Wednesday, August 21, 2013

பயனுள்ள பொய் உயர்வானதே

திசைகள் என்பதுவும் கற்பனையே
வானம் என்பது வெட்டவெளியே
கதிரவன் உதிப்பது கிழக்கு எனவும்
தினமும் மறைவது மேற்கில் எனவும்
நாமாக வகுத்துக் கொண்டதெல்லாம்
பகுத்தறிவு நோக்கில் உற்றுப் பார்க்க
பட்டப்பகல் பித்தலாட்டமே

ஆயினும் என்ன செய்ய
அந்தப் பித்தலாட்ட திசைக்குறிகளின்றி
பூமியில் வாழ்க்கை நொண்டியாட்டமே

அட்சாம்சம் என்பதும் கற்பனையே
அது நாமாக வரைந்திட்ட கோடுகளே
படுக்கைக் கோடுகள் அட்சரேகையென்றும்
செங்குத்துக் கோடுகள் தீர்க்கரேகையென்றும்
நாமாக வரைந்து கொண்டதெல்லாம்
பாமரனின் நோக்கில் பார்க்க
படித்தவனின் ஏமாற்றுவேலையே

ஆயினும் என்ன சொல்ல
அந்தக் கற்பனைக் கோடுகளின்றி
ஊர்உலகை அறிதல் திண்டாட்டமே

அந்தவகையில்

ஆண்டவன் கூடக் கற்பனையே
நாமாக ஆக்கிவைத்த அற்புதமே
அவன்தான் உலகைப் படைத்தானென்றும்
அவன்தான் அதனைக் காக்கிறானென்றும்
ஆத்திகவாதிகள் சொல்லித் திரிவதெல்லாம்
நாத்திகவாதிகள் நோக்கில் பார்க்க
பகல்வேஷக்காரனின் பொய்ப்புலம்பலே

புலம்பலது பொய்யென க்கொண் டால்கூட
இல்லையென்ற எதிர்மறையைவிட
இருக்குதென்ற நேர்மறை உயர்வானதுதானே
பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே

38 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இல்லையென்ற எதிர்மறையைவிட இருக்குதென்ற நேர்மறை உயர்வானதுதானே//

ஆம். நேர்மறை மட்டும் தான் என்றும் உயர்வானது.

சீராளன்.வீ said...

புலம்பலது பொய்யே ஆயினும்
இல்லையென்ற எதிர்மறையைவிட
இருக்குதென்ற நேர்மறை உயர்வானதுதானே
பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே

எதிர்மறை வாதங்கள்
இன்றைய தேவைகளோடு
எளிமையாய் இதயத்தில்
இறக்கிப்போகிறது
ஆழமாயும் அவசியமாயும்...!

அழகிய கவிதை வாழ்த்துக்கள்
2

திண்டுக்கல் தனபாலன் said...

இருக்குதென்ற நேர்மறை உயர்வானது தான்...

சிந்தனை வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...

K said...

பொய்யாக இருந்தாலும் அது பயன்மிக்கதாக இருந்தால், தவறே இல்லை!!

அருமையான கவிதை சார்!

இளமதி said...

ஐயா.. அருமையாகச் சொன்னீர்கள்!

//இல்லையென்ற எதிர்மறையைவிட
இருக்குதென்ற நேர்மறை உயர்வானதுதானே
பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வே...//

பொய், பயனற்றவை இவை என்று தெரிந்து கொண்டும் நடிக்கின்றோம் நாமெல்லாம்.
அதுவும் உண்மை.
அதிலும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் நடிப்பாக...

அம்பாளடியாள் said...

உலகமே ஒரு நாடக மேடை இதில் பயனற்ற உண்மைகளை விட பயனுள்ள பொய் நியாயமானது தான் ஐயா .பாராட்டுக்கள் சிறப்பான சிந்தனைக்கு .

ராஜி said...

ஆண்டவன் கூடக் கற்பனையே
>>
அப்படி இருந்துட்டா இருக்குற கொஞ்சம் நஞ்சம் ஒழுங்கு கூட மக்கள்கிட்ட இல்லாம போகும்!!

அகலிக‌ன் said...

பொய்யையோ மெய்யையோ அனுபவங்கள் மட்டுமே மெய்பித்திருக்கின்றன.நிஜமாய் கண்டவர்கள் விலகிவிடுகின்றனர். கண்டதாய் விண்டவர்கள் பொய்யை விற்கின்றனர்.வாங்கியவர்கள் வாங்கிவிட்டதாலேயே மெய்யென பரப்புகின்றனர்.

கவியாழி said...

பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே///உண்மையே

Anonymous said...

நியாயம் தான்.
கடவுள் என்பதே நேர்மறை சக்தி தான்.

vimalanperali said...

கோடுகள் விஞ்ஞானம் தரித்த அற்புதம்,அதை மீறி இங்கு எதுவும் இல்லை,உதாரணம் நம் சமகாலத்தில் நடந்த சுனாமி.கடலோடு பிறந்து கடலுடனேயே உறவு கொண்டு வாழ்ந்த கடலின் மக்களையே கிலிகொள்ளச்செய்த நிகழ்வாய்/

G.M Balasubramaniam said...


படித்துக் கொண்டே வரும்போது பொய் எது மெய் எது என்பதே கேள்விக்குறியாய்த் தெரிகிறது.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

கற்பனைக் கோடுகள் காட்டும் கணக்கன்றோ
நற்றுணை நல்கும் நமக்கு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

தமிழ்மணம் 6

மகேந்திரன் said...

உண்மையற்ற உண்மையை விட
பொய்கள் எவ்வளவோ மேல் தான் ஐயா...
கற்பனைகள் எவ்வளவு அவசியம்
அவசியமான கற்பனைகள் நம்மை எவ்வளவு தூரம்
கட்டுக்குள் வைத்திருக்கிறது...
பல நேரங்களில் கற்பனைப் பொய்கள்
அவசியமாகிப் போகின்றன..
அருமையான ஆக்கம் ஐயா..

Anonymous said...

''..பித்தலாட்ட திசைக்குறிகளின்றி
பூமியில் வாழ்க்கை நொண்டியாட்டமே...
அப்படியொரு வாழ்வைப் பழகி அதுவே நிசம், அவையின்றி வாழ்வில்லையெனும் மயையின் வாழ்விது.
பொய்யென்று அறிந்தும் பொய்யாக வாழ்கிறோம்.
மிக நல்ல சிந்தனையோட்டம்.
வளரட்டும்! வாழ்க!
வேதா. இலங்காதிலகம்.

அ. வேல்முருகன் said...

கேட்பதற்கு இனிமையா இருக்கிறது
நரேந்திர தபோல்கரின் மரணம் இனிமையாக இருக்குமா?

மரணம் வேண்டாமென்றால்
பொய்யை புன்னகையோடு ஏற்றுக் கொள் என்று நாசுக்காக சொல்லியுள்ளீர்கள்

சரிதானே?

குட்டன்ஜி said...

பொய்மையும் வாய்மையிடத்த!
த.ம.8

காரஞ்சன் சிந்தனைகள் said...

//பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே//

அருமையாகச் சொன்னீர்கள்! நன்றி!

அப்பாதுரை said...

புலம்பலில் நேர்மை :)

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said..//.
/
ஆம். நேர்மறை மட்டும் தான் என்றும் உயர்வானது.

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சீராளன் said...
//
எதிர்மறை வாதங்கள்
இன்றைய தேவைகளோடு
எளிமையாய் இதயத்தில்
இறக்கிப்போகிறது
ஆழமாயும் அவசியமாயும்...!

அழகிய கவிதை வாழ்த்துக்கள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...
இருக்குதென்ற நேர்மறை உயர்வானது தான்...
சிந்தனை வரிகள் அருமை... வாழ்த்துக்கள்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


/

Yaathoramani.blogspot.com said...

MaaththiYosi Jeevan said...
பொய்யாக இருந்தாலும் அது பயன்மிக்கதாக இருந்தால், தவறே இல்லை!!
அருமையான கவிதை சார்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

இளமதி said...//
ஐயா.. அருமையாகச் சொன்னீர்கள்!

...//பொய், பயனற்றவை இவை என்று தெரிந்து கொண்டும் நடிக்கின்றோம் நாமெல்லாம்.
அதுவும் உண்மை.
அதிலும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் நடிப்பாக...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

Ambal adiyal said..//.
உலகமே ஒரு நாடக மேடை இதில் பயனற்ற உண்மைகளை விட பயனுள்ள பொய் நியாயமானது தான் ஐயா .பாராட்டுக்கள் சிறப்பான சிந்தனைக்கு/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

ராஜி said...
ஆண்டவன் கூடக் கற்பனையே
>>அப்படி இருந்துட்டா இருக்குற கொஞ்சம் நஞ்சம் ஒழுங்கு கூட மக்கள்கிட்ட இல்லாம போகும்!//

கறபனையானால் கூட தேவையான கற்பனை
என்வே சொல்ல முயன்றிருக்கிறே

ன்தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அகலிக‌ன் said...//
பொய்யையோ மெய்யையோ அனுபவங்கள் மட்டுமே மெய்பித்திருக்கின்றன.நிஜமாய் கண்டவர்கள் விலகிவிடுகின்றனர். கண்டதாய் விண்டவர்கள் பொய்யை விற்கின்றனர்.வாங்கியவர்கள் வாங்கிவிட்டதாலேயே மெய்யென பரப்புகின்றனர்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந் தநன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் said...
பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே///உண்மையே//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந் தநன்றி


Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி said..//.
நியாயம் தான்.
கடவுள் என்பதே நேர்மறை சக்தி தான்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந் தநன்றி //


Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...//

படித்துக் கொண்டே வரும்போது பொய் எது மெய் எது என்பதே கேள்விக்குறியாய்த் தெரிகிறது./

/தங்கள் பின்னூட்டத்திலிருந்து இன்னும்
சரியாகச் சொல்லி இருக்கலாம என
உணர்கிறேன்.வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

கி. பாரதிதாசன் கவிஞா் said...
வணக்கம்!
கற்பனைக் கோடுகள் காட்டும் கணக்கன்றோ
நற்றுணை நல்கும் நமக்கு!//


அருமையாக என் கருத்தை அறிந்து
பின்னூட்டமிட்டது மனதிற்கு அதிக
மகிழ்வாய் உள்ளது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் said...
உண்மையற்ற உண்மையை விட
பொய்கள் எவ்வளவோ மேல் தான் ஐயா...
கற்பனைகள் எவ்வளவு அவசியம்
அவசியமான கற்பனைகள் நம்மை எவ்வளவு தூரம்
கட்டுக்குள் வைத்திருக்கிறது...
பல நேரங்களில் கற்பனைப் பொய்கள்
அவசியமாகிப் போகின்றன..
அருமையான ஆக்கம் //

அருமையாக என் கருத்தை அறிந்து
பின்னூட்டமிட்டது மனதிற்கு அதிக
மகிழ்வாய் உள்ளது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi said...
''..பித்தலாட்ட திசைக்குறிகளின்றி
பூமியில் வாழ்க்கை நொண்டியாட்டமே...
அப்படியொரு வாழ்வைப் பழகி அதுவே நிசம், அவையின்றி வாழ்வில்லையெனும் மயையின் வாழ்விது.
பொய்யென்று அறிந்தும் பொய்யாக வாழ்கிறோம்.
மிக நல்ல சிந்தனையோட்டம்.
வளரட்டும்! வாழ்க//!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந் தநன்றி

Yaathoramani.blogspot.com said...

அ. வேல்முருகன் said..//

சிந்திக்கத் தூண்டிய பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி


.

Yaathoramani.blogspot.com said...

குட்டன் said...//
பொய்மையும் வாய்மையிடத்த!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s. said...
//பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே//
அருமையாகச் சொன்னீர்கள்! நன்றி!//

தங்கள் வரவும் வாழ்த்தும் அதிக மகிழ்வளிக்கிறது
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை said...
புலம்பலில் நேர்மை :)//


தங்கள் வரவும் வாழ்த்தும் அதிக மகிழ்வளிக்கிறது
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment