Wednesday, March 16, 2016

இறுக்க நெருக்கம் யாருடன் இருக்கும் ?

இரவுக்கும் இருளுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
இரவுக்கும் உறவுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

நிலவுக்கும் இரவுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ? -இல்லை
நிலவுக்கும் மலருக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

மனதிற்கும் நினைவிற்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
மனதிற்கும் கனவிற்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

சொல்லுக்கும் எழுத்துக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
சொல்லுக்கும் பொருளுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

கவிதைக்கும் உணர்வுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
கவிதைக்கும் கவிஞர்க்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

11 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

உங்களுக்கும் கவிதைக்கும் இருக்கும் நெருக்கம் இறுக்கமே.... பாராட்டுகள் ஐயா

செந்தழல் செ சேதுபதி said...

கவிதை அருமை ஐயா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இறுக்க நெருக்கம் யாருடன் இருக்கும் ?

சொல்லாலும் பொருளாலும், வாசகர்கள் நெஞ்சை இறுக்கிப்பிடிக்கும் தங்களைப்போன்ற தங்கமான எழுத்தாளர்களிடம் மட்டுமே இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமே இல்லை.

சந்தோஷம் மட்டுமே. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

KILLERGEE Devakottai said...

கவிதையை ரசித்தேன் கவிஞரே

ஸ்ரீமலையப்பன் said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! மிகவும் ரசித்தோம்...

V Mawley said...

Every question is very thought-provoking...fantastic..Congrats..

Mawley

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
கவிதைக்கும் உணர்வுக்குமே நெருக்கம் அதிகம் எனஎண்ணுகின்றேன்

Unknown said...

தங்களுக்கும்எனக்கும் உள்ள நட்பின் இறுக்கமே முக்கியமானது

Unknown said...

தங்களுக்கும்எனக்கும் உள்ள நட்பின் இறுக்கமே முக்கியமானது

Post a Comment