அப்துல் காதருக்கும்
அமாவாசைக்கும்
முதல் எழுத்துச் சம்பந்தமன்றி
வேறேதும் சம்பந்தமில்லை என்பது
எனக்கும் உடன்பாடுதான்
ஆயினும்
கணியன் பூங்குன்றனாருக்கும்
கணினிக்கும்
முதல் இரண்டெழுத்து மட்டுமே சம்பந்தம்
என ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
ஏனெனில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனக் கவிதையாக
கணியன்
அன்று சொல்லிப் போனதை
கணினி தானே
மிக எளிதாய்
இன்று சாத்தியமாக்கிப் போகிறது ?
அமாவாசைக்கும்
முதல் எழுத்துச் சம்பந்தமன்றி
வேறேதும் சம்பந்தமில்லை என்பது
எனக்கும் உடன்பாடுதான்
ஆயினும்
கணியன் பூங்குன்றனாருக்கும்
கணினிக்கும்
முதல் இரண்டெழுத்து மட்டுமே சம்பந்தம்
என ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
ஏனெனில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனக் கவிதையாக
கணியன்
அன்று சொல்லிப் போனதை
கணினி தானே
மிக எளிதாய்
இன்று சாத்தியமாக்கிப் போகிறது ?
9 comments:
ரசிக்கும்படியாக உள்ள பதிவு. மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியதும்கூட.
தங்களின் இந்த சிந்தனைக்குப் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
உண்மைதான். ஏற்றுக்கொள்கிறோம்.
அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் இருக்கு என்பதே உண்மை!
அமாவாசை என்றைக்குன்னு அவருக்குத் தெரிஞ்சால்தானே அடுத்த மூணாம்நாள் பிறை பார்க்கமுடியும். இல்லையோ?
கணினி வந்த பிறகு உலகமே நம் கைக்குள் என்றாகி விட்டது உண்மை....
த.ம. +1
உண்மை
உண்மை
அருமை ஐயா
நன்றி
அட, ஆமாம்... விரல் நுனியில் உலகம் சுழற்றும் வித்தையை அன்றே கற்றுக்கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாரே...
ஆஹா என்ன ஒரு ஒப்புமை.வாழ்த்துக்கள்
சிந்திக்கச் சிறந்த பாவரிகள்
Post a Comment