Wednesday, July 12, 2017

உடல் மொழி

"கொஞ்சம் அறிகுறி
தெரிகையிலேயே
அழைத்து வந்திருக்கலாமே
இப்படியா நோயை முற்றவிட்டு..."

அவ நம்பிக்கையில்
உதடு பிதுக்கினார் மருத்துவர்

"அவனுக்குத் தெரியலையே டாக்டர்
நாங்கள்தான் கண் இத்தனை
மஞ்சளாயிருக்கிறதே என
சந்தேகப்பட்டு...."வார்த்தைகளை
மென்று விழுங்கினார் தந்தை

சோர்வாய் மெல்லச் சிணுங்கி
அடி வயிற்றில்
மிக லேசாய் வலி கூட்டி
பின் பசியடக்கி
சிறு நீரின் நிறம் மாற்றி
பின் கண்களுக்கு அதை மாற்றி
உடல் பேசிய வார்த்தைகள் எதையும்
புரியும் அறிவில்லாததால்
நோய் முற்ற
ஒடுங்கி அடங்கிக் கிடந்தான் அவன்

அறிய வேண்டிய
ஆதார மொழியினை முதலில்
அறியப் பயிலாது

தாய் மொழி நீங்கலாய்
நான்கு மொழிகள் அதிகம் அறிந்திருந்த
அந்த மெத்தப் படித்த மடையன்

9 comments:

Unknown said...

#மெத்தப் படித்த மடையன்#
இவனை விட படிக்காத மேதையே மேல் :)

ஸ்ரீராம். said...

பதிவு சொல்லும் 'சொல்லாத விஷயம்' புரிகிறது.

வெங்கட் நாகராஜ் said...

தாய் மொழி நீங்கலாய்....

ம்ம்ம். மற்ற மொழிகள் மட்டுமே தெரிந்திருந்தால் போதும் என நினைக்கிறார்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

முட்டாள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாய்மொழியின் முக்கியத்துவம் புரிகிறது.

கோமதி அரசு said...

அருமை

Unknown said...

தண்டணை!தாய் மொழிதன்னை மறந்த தாலே!

Yarlpavanan said...

தாய் மொழியை மறந்தால்
தன் அடையாளம் இழப்பதாகும்

G.M Balasubramaniam said...

மொழி மறக்காவிட்டாலும் நோய் பற்றிய அறிவே இல்லை யென்றால் ..... நோயைத் தெரிவிக்க மொழி மட்டும் போதுமா / பதிவு சொல்லும் சொல்லாத விஷயம் இருந்தென்ன வாசிப்பவருக்கு புரிய வேண்டாமா

Post a Comment