Thursday, August 1, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் அவல் 2 ( 1 ) சென்றபதிவின் தொடர்ச்சி


நிலவின் மங்கலான ஒளி லேசான குளிர்ந்த காற்று
மொட்டை மாடிச் சுகத்தைக் மேலும் கூட்டிக் கொண்டிருந்தது

நண்பனும் சுவாரஸ்யமாகத் தன் பேச்சைத் தொடர்ந்தான்

"சந்தியா காலங்கள் என்றாலே இரவும் பகலும்
பகலும் இரவும் சந்திக்கிற பொழுது என்பதுவும்
அந்த காலத்தில் செய்யப்படுகிற சூரியவந்தனம்
சந்தியாவந்தனம் என்பது அனைவருக்கும்
 தெரிந்ததுதானே

(அதனை காயத்திரி ஜெபம் எனச் சொன்னாலும்
அந்த ஜெபத்திற்கும் காயத்திரி தேவிக்கும்
 எந்த விதத்திலும் தொடர்பில்லை
என்பது வேறு விஷயம் )

முன்பின் போகாத ஊருக்குப் போனால் நமக்குத்
திசைக்குழப்பம் வருவது சகஜம்.அந்தக் காலத்தில்
ஒரு பிராமணன் எந்த ஊருக்குப் போனாலும்
காலையும் மாலையும் தவறாமல் சந்தியாவந்தனம்
செய்வதால் அவருக்கு திசைக் குழப்பம் வரச்
சந்தர்ப்பமே இல்லை

எப்படி அத்தனை ஜீவ ராசிகளும் உயிர் வாழ சூரியன்
அவசியமோ அதைப்போலவே அன்றைய
 நட்சத்திரம் திதிமுதலானவைகளைத்
 தெரிந்து கொள்ள முதலில்
கிழக்கு மேற்கு தெரிவது மிக மிக அவசியம்

கிழக்கு மேற்கு அறியும்போதே சூரியன்
 பயணிக்கும் நீள் வட்டப்பாதையும் அதில்தான்
 சந்திரனும் பயணிக்கும் என்பதுவும்
 உனக்கும் தெரிந்ததுதானே

இப்போது கிழக்கு மேற்கு தெரிந்துவிட்டால்
இன்று பிறையாகத் தெரிகிற சந்திரன் வளர்பிறையா
அல்லது தேய்பிறையா எனச் சொல்ல அதிகம்
மெனக்கெடவேண்டாம்

நிலவின் தேய்மானப் பகுதி
கிழக்கு நோக்கி இருந்தால் அது வளர்பிறை
தேய்மானப் பகுதி மேற்கு நோக்கி இருந்தால்
அது தேய்பிறை அவ்வளவுதான் " என்றான்

இப்படி எளிதாக வளர்பிறை தேய்பிறை
குறித்து அறிய முடிகிற நிலையில் அதனை
காலண்டரை  மட்டுமே பார்த்து சொல்லக்
கூடிய நிலையில்இத்தனை காலம் இருந்தது
 கொஞ்சம்அவமானமாகத்தான் இருந்தது

"சரி இப்போது நிலவைப்பார்த்துச் சொல்
இது வளர்பிறையா தேய்பிறையா எனச் சொல் "
என்றான நண்பன்

என் ஊர் ஆனதால் எனக்கு திசைக் குழப்பமில்லை
நிலவின் தேய்மானப் பகுதி கிழக்கு நோக்கி இருந்தது
எனவே சந்தேகமில்லாமல் "வளர்பிறை :என்றேன்

:மிகச் சரி ,இனி உனக்கு வளர்பிறை தேய்பிறை தெரிய
காலண்டர் தேவைப்படாது.அடுத்து திதி நட்சத்திரம்
குறித்தும் காலண்டர் இல்லாமல் அறிதல் எப்படி
எனச் சொல்லவா ? "என்றான் நண்பன்

நான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்தேன்

(தொடரும் )

28 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான புதுத்தகவல்கள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

கிழக்கு மேற்கு தெரிந்து, தினமும் பெரும்பாலும், சந்தியாவந்தனம் செய்துவரும் எனக்கே இது [அதாவது சந்திரனின் தேய்ந்த பாகம் கிழக்கு நோக்கியிருந்தால் வளர்பிறை, மேற்கு நோக்கியிருந்தால் தேய்பிறை] மிகவும் புதிய மற்றும் ஆச்சர்யமான தகவல்களாக உள்ளன.


>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அடுத்து திதி நட்சத்திரம் குறித்தும் காலண்டர் இல்லாமல் அறிதல் எப்படி எனச் சொல்லவா ? "என்றான் நண்பன்

நான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்தேன்//

நானும் அதே ஆவலுடன் நிமிர்ந்தே அமர்ந்துள்ளேன். தொடருங்கள்.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

எனக்கும் இதில் மிகவும் ஆர்வம் உண்டு ..

ஆகாயத்தைப்பார்த்து விட்டு காலண்டரில்
சரிபார்ப்பேன் .. பெரும்பாலும்
சரியாகத்தான் இருக்கும் ..!

தி.தமிழ் இளங்கோ said...

” சுத்த பஞ்சாங்கம் “ என்று அடுத்தவரை கேலி செய்பவர்களும் பஞ்சாங்கம் (காலண்டர்) பார்த்துத்தான் அமாவாசை, பௌர்ணமியை சொல்ல முடிகிறது. தேய்பிறை, வளர்பிறை பற்றி நீங்கள் சொன்னது புதுத்தகவல். முதலில் பிள்ளைகளுக்கு இதனைச் சொல்ல வேண்டும். கவிஞருக்கு நன்றி!

sathishsangkavi.blogspot.com said...

அறியாத புதிய தகவல்...

இளமதி said...

அருமை! இப்படியெல்லாம் இருக்கிறதா?
அறியத்தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா!

தொடருங்கள்...

த ம.4

கீதமஞ்சரி said...

வானசாத்திரத்தில் வல்லுநர்களாய் விளங்கியவர்கள் அல்லவா நம் இந்தியர்கள்! இன்று வளர்பிறையா தேய்பிறையா என்பதை திசையைக் கொண்டு அறியும் வித்தையைத் தங்கள் பதிவால் கற்றுக்கொண்டோம். தொடரட்டும் அறிவுபூர்வத் தகவல்கள்! நன்றி ரமணி சார்.

கோமதி அரசு said...

அருமையான தகவல்கள்.
பயனுள்ள தகவல்கள்.
நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

புதிய தகவல்! அடுத்த தகவலுக்கு ஆர்வமுடன் காத்திருக்கிறேன்! நன்றி!

சசிகலா said...

புதிய தகவலாக இருக்கே தொடருங்கள் ஐயா தொடர்கிறேன்.

மாதேவி said...

அருமையான தகவல்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான பதிவு.
அடுத்ததை எதிர் நோக்குகிறோம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தா.ம. 7

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் புதிய தகவலை அறிய ஆவலுடன் உள்ளேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

நிலவின் தேய்மானப் பகுதி
கிழக்கு நோக்கி இருந்தால் அது வளர்பிறை
தேய்மானப் பகுதி மேற்கு நோக்கி இருந்தால்
அது தேய்பிறை அவ்வளவுதான்
,,,,
வியப்பூட்டுகின்ற செய்தி ஐயா. எவ்வளவு எளிமையான வழி. நன்றி ஐயா.

Ranjani Narayanan said...

நாங்களும் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டோம்,உங்கள் பதிவிலிருந்து வான சாஸ்த்திரம் கற்றுக் கொள்ள.
தொடருங்கள்

சக்தி கல்வி மையம் said...

அறிய தகவல் ...தொடருங்கள்...

கவியாழி said...

எல்லா விஷயங்களையும் அலசி ஆராயும் உங்கள் திறமைக்கு நிகர் நீங்களேதான்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹலோ குரு........ டப்பு டப்புன்னு உங்க பதிவின் தடங்களை மாத்தி மாத்தி கலக்குறீங்க....!

வாழ்த்துக்கள்...!

திசை குழப்பம் எனக்கு நிறைய உண்டு......கன்னியாகுமரி தவிர வேறு எங்கு போனாலும் திசை எனக்கு தெரியவே தெரியாது.....

எங்க அம்மா மும்பை வந்தாங்கன்னா சரியா திசை, அமாவாசை, பௌர்னமி. தேய்பிறை வளர்பிறைன்னு சொல்லுவாங்க, நமக்குதான் ஒன்னும் புரியாது.

வெங்கட் நாகராஜ் said...

அரிய தகவல்கள்.....

புதிதாக ஒரு விஷயத்தினை தெரிந்து கொண்டேன். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....

த.ம. 11

G.M Balasubramaniam said...


தெரியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. தொடரை முடித்துவிட்டு சந்தேகங்கள் இருந்தால் தீர்ப்பீர்களா.?

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தெரியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. தொடரை முடித்துவிட்டு சந்தேகங்கள் இருந்தால் தீர்ப்பீர்களா.?//

நிச்சயமாக

சென்னை பித்தன் said...

தகவல் களஞ்சியம்

Anonymous said...

நிலவின் தேய்மானப் பகுதி
கிழக்கு நோக்கி இருந்தால் அது வளர்பிறை
தேய்மானப் பகுதி மேற்கு நோக்கி இருந்தால்
அது தேய்பிறை அவ்வளவுதான் " Nanry..
Vetha.Elangathilakam.

கதம்ப உணர்வுகள் said...

எப்போதும் புதிய புதிய கருத்துகளை கருவாக வைத்து நிறைய கவிதைகள் கொடுத்திருக்கீங்க ரமணி சார்.. நான் பலமுறை வியந்ததும் உண்டு.. எத்தனை ஆழ்ந்த சிந்தனை இது என்று.. எளிமையாகவே இருப்பது போல் இருக்கும் வரிகள்... ஆனால் அதில் நிறைய அர்த்தங்களும் கருத்துகளும் அடங்கி இருக்கும்.. கண்டுப்பிடிப்போருக்கும் புரியப்படும்போது கவிதை மிக ரசனையாக இருக்கும்....

இப்போது நீங்க எடுத்துக்கொண்ட மிக அற்புதமான விஷயம் இந்த தகவல்கள் வாசிக்கும்போது ஆச்சர்யமாகவும் நீங்க சொன்னது போல வானம் பார்த்து கிரஹிக்க தெரியாதவர்களில் நானும் ஒருத்தி என்பதால் எனக்கும் சங்கடமே...

அருமையான விஷயங்களை நல்லவைகளை தான் அறிந்ததை தான் மட்டுமே வைத்துக்கொள்ளாமல் அதை எல்லோருக்கும் பகிரும் அருமையான குணம் ரமணி சார் உங்களுக்கு.. தொடருங்கள்... தொடர்கிறோம்.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

நிலாமகள் said...

நம் முன்னோர்களின் அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது. வரும்தலைமுறைக்கும் பயனாகும் உங்க பதிவுகள். வாழ்த்துடன் நன்றியும்.

Balaji said...

அருமையான விஷயங்களை நல்லவைகளை தான் அறிந்ததை தான் மட்டுமே வைத்துக்கொள்ளாமல் அதை எல்லோருக்கும் பகிரும் அருமையான குணம் உங்களுக்கு.. தொடருங்கள்... தொடர்கிறோம்

Post a Comment