Saturday, August 17, 2013

எழுதுவது ஏன் ?

ஒலிகுறிப்பாய்ச்  சொன்னவரையில்
மிக நெருக்கமாய் இருந்த உணர்வுகள்
வார்த்தையானதும் மொழியானதும்
அன்னியப்பட்டுப் போனதால்

அகராதிக்குள் வராத
"அய்யய்யோ "சொல்கிற அவலமாய்
"ஆஹா "சொல்கிற வியப்பாய்
"அச்சச்சோ" சொல்கிற அதிர்ச்சியாய்
"க்க்கும்" சொல்கிற சிணுங்கலாய்

எந்த ஒரு வார்த்தையும்
எத்தனைப் பக்க விவரிப்பும்
மிகச் சரியாய்ச் சொல்லமுடியாது
தட்டுத் தடுமாறித் தத்தளிப்பதால்

அனுபவித்ததும்
உணர்ந்ததும்
சொல்ல நினைத்ததும்
சொன்னதும்
வெவ்வேறாகிப்போவதால்

ஒவ்வொரு படைப்பின் பின்னும்
பிண்டத்தைப் பெற்ற தாயாய்
கதிகலங்கிப் போகிறேன் நான்

ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே  எழுதுகிறேன் நான்

45 comments:

G.M Balasubramaniam said...


/அனுபவித்ததும்
உணர்ந்ததும்
சொல்ல நினைத்ததும்
சொன்னதும்/ சரியாகப் போய்ச் சேராததால்தான் , எதையோ சொல்ல நினைத்து எழுதுவதைவிட எதையாவது சொல்லி எழுதுவது நலமோ என்று பலமுறை நான் சிந்திப்பது உண்டு. இருந்தாலும் மனம் சொல்ல நினைப்பதுதான் எழுத்தில் வருகிறது. எனக்கும் இந்த வீழ்வது எழவே என்னும் எண்ணம் உண்டு. இந்த மாதிரி அனுபவம் எனக்கு மட்டுமல்ல என்று தெரியும் போது ஒரு அற்ப சந்தோஷம். மனம் கவர்ந்த எழுத்து, பாராட்டுக்கள்.

சக்தி கல்வி மையம் said...

ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே எழுதுகிறேன் நான்// பாராட்டுகள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒவ்வொரு படைப்பும் என்னை வீழ்த்தி விட்டே போவதால் காலமெல்லாம் எழுந்திடவே, எழுதுகிறேன் நான்//

உங்களுக்கே இப்படி என்றால், நாங்களெல்லாம் எம்மாத்திரம்?

கோமதி அரசு said...

ஒவ்வொரு படைப்பும் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

vimalanperali said...

படைப்புகளின் உலகமே தனிதான்.

கவியாழி said...

நிதர்சனமான உண்மையை நேர்த்தியாய் சொல்லிவிட்டீர்கள்.அததனையும் அற்புதம்

கரந்தை ஜெயக்குமார் said...

உங்கள் படைப்புகளுக்கு
நீங்களே போட்டி
காலமெல்லாம்
தொடருங்கள்

விச்சு said...

படைப்புகள் வீழ்த்திச்செல்கிறதா..! ரசித்து வாசித்தேன்.

Seeni said...

rasiththen..!

தி.தமிழ் இளங்கோ said...

// அனுபவித்ததும்
உணர்ந்ததும்
சொல்ல நினைத்ததும்
சொன்னதும்
வெவ்வேறாகிப்போவதால் //
உண்மைதான். சிலசமயம் நாமொன்று நினைத்து எழுத, பதிவு ஒன்றாக முடிந்து விடுகிறது.

RajalakshmiParamasivam said...

//ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே எழுதுகிறேன் நான்//

கவிஞருக்கே இப்படியென்றால் நாங்களெல்லாம் எம்மாத்திரம்!

Unknown said...

ஒவ்வொரு படைப்பும் உங்களை வீழ்த்தினாலும் ,எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது ...படிப்போர் நெஞ்சம் வாழ்த்துகிறது !தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி !
வேடந்தாங்கல் கருணின்'பெண்கள் ஏழு வகை 'பதிவுக்கு ...'ஏன் ஏழோடு நிறுத்தி விட்டீர்கள் ?அரை குறைகிறதே !'என்கிற என் பின்னூட்டத்தை ,அருமை என பாராட்டியதற்கும் நன்றி !

ராஜி said...

ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே எழுதுகிறேன் நான்
>>
உங்கள் படைப்பு எங்களையும் வீழ்த்துகிறதே !!

அம்பாளடியாள் said...

உண்மை தான் .எதை எழுதினாலும் எழுதும் போது உட்கருத்து நிறைவாக இருந்தால் தான் அது வாசகர்களுக்கும் பயனளிக்கும் ,மகிழ்வினைக் கொடுக்கும் .ஏனையவை எல்லாம் பயனற்றுப் போகும் பிண்டங்களே தான் .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் பதிவுகள் உங்களை மட்டுமல்ல எங்கள் மனதையும்தான் வீழ்த்தி விடுகிறது.
தொடரட்டும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த ம 6

Anonymous said...

விழுதலையும் எழுதலையும் தொடர்ந்து
செய்வோம் !

kowsy said...

வழங்கல் அனைத்தும் பிறர் வாழ்க்கைக்குக் கைகொடுக்குமானால் அது நிச்சயம் கருப்பைக்குள் பிண்டமாகி வெளியுலகில் வளம் வரும் உன்னத உயிரே. உங்கள் மனமென்னும் கருப்பை பெற்றெடுக்கும் மகத்தான செல்வங்களால் பலன் பெறுபவர் பல ஆயிரங்கள்

இளமதி said...

//ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே எழுதுகிறேன் நான்//

ஐயா!...
எழுதும் பொருளறிந்து உணர்ந்து அதற்குக் கிடைக்கும் மதிப்புக்கு இணை ஏதும் இல்லை.
உளம் அடையும் மகிழ்விற்கும் இல்லை எல்லை!
உங்கள் ஆதங்கம் புரிந்துகொண்டேன்.

வீழ்வது மாள்வதல்ல... தாழ்வுமல்ல!
வாழ்த்துக்கள் ஐயா! தொடருங்கள்...

த ம.7

தனிமரம் said...

வாழ்த்துக்கள் ஐயா!ரசித்தேன்.

Ranjani Narayanan said...

நீங்கள் தொடர்ந்து எழுதுவதை தொடர்ந்து படிக்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம்.
ஒரு படைப்பைவிட அடுத்த பதிவு இன்னும் சிறப்பாக வர வேண்டுமென்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறோம் இல்லையா? அந்த வீழ்ச்சி நிஜமான வீழ்ச்சி இல்லை. அடுத்த படைப்பு நன்றாக வரவேண்டுமே என்ற பொறுப்புணர்வு! இந்தப் பொறுப்புணர்வு இருந்தால் எல்லா படைப்புகளுமே சிறந்து இருக்கும்.

கே. பி. ஜனா... said...

// ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே எழுதுகிறேன் நான்//
ஆஹா! அற்புதம்!

Anonymous said...

ஓரு சில படைப்பே என்னை வீழ்த்துவதை நான் உணர்கிறேன்....
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

.G.M Balasubramaniam said...//

இந்த மாதிரி அனுபவம் எனக்கு மட்டுமல்ல என்று தெரியும் போது ஒரு அற்ப சந்தோஷம். மனம் கவர்ந்த எழுத்து, பாராட்டுக்கள்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருண் said...//
பாராட்டுகள்..

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//

உங்களுக்கே இப்படி என்றால், நாங்களெல்லாம் எம்மாத்திரம்?//

கம்பனின் அவையடக்கத்தை
நினைவுறுத்திப்போனது தங்கள் பின்னூட்டம்
வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...//

ஒவ்வொரு படைப்பும் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

விமலன் said..//.
படைப்புகளின் உலகமே தனிதான்.


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//////


Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் said..//.
நிதர்சனமான உண்மையை நேர்த்தியாய் சொல்லிவிட்டீர்கள்.அததனையும் அற்புதம்//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//
உங்கள் படைப்புகளுக்கு
நீங்களே போட்டி
காலமெல்லாம்
தொடருங்கள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி




Yaathoramani.blogspot.com said...

விச்சு said...//
படைப்புகள் வீழ்த்திச்செல்கிறதா..! ரசித்து
வாசித்தேன்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி




.

Yaathoramani.blogspot.com said...

Seeni said...
rasiththen..!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ said...//
/ //
உண்மைதான். சிலசமயம் நாமொன்று நினைத்து எழுத, பதிவு ஒன்றாக முடிந்து விடுகிறது. //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam said...
/
கவிஞருக்கே இப்படியென்றால் நாங்களெல்லாம் எம்மாத்திரம்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA said...//
ஒவ்வொரு படைப்பும் உங்களை வீழ்த்தினாலும் ,எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது ...படிப்போர் நெஞ்சம் வாழ்த்துகிறது !தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி !

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

ராஜி said...

>>
உங்கள் படைப்பு எங்களையும் வீழ்த்துகிறதே !/
/
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


!

Yaathoramani.blogspot.com said...

Ambal adiyal said..//.
உண்மை தான் .எதை எழுதினாலும் எழுதும் போது உட்கருத்து நிறைவாக இருந்தால் தான் அது வாசகர்களுக்கும் பயனளிக்கும் ,மகிழ்வினைக் கொடுக்கும் .ஏனையவை எல்லாம் பயனற்றுப் போகும் பிண்டங்களே தான் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN said..//.
உங்கள் பதிவுகள் உங்களை மட்டுமல்ல எங்கள் மனதையும்தான் வீழ்த்தி விடுகிறது.
தொடரட்டும்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி said...//
விழுதலையும் எழுதலையும் தொடர்ந்து
செய்வோம் !/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி said..//.
வழங்கல் அனைத்தும் பிறர் வாழ்க்கைக்குக் கைகொடுக்குமானால் அது நிச்சயம் கருப்பைக்குள் பிண்டமாகி வெளியுலகில் வளம் வரும் உன்னத உயிரே. உங்கள் மனமென்னும் கருப்பை பெற்றெடுக்கும் மகத்தான செல்வங்களால் பலன் பெறுபவர் பல ஆயிரங்கள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

இளமதி said...
//ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே எழுதுகிறேன் நான்//

ஐயா!...
எழுதும் பொருளறிந்து உணர்ந்து அதற்குக் கிடைக்கும் மதிப்புக்கு இணை ஏதும் இல்லை.
உளம் அடையும் மகிழ்விற்கும் இல்லை எல்லை!
உங்கள் ஆதங்கம் புரிந்துகொண்டேன்.

வீழ்வது மாள்வதல்ல... தாழ்வுமல்ல!
வாழ்த்துக்கள் ஐயா! தொடருங்கள்...//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

தனிமரம் said...
வாழ்த்துக்கள் ஐயா!ரசித்தேன்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/////


Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan said...
நீங்கள் தொடர்ந்து எழுதுவதை தொடர்ந்து படிக்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம்.
ஒரு படைப்பைவிட அடுத்த பதிவு இன்னும் சிறப்பாக வர வேண்டுமென்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறோம் இல்லையா? அந்த வீழ்ச்சி நிஜமான வீழ்ச்சி இல்லை. அடுத்த படைப்பு நன்றாக வரவேண்டுமே என்ற பொறுப்புணர்வு! இந்தப் பொறுப்புணர்வு இருந்தால் எல்லா படைப்புகளுமே சிறந்து இருக்கும். //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... said...//
// ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே எழுதுகிறேன் நான்//
ஆஹா! அற்புதம்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi said...
ஓரு சில படைப்பே என்னை வீழ்த்துவதை நான் உணர்கிறேன்..../

/மனந்திறந்த பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி




Post a Comment