட்டவர்க்ள் எல்லாம்
பழைய நம்பிக்கைகளில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்
அவர்கள் சம்பத்தப் பட்ட விஷயம் தானே இது

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

guna thamizh //

ஆரம்பத்திலிருந்து நீரோட்டம் போன்ற எழுத்து நடையால் தொடர்ந்து படிக்கமுடிந்தது..நன்று. //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கலை //

kathai superaa irukku...

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

இருக்கும் வரைதான் உலகம் வாழ்க்கை சொந்தம் உறவு அனைத்தும். பலமாக யோசிக்க வைத்த கதை. நீங்கள் எழுதிய வீட்டின் அமைப்பு மிகப் பிடித்திருக்கின்றது //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

சந்திர கௌரி அவர்களின் பதிவுகளைப் போலவே
பின்னூட்ட்மும் கவனிக்கத் தக்கதாயும்
ரசிக்கத் தக்கதாயும் எப்போதும் இருக்கும்
தங்கள் பாராட்டுக்கு என் சார்பாக நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

சந்திர கௌரி அவர்களின் பதிவுகளைப் போலவே
பின்னூட்ட்மும் கவனிக்கத் தக்கதாயும்
ரசிக்கத் தக்கதாயும் எப்போதும் இருக்கும்
தங்கள் பாராட்டுக்கு என் சார்பாக நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

அசரவைக்கும் கருவும் எழுத்தோட்டமும் கண்டு வியந்து பாராட்டுகிறேன் ரமணி சார்.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

சொல்லுகின்ற செய்தி எதுவாக இருந்தாலும்
சொல்லுகின்றவரின் திறமையும்,சொல்லப்படுகின்றமுறையும்
சுவையாக இருக்குமானால் அது பலராலும் விரும்பத்
தக்கதாகயிருக்கும் என்பதற்கு இப்பதிவு ஓர் எடுத்துக்காட்டு
பாராட்டுக்கள் இரமணி!
சா இராமாநுசம்

பால கணேஷ் said...

மிகச் சரளமான நடை. அந்த வீட்டின் அமைப்பை நீங்கள் விவரித்த விதமும், சம்பவங்களை சொல்லிச் சென்ற விதமும் அபாரம். மிக ரசித்துப் படித்தேன்.

சத்ரியன் said...

ரமணி ஐயா,

அனுபவமோ, புனைவோ - விருந்து சிறப்பாக இருந்தது.

என் சிறுவயதில் மிதப்பது போல் கனவு வந்ததும் உண்டு.

// "மாமா நீங்க செத்துப் போயாச்சு
இனிமே நீங்கள்வீட்டுக்குள் வரக்கூடாது.ஆகாது " //

கதையோட்டத்தில் தாத்தா என்றே இடம்பெற்ற இந்த பாத்திரம் இங்கே மட்டும் ’மாமா’ வாக ...?

துளசி கோபால் said...

திகிலோடு வாசித்து ரசித்தேன்.

உயிர் இருந்தா மனுசன். செத்தா ...பிணம்:(

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

சொல்லுகின்ற செய்தி எதுவாக இருந்தாலும்
சொல்லுகின்றவரின் திறமையும்,சொல்லப்படுகின்றமுறையும்
சுவையாக இருக்குமானால் அது பலராலும் விரும்பத்
தக்கதாகயிருக்கும் என்பதற்கு இப்பதிவு ஓர் எடுத்துக்காட்டு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

மிகச் சரளமான நடை. அந்த வீட்டின் அமைப்பை நீங்கள் விவரித்த விதமும், சம்பவங்களை சொல்லிச் சென்ற விதமும் அபாரம். மிக ரசித்துப் படித்தேன்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //

அனுபவமோ, புனைவோ - விருந்து சிறப்பாக இருந்தது.என் சிறுவயதில் மிதப்பது போல் கனவு வந்ததும் உண்டு. //

தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
சரிசெய்துவிட்டேன்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துளசி கோபால் //

திகிலோடு வாசித்து ரசித்தேன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Anonymous said...

நல்ல சிறுகதை.
வீட்டின் விவர வர்ணனைக்
கவர்ந்தது.

Ahila said...

நடந்தது என்ன தெரியாமலே கனவுகள் வருவது சில சமயங்களில் நடப்பது உண்டு....அதை அழகாக சொன்னது படிக்கும் போது நானே அந்த வீட்டில் இருப்பது போல் தோன்றியது. அருமையான விவரிப்பு...

raji said...

//சமயத்துக்கு இட்டிலிக்கு சரியாக வரவில்லையென்றால்
தோசை வார்த்துவிடுகிற மாதிரி //

உதாரணம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் உங்கள் பதிவிற்கு இது பொருந்தாது.ஏனெனில் நீங்கள் இட்லி என்றாலும் தோசை என்றாலும் அது அதற்குரிய
பதத்திற்கு தகுந்தாற் போல் தயார் செய்யும் பதிவர்

ShankarG said...

ரமணி,

அடங்காத மனம் மிகவும் நன்று. இயல்பான, எளிய நடையில் படைத்திருப்பது அற்புதம். வாழ்க.

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமாகவும்,திகிலாகவும் இருந்தது, சார்.

முதல் பத்தியில் வீட்டின் விர்ணனை மிக அருமையாக இருக்கு.

துரைடேனியல் said...

வீட்டைக்குறித்த வர்ணணைகள் அபாரம் சார். நான் முதலிலேயே யூகித்தேன். அதேபோலவே திகில் சஸ்பென்ஸ் என்று திடுக்கிட வைத்து விட்டீர்கள். ஏதேனும் அமானுஷ்ய தொடர் ஏதேனும் எழுதத் தீர்மானித்திருக்கிறீர்களா? அதற்கான அச்சாரம் போல தோன்றுகிறதே.கடைசி வரி திகிலை மிகவும் அதிகரித்தது. எப்படியோ அற்புதமான அனுபவம் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. பகிர்வுக்கு நன்றி.

துரைடேனியல் said...

tha ma 7.

தனிமரம் said...

நம்பிக்கையின் வெளிப்பாடும் ஆசைப்பட்டு கட்டிய வீட்டின் நினைவுகளையும் சேர்த்து அழகாய்ச் சொன்ன கதை பிடித்திருக்கின்றது.ஐயாவின் நடையில் ஆன்மீகம் கலந்து வருவது ரசிக்க வைக்கின்றது கனவு கண்டால் வீபூதி பூசுவது பல இடத்திலுல் இருக்கின்ற நிலைதான் போலும்.

சென்னை பித்தன் said...

சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறீர்கள்.அருமை.
த.ம.9

நம்பிக்கைபாண்டியன் said...

நன்றாக நகர்கிறது கதை!
உள்மன உணர்வுகள் மரணத்திலும் தொடரும் என்று பலர் சொல்வது உண்மைதான் போலவே!

கே. பி. ஜனா... said...

ஆச்சரியம் தான்!

Anonymous said...

கதையின் ஓட்டத்தில் இப்படி நடக்குமா என்று இருந்தது. சிறு கதை போல உள்ளத் தங்கள் அனுபவம். நன்று..நன்று வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

மாலதி said...

மிகசிறந்த ஆக்கங்களை தொடர்ந்து வழங்கும் ஐயா உமக்கு எமது பாராட்டுகளும் நன்றியும்

ADHI VENKAT said...

கனவை சுவாரசியமாக பகிர்ந்துள்ளீர்கள் சார்....திகிலாகத் தான் இருந்தது.

த.ம 11

சசிகலா said...

உண்மையோ , பதிவிர்க்காய் சொன்னதோ எதோ எதோ திகில் எனையும் ஒட்டிக்கொண்டது . எனக்கும் என் கிராமத்து வீட்டில் இருப்பது போன்ற உணர்வு . பெரிய வீடு ஐந்தாறு அறைகள் , கூடம் , வாசல் , முன்கதவு , பின்கதவு என சத்திரம் போல இருக்கும் . வீட்டில் தனியா இருக்கவே பயமா இருக்கும் . அந்த நினைவுக்குள் சென்று விட்டேன் . அருமையான பகிர்வு ஐயா.

யுவராணி தமிழரசன் said...

சார் கொஞ்சம் பயம் நிறைய சுவாரஸ்யம்!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

அகிலா //

அழகாக சொன்னது படிக்கும் போது நானே அந்த வீட்டில் இருப்பது போல் தோன்றியது. அருமையான விவரிப்பு..

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

raji //

நீங்கள் இட்லி என்றாலும் தோசை என்றாலும் அது அதற்குரிய பதத்திற்கு தகுந்தாற் போல்
தயார் செய்யும் பதிவர் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

.துரைடேனியல் //

கடைசி வரி திகிலை மிகவும் அதிகரித்தது. எப்படியோ அற்புதமான அனுபவம் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. பகிர்வுக்கு நன்றி .//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

தனிமரம் //

நம்பிக்கையின் வெளிப்பாடும் ஆசைப்பட்டு கட்டிய வீட்டின் நினைவுகளையும் சேர்த்து அழகாய்ச் சொன்ன கதை பிடித்திருக்கின்றது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறீர்கள்.அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

நம்பிக்கைபாண்டியன் //.

நன்றாக நகர்கிறது கதை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

கதையின் ஓட்டத்தில் இப்படி நடக்குமா என்று இருந்தது. சிறு கதை போல உள்ளத் தங்கள் அனுபவம். நன்று..நன்று

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

மாலதி //

மிகசிறந்த ஆக்கங்களை தொடர்ந்து வழங்கும் ஐயா உமக்கு எமது பாராட்டுகளும் நன்றியும்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

கனவை சுவாரசியமாக பகிர்ந்துள்ளீர்கள் சார்....திகிலாகத் தான் இருந்தது.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

sasikala //

உண்மையோ , பதிவிர்க்காய் சொன்னதோ எதோ எதோ திகில் எனையும் ஒட்டிக்கொண்டது

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //

சார் கொஞ்சம் பயம் நிறைய சுவாரஸ்யம்!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

மாதேவி said...

வீட்டின் வர்ணனை கண்முன்னே கொண்டு வருகின்றது.

சிறந்த நடையில் சொல்லும் விதம் மனத்தை இழுத்து வைக்கின்றது.

குறையொன்றுமில்லை. said...

கவிதைதான் அழகாக எழுதுவீர்கள் என்று எண்ணி யிருந்தேன் கதையிலும் கல்லக்குரீங்க நல்ல சுவாரசியமான எழுத்துகள் ரசிக்க வைக்கின்றன வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

Marc said...

கதை அருமை வாழ்த்துகள்

Sankar Gurusamy said...

அழகான சிறப்பான சிறுகதை... பகிர்வுகு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

வெங்கட் நாகராஜ் said...

அழகான சிறுகதை.. வீட்டின் வர்ணனையும் அழகு...

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

Yaathoramani.blogspot.com said...

Sankar Gurusamy //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

Yaathoramani.blogspot.com said...

DhanaSekaran .S //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

Post a Comment