Thursday, March 3, 2016

வாழும் வகையறிந்து....

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்

அதில்
நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய்ப்  பயணித்துக்கொண்டிருக்க ...

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தை
படகின் வேகத்தை
இதற்கு முன் நடந்த விபத்தை
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்

உல்லாசமாக
இரசித்துப்
பயணம் செய்வதற்கு
அது அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

10 comments:

ஸ்ரீராம். said...

இல்லை, ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையாவது வேண்டும்!!

RAMJI said...

நல்ல நடை நல்ல கருத்து வாழ்க வளமுடன்

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படகில் உல்லாசமாக இரசித்துப் பயணம் செய்வதற்கு நீச்சல் அவசியம் தெரிந்திருக்கவேண்டும். உண்மைதான்.

இதை நான் கொச்சினில் கடலில் படகில் பயணம் செய்தபோது அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.

KILLERGEE Devakottai said...

வேறு பாடுகள் உள்ள கருத்துகள் சொன்ன விதம் அருமை கவிஞரே
தமிழ் மணம் 4

G.M Balasubramaniam said...

கொடைக்கானல் ஏரியில் நாங்கள் படகில் செல்ல முற்பட்ட போது சிறிது தூரம் சென்றதுமே ஒரு நண்பர் அவரைக் கரையில் விடச் சொல்லி வேண்டினார் அவருக்கு நீரில் மூழ்கி இறந்த ஒரு நண்பரின் நினைவு வந்து விட்டது. நான் என் தளத்தில் ஒரு பதிவே எழுதி இருந்தேன்

MANO நாஞ்சில் மனோ said...

பயத்தை முன்னால் வைத்துவிட்டு ரசிப்பு வருமாக்கும் ?

காரையார் டேமில் படகு பயணம் செய்தபோது, நாம் இப்போது இருக்கும் இடம் அறுபது அடி ஆழம்ன்னு படகோட்டி சொன்னார், நீச்சல் தெரிஞ்சிருந்தாலும் எனக்கு கால்கள் தானாக டிங் டிங் டிங்...

வெங்கட் நாகராஜ் said...

பயம் இருந்தால் ரசிக்க முடியாது.....

நாம் கரை சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையாவது வேண்டும்!

கீதமஞ்சரி said...

எண்ணித் துணியவேண்டும். துணிந்தபின் எண்ணுவது... இழுக்கன்றோ...

Thulasidharan V Thillaiakathu said...

நம்பிக்கை இருந்தால் அதுவே போதுமே! பயமிருந்தால் பயணத்தை ரசிக்க முடியாதே

Post a Comment