Tuesday, March 22, 2016

ஆத்திக நாத்திக வாதம்.

சுவையது குறித்தும்
சுகமது  குறித்தும்
காராசாரமாக
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
"அவர்கள் "

வாயிலிருந்த
மைசூர் பாகின்
சுவையில்
அது தந்த சுகத்தில்
மெய்மறந்துக் கிடந்தேன் நான்

விவாதம் விட்டு நான்
ஒதுங்கி இருந்த  எரிச்சலில்
"இரசனை கெட்ட ஜென்மமா நீ
உனக்கு சுகம் குறித்தும்
சுவை குறித்தும்
கருத்தே கிடையாதா " என்றனர்
எரிச்சலுடன்

நான் சிரித்தப்படிச் சொன்னேன்
"சுவையும் சுகமும்
விவாதப் பொருளாகப் படவில்லை"
எனச் சொல்லி
மற்றொரு விள்ளலை
எடுத்து வாயில் போட்டுக் கொண்டு
மெல்ல இமை மூடத் துவங்கினேன்

அவர்கள் விழிகளில்
கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

10 comments:

KILLERGEE Devakottai said...
This comment has been removed by the author.
KILLERGEE Devakottai said...

ஹாஹாஹா அருமை கவிஞரே ரசித்தேன்

G.M Balasubramaniam said...

எதையும் நேர்படச் சொல்லலாமே சுவை சுகம் இதில் எது ஆத்திகம் எது நாத்திகம்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"சுவையும் சுகமும் விவாதப் பொருளாகப் படவில்லை"//

கரெக்ட். அவை அனுபவித்து உணரப்பட வேண்டியவைகள் மட்டுமே. நீங்கள் செய்த செயலே அதன் சுகானுபவங்களை நன்கு அனுபவிக்கவும் உணரவும் வைக்கக்கூடியது. பகிர்வுக்கு நன்றிகள்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு! - பலர்
கஞ்சிக் கில்லாத கவலை போக்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு! - ப.கோ.க.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

சில விஷயங்கள் சொல்லுக் கடங்காதவை
அனுபவித்து மட்டுமே அறியத் தக்கவை
அவரவர் அனுபவம் பொறுத்து அதன் சுகமும்
சுவையும் கூடும் குறையும்.ஏனெனில்
அது அனுபவிப்பவனைச் சார்ந்தது
எனச் சொல்ல முயன்றிருக்கிறேன்.
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை ஐயா.

Unknown said...

சுவையும்,சுகமும் அனுபவிக்க வேண்டும், ஆராயப்படாது.. அது சரி, மொத்தத்தையும் சாப்பிட்டு விட்டீரோ!

Unknown said...

சுவையும்,சுகமும் அனுபவிக்க வேண்டும், ஆராயப்படாது.. அது சரி, மொத்தத்தையும் சாப்பிட்டு விட்டீரோ!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுவை குறித்து அறியாதவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மைசூர் பாக்கின் மூலம் சொல்லி விட்டீர்கள்

Post a Comment