நாத்திகன் மீண்டும்......
"எனக்கே கேட்கச் சங்கடமாகத்தான் உள்ளது
பாற்கடலாம்
பாம்புப் படுக்கையாம்
சகலத்தையும் வெல்லும் சக்ராயுதமாம்
ஒருக்களித்துப் படுத்திருக்க
அருகில் பக்கத் துணையாய்
செல்வத்திற்கு அதிபதியாம்\
இவர்தான் காக்கும்கடவுளாம்
ஒன்றுக்கொன்று
ஏதாவது சம்பந்தமிருக்கிறதா
நீயே சொல் " என்றான்
ஆத்திகன் இப்படி ஆரம்பித்தான்
"உதவிடவென்றே
எப்போதும் எழுந்தோட ஏதுவாய்
தளர்ந்த நிலையில் இருப்பவனும்
அவசியமெனில்
தீமையினை அழித்தொழிக்கத்தக்க
வல்லமை மிக்கவனாய் இருப்பவனும்
மாறாக் கருணையையும்
குறையாத செல்வத்தையும்
எப்போதும் தன்னருகே
துணயாகக் கொண்டிருப்பவனும்தானே
என்றென்றும் உதவிக்கென
நாம் அண்டத் தக்கவனாகவோ
நம்மைக் காக்கத் தக்கவனாகவோ
இருக்க முடியும்
நான் திருமாலை மட்டும் சொல்லவில்லை
காப்பவனுக்குரிய
தகுதியையும் சொல்கிறேன் "என்றான்
"எனக்கே கேட்கச் சங்கடமாகத்தான் உள்ளது
பாற்கடலாம்
பாம்புப் படுக்கையாம்
சகலத்தையும் வெல்லும் சக்ராயுதமாம்
ஒருக்களித்துப் படுத்திருக்க
அருகில் பக்கத் துணையாய்
செல்வத்திற்கு அதிபதியாம்\
இவர்தான் காக்கும்கடவுளாம்
ஒன்றுக்கொன்று
ஏதாவது சம்பந்தமிருக்கிறதா
நீயே சொல் " என்றான்
ஆத்திகன் இப்படி ஆரம்பித்தான்
"உதவிடவென்றே
எப்போதும் எழுந்தோட ஏதுவாய்
தளர்ந்த நிலையில் இருப்பவனும்
அவசியமெனில்
தீமையினை அழித்தொழிக்கத்தக்க
வல்லமை மிக்கவனாய் இருப்பவனும்
மாறாக் கருணையையும்
குறையாத செல்வத்தையும்
எப்போதும் தன்னருகே
துணயாகக் கொண்டிருப்பவனும்தானே
என்றென்றும் உதவிக்கென
நாம் அண்டத் தக்கவனாகவோ
நம்மைக் காக்கத் தக்கவனாகவோ
இருக்க முடியும்
நான் திருமாலை மட்டும் சொல்லவில்லை
காப்பவனுக்குரிய
தகுதியையும் சொல்கிறேன் "என்றான்
54 comments:
என்றும் உதவிக்கென் அண்டத்தக்கவனாகவும் நம்மைக் காக்கத் தக்கவனாகவும்... சரியான தகுதிகள் தான். ஆத்திக நாத்திக உரையாடல் பொக்கிஷம் போல நல்ல விஷயங்களை அள்ளித் தருகிறது. தொடரட்டும்.
பெற்றோர் ,உயிர் காக்கும் மருத்துவர் முதல் அவசர காலத்தில்
நமக்கு உதவி புரிந்து காப்பவர் அனைவரும் காக்கும் கடவுளர்களே.
முதலில் நம் முயற்சி முக்கால் பங்கு .. நற் பயன் என்ற முடிவைத் தர
இறைவன் கால் பங்கு என்ற விகிதாச்சாரமே சரியான ஒரு சிறந்த இக்கலியுக
ஆத்திகக் கொள்கையாக இருக்க முடியும் .
கடவுளரின் பருப்பொருளான உருவங்களை மிகச் சரியான
நற்பண்புகளுடன் பொருத்திப் பார்த்து புரிந்து கொண்டு
விளக்கி இருப்பது மிகவும் அருமை.
காப்பவனுக்குரிய தகுதியை நன்றாகச் சொன்னீர்கள்..
இவை அனைத்தும் தன்னகத்தே இருந்தும் செய்யாத்தால் அவச்சொல் சுமக்கிறார் நம் தலைவர்!
நன்று..வாழ்த்துக்கள்!
மிகவும் உண்மை ரமணி அவர்களே!
நம்மால் கடவுளை பார்க்கமுடியாது.ஆனால் மற்றவர்களுக்கு காண்பிக்க முடியும்.பசியில் வாடி,ஆதரவு அற்று தெருவில் நிற்கும் ஒரு வறிய மூதாட்டியிடம் ,ஒரு பத்து ரூபா தாளை கொடுத்து பாருங்கள்..அவர் உங்களை கடவுளாக பார்ப்பார்.
ஏன், நீங்கள் ஒரு சமயம், ரயில் பயணத்தில், ஒரு திக்கற்ற பெண்ணுக்கு அவள் கேட்காமலேயே உணவளித்து, அவளுக்கு கடவுளாக காட்சி தர வில்லையா என்ன?
"பல நூல் படித்து நீ அறியும் கல்வி,
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்,
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்,
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"
எனும் வ(ா)லி-மையான வரிகள், சத்தியமல்லவா?
பொய்யே எங்கும் வியாபித்துள்ள இக்காலத்தில், உண்மையை நாசூக்காக ஊட்டிவிடும் உங்கள் எழுத்துக்கு, நான் தலை வணங்கி, நன்றி கூறுகிறேன்.
//இவை அனைத்தும் தன்னகத்தே இருந்தும் செய்யாததால் அவச்சொல் சுமக்கிறார் நம் தலைவர்!//
நண்பர் ரமேஷ் வெங்கடபதி அவர்களே ...
அலுவலகத்திலிருந்து மாலை வீடு திரும்பும்போது,பொம்மை வாங்கி வருகிறேன் என கூறிச்சென்ற தந்தை ,இரவு வெறும் கையோடு வீடு திரும்பும் போது, மனம் ஒடிந்து ,
அவர் மேல் கோபம கொள்கிறது அவரின் செல்ல குழந்தை.அவர் சொல்லும் உண்மையான காரணங்களை புரிந்து கொள்ளும் வயதா அதற்கு?
ஆனால் அடுத்த நாளே, அவர் ஒன்றுக்கு இரண்டு பொம்மைகள் வாங்கி வரும்போது, அதே குழந்தை, மகிழ்ச்சி பொங்க, அவரை அணைத்து கொஞ்சுகிறது !
இந்த பிரபஞ்சத்தில் நாம் என்றும் குழந்தைகள்!
மேலும் நம் "தந்தை"க்கு ஒரு நாள் என்பது, நமக்கு பல நூறு ஆண்டுகள்!
உண்மையென்னவென்றால் எனக்கு உங்கள் கவிதைகள் புரியவில்லை. எவ்வளவோ கவிதைகளை படித்தவன் என்றாலும் எத்தனையோ தமிழ் இலக்கிய நூல்களைக்கற்றவன் என்றாலும்.
”எப்போதும் எழுந்தோட” தளர்ந்த நிலை எப்படி ஏதுவாகுமென்று புரியவில்லை. ‘அவசியமெனில்’ தீமையளிக்க” என்பதும் புரியவில்லை.
அஃதென்ன அவசியமெனில்? தீமையென்றாலே அழிக்கத்தானே செய்வார்கள்? தீமையையழிக்க அவசியமொன்று தேவையா?
தளர்ந்த நிலை, குறையாச் செல்வம், மாறாக்கருணை, வலிமை – இவை நீங்கள் கடவுளுக்கு வைக்கும் கலியாண குணங்கள். இவை மனிதருக்கு ஒத்துவரும், அதிலும் கூட ‘தளர்ந்த நிலை’ வராது. ஆனால், மனிதரின் பார்வையின்படியே இறைவன் படைக்கப்படுகிறான்; அல்லது இறைவுருவம் படைக்கப்படுகிற்தென்றால், நீங்கள் தளர்ந்த நிலைக்குக்குகூறும் காரணம் புரியவில்லை.
திருமாலிடம் இலக்குமி சேர்ந்தே இருப்பதுதான் வைணவக்கொள்கை. அதில் இலக்குமி, மாறாச்செல்வத்துக்காகச் சேர்க்கப்படவில்லை. பெண்மை, மாறாக்கருணையென்பதனால் மட்டுமே. எனவே ஆத்திகன் நாத்திகனுக்குச் சொன்ன விளக்கம் தவறானது. இறைவனுக்கும் செல்வம் வேண்டுமென்றால் நாத்திகன் நகைப்பதில் என்ன தவறு?
திருமாலைப்பற்றிச் சொலவதற்கு முன், கொஞ்சம் வைணவத்தைத் தெரிந்து கொள்வது நல்லது. அவர்கள் இப்படிப்பட்ட தோற்றத்துக்கு ஒரு விளக்கம் அளிக்கிறார்கள். அவ்விளக்கம் கண்டிப்பாக நாத்திகனுக்கு ஏற்றுக்கொள்ளும்படியிருக்கும் என்பது என் கணிப்பு.
ம்ம்ம் ..அருமை சார்
ஆத்திகமோ நாத்திகமோ காப்பதே கடமை என்பதை மறவாமை இருந்தால் சரி என்பதை உணர்த்திய வரிகள் நன்றி ஐயா.
காப்பவனுக்குள்ள தகுதியை சரியாக சொல்லியுள்ளார்.
அருமையாக முடித்துள்ளீர்கள் சார்...
நன்றி...
\\தீமையினை அழித்தொழிக்கத்தக்க
வல்லமை மிக்கவனாய் இருப்பவனும்
மாறாக் கருணையையும்
என்றென்றும் உதவிக்கென
நாம் அண்டத் தக்கவனாகவோ
நம்மைக் காக்கத் தக்கவனாகவோ
இருக்க முடியும் \\
மாஷா அல்லாஹ் :)
//என்றென்றும் உதவிக்கென
நாம் அண்டத் தக்கவனாகவோ
நம்மைக் காக்கத் தக்கவனாகவோ
இருக்க முடியும் //
காப்பவனுடைய தகுதி பற்றிய சிறப்பான விளக்கம். அருமையான பகிர்வு.
அவரவரும் ஆள்கிறார்கள்....
தொடருங்கள் ரமணி ஐயா.
தங்கள் கருத்தோடு முற்றிலும் ஒத்துப்போகிறேன்!தொடருங்கள்!தொடர்வேன்!
ரொம்ப நல்லா இருக்கு கவிதை வாழ்த்துகள்.
passerby //
அருமையாக ஆழமாகச் சிந்தித்து
எழுதப்பட்ட தங்கள் பின்னூட்டங்களைப் படித்ததும்
தங்கள் பதிவுகளைப் படிக்க வேண்டும் என்கிற ஆவல்
அதிகரிக்கிறது.தங்கள் பதிவின் லிங்க் கிடைக்கவில்லை
தயவுசெய்து கொடுத்தால் மகிழ்வேன்
தங்கள் வரவுக்கும் அருமையான விரிவான
சிந்திக்கச் செய்யும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ் //.
ஆத்திக நாத்திக உரையாடல் பொக்கிஷம் போல நல்ல விஷயங்களை அள்ளித் தருகிறது. தொடரட்டும்.//
தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
கடவுளரின் பருப்பொருளான உருவங்களை மிகச் சரியான
நற்பண்புகளுடன் பொருத்திப் பார்த்து புரிந்து கொண்டு
விளக்கி இருப்பது மிகவும் அருமை.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மதுமதி //
காப்பவனுக்குரிய தகுதியை நன்றாகச் சொன்னீர்கள்..//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவிதையில் தெளிவும் , அனுபவமும் தெரிகிறது ...
சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் அன்பரே.
நன்றாக கூறினீர்கள் அய்யா... அருமை
இறை வடிவங்கள் உலகு இயற்கையின் விளக்கங்களே . கடவுளை மனித உருவில் காணலாம் என்பதே உண்மை. அதுவே நீங்கள் கூறிய விளக்கமும். படைப்பவர்கள் எல்லாம் பிரம்மனே . உலகைக் காப்பவர்கள் எல்லாம் விஷ்ணுக்களே. கண்ணுக்கு முன்னே தெரிகின்ற கடவுள்களை சேவிக்கப் பழகிக் கொள்வோம் வாழ்க்கை சிறக்கும்
http://kowsy2010.blogspot.de/2011/11/blog-post_22.html
http://kowsy2010.blogspot.de/2012/10/1.html
புதிய முறையில் விளக்கங்கள் நன்றாக உள்ளன.
தெளிவான விளக்கம்
த.ம.11
ஆத்திகன் கூற்று உயிர் கொண்டது
Ganpat //
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் வாலி அவர்களின்
பாடலை நினைவு படுத்தியதற்கும்
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
செய்தாலி //.
ம்ம்ம் ..அருமை சார் //
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
ஆத்திகமோ நாத்திகமோ காப்பதே கடமை என்பதை மறவாமை இருந்தால் சரி என்பதை உணர்த்திய வரிகள் நன்றி ஐயா.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
காப்பவனுக்குரிய
தகுதியையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது ! வாழ்த்துகள் !
கோவை2தில்லி //
காப்பவனுக்குள்ள தகுதியை சரியாக சொல்லியுள்ளார்.//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
அருமையாக முடித்துள்ளீர்கள் சார்..//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தினபதிவு //
அழைப்புக்கு மிக்க நன்றி
நிச்சயம் தொடர்கிறேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
காப்பவனுடைய தகுதி பற்றிய சிறப்பான விளக்கம். அருமையான பகிர்வு.//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் //
தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
தங்கள் கருத்தோடு முற்றிலும் ஒத்துப்போகிறேன்!தொடருங்கள்!தொடர்வேன்!//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
ரொம்ப நல்லா இருக்கு கவிதை வாழ்த்துகள்.//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ananthu //
கவிதையில் தெளிவும் , அனுபவமும் தெரிகிறது//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முனைவர்.இரா.குணசீலன் //
சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் அன்பரே.//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ayesha Farook //
நன்றாக கூறினீர்கள் அய்யா... அருமை//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
உலகைக் காப்பவர்கள் எல்லாம் விஷ்ணுக்களே. கண்ணுக்கு முன்னே தெரிகின்ற கடவுள்களை சேவிக்கப் பழகிக் கொள்வோம் வாழ்க்கை சிறக்கும் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான சிந்திக்கத் தூண்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
.
T.N.MURALIDHARAN said...
தெளிவான விளக்கம்//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//என்றென்றும் உதவிக்கென
நாம் அண்டத் தக்கவனாகவோ
நம்மைக் காக்கத் தக்கவனாகவோ
இருக்க முடியும் //
சரியான கருத்து.... நல்ல கவிதை ரமணி ஜி!
சிட்டுக்குருவி //
ஆத்திகன் கூற்று உயிர் கொண்டது//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
காப்பவனுக்குரிய
தகுதியையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது ! வாழ்த்துகள்//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
சரியான கருத்து.... நல்ல கவிதை ரமணி ஜி!
வெங்கட் நாகராஜ் //
சரியான கருத்து.... நல்ல கவிதை ரமணி ஜி!//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
காப்பவனுடைய தகுதி பற்றி நன்றாகச் சொல்கின்றது கவிதை.
மாதேவி //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment