கோழையை வென்று
வீரனெனப் பெயர் பெறுவதைவிட
வீரனிடம் தோற்றுக் கோழையெனப்
பெயர் பெறுவது சிறந்ததாகப் படுகிறது
கஞ்சன் தரும்
வள்ளல் பட்டத்தை விட
வள்ளல் தரும் கஞ்சன் பட்டம்
கொஞ்சம் உயர்ந்ததாகத்தான் படுகிறது
முட்டாளிடம் பெறும்
அறிஞன் பட்டத்தை விட
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
கூடுதல் மகிழ்வளிக்கத்தான் செய்கிறது
நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
அயோக்கியன் என நல்லவன் தரும் சான்று
கொஞ்சம் பெருமைகொள்ளத்தான் செய்கிறது
சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது
வீரனெனப் பெயர் பெறுவதைவிட
வீரனிடம் தோற்றுக் கோழையெனப்
பெயர் பெறுவது சிறந்ததாகப் படுகிறது
கஞ்சன் தரும்
வள்ளல் பட்டத்தை விட
வள்ளல் தரும் கஞ்சன் பட்டம்
கொஞ்சம் உயர்ந்ததாகத்தான் படுகிறது
முட்டாளிடம் பெறும்
அறிஞன் பட்டத்தை விட
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
கூடுதல் மகிழ்வளிக்கத்தான் செய்கிறது
நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
அயோக்கியன் என நல்லவன் தரும் சான்று
கொஞ்சம் பெருமைகொள்ளத்தான் செய்கிறது
சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது
41 comments:
//அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
கூடுதல் மகிழ்வளிக்கத்தான் செய்கிறது//
இல்லயா பின்னே !
ஸார் ! நான் தான் முதல் அப்ளிகென்ட்.
எப்ப கான்வோகேஷன் ?
சென்னையில் தானே இருக்கும்?
சுப்பு தாத்தா.
நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
அயோக்கியன் என நல்லவன் தரும் சான்று கொஞ்சம் பெருமைகொள்ளத்தான் செய்கிறது/////
உண்மைதான்.... :)))
sury Siva //
பட்டம் கொடுக்கும் நாளையும் இடத்தையும்
பட்டம் கொடுப்பவர்கள் தானே முடிவு செய்யணும்
என்னைப் போல் பெறுபவர்கள் எப்படி முடிவு செய்யமுடியும் ?
முதல் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துஷ்யந்தன் //
தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஒரு பதிவரை இன்னொரு பதிவர் போற்றும் இன்பமே தனி.நன்றி
ஒரு பதிவரை இன்னொரு பதிவர் போற்றும் இன்பமே தனி.நன்றி
உண்மை தான் ஏன் எழுதுகிறோம்?.....எனக்கே சிரிப்பு வருகிறது... தான்....
வேதா. இலங்காதிலகம்.
அவர்களிடம் உள்ளதை தானே தான் தருவார்கள்...?
த.ம.4
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
கூடுதல் மகிழ்வளிக்கத்தான் செய்கிறது
//
எல்லாமே சின்ன சின்ன சந்தோஷங்கள் தானே அண்ணா ..
குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டுபடுவது என்பது இதுதானோ :))
இரசிக்கத் தெரிந்தவர்கள் இடும் கர்ருத்துரைகள் எழுதத் தூண்டுவதால் தொடர்கிறோம் என்பது என் தாழ்மையான் கருத்து!
//சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது//
சூப்பர்! எனக்கு இது ரொம்பப் பிடிச்சுது; எனக்கு ரொம்பப் பொருந்துறதுனாலே கூட இருக்கலாம்! :-)
//சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது //
நல்ல முத்தாய்ப்பு!
//ஒரு பதிவரை இன்னொரு பதிவர் போற்றும் இன்பமே தனி.நன்றி //
@கரந்தை ஜெயக்குமார்! சுயசொறிதல் என்றுதான் பதிவர்கள் குறிப்பிடுவது வழக்கம்.அதையே இன்னொரு பதிவர் சொறிந்து விடும் இன்பமே தனிங்கிறீங்க:)
//சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது //
- என்னை மிகவும் கவர்ந்த வரிகள்.. தங்கள் சிந்தனையின் வீச்சு வியக்க வைக்கிறது. பொக்கிஷத்திலிருந்து நாடோறும் எடுக்கும் பொற்காசு போல ஒவ்வொன்றாய் அழகான கவிதைகள் தினமும் உங்கள் ஆறாம் கையிலிருந்து வெளிவருவதை நினைத்தால் ஆச்சர்யமாகத்தானிருக்கிறது... தொடருங்கள்...தொடர்கிறோம்...!
நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
அயோக்கியன் என நல்லவன் தரும் சான்று
கொஞ்சம் பெருமைகொள்ளத்தான் செய்கிறது
சூப்பர் வரிகள்
எல்லாவரிகளும் சிந்திக்க வைக்கிறது அருமை.
இது என்ன கேள்வி சார் . அதுவும் நீங்கள் கேட்கலாமா? ஒவ்வொருவர் ரசனைக்கு ஏற்பவும் படைப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கும். இவற்றை சிந்தித்து எழுத்தாளன் படைக்க முடியாது. எழுத்தாளன் சோர்ந்து விட்டால் சமுதாயம் விழித்துக் கொள்ளாது . ஆம் எமது எழுத்துக்குப் பிறர் தரும் பங்களிப்பு எப்படி இருக்கிறது என்னும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது நியாயமே . அதனையே யார் தருகின்றார் என்பதைப் பொறுத்து பெருமைப் பட வேண்டும் . உங்கள் வரிகளில் சில விடயங்கள் மனதைத் தொடுகின்றன . வாழ்த்துக்கள்
புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறேன்.
அறிஞன் தரும் முட்டாள் பட்டம் - தந்தால் அறிஞனா?
வலைப் பதிவர்களுக்காக வலைப் பதிவரின் குரல்
ஹாஹா:-))))
//சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது //
அனைத்து பதிவர்களுக்கும் உற்சாகத்தை அதிகரிக்கும் வரிகள் அய்யா! மிக்க நன்றி!
//புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறேன்.
அறிஞன் தரும் முட்டாள் பட்டம் - தந்தால் அறிஞனா?//
அறு சுவையில் ஒரு சுவை நகைச்சுவை
அறுவையிலும் பெயரெடுப்பது தனிக்கலை.
ஒரு புரிதலுக்காக இந்த விளக்க உரை காண்க.
ஒரு அறிஞனையின்னொரு அறிஞன், உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது-அறிவு.எனும் வள்ளுவக்கோட்பாட்டுக்குட்பட்டு, ஒருவரை அறிஞனென்றறயும் மன நிலை வரும்போது , அம்மன நிலையின் அடிப்படையிலே அவ்வறிஞனைப் போற்றிப் பூரித்து மகிழவேண்டுமென
உளமாற நினைத்து அவ்வறிஞர் நிலை ஒத்த அறிஞர்களை அழைத்து ஒரு மேடையில் இருத்தி, தன்னைப்போன்ற
அறிஞர்களையும் அவ்வவையிலே அமர வைத்து, ஒருவரை ஒருவர் புகழ் பாடி பூச்சரங்கள் இட்டு
கரவொலி எழுப்பி கானங்கள் பாடி, நகுதல் பொருட்டன்று நட்பு, மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல்
பொருட்டு எனும் வள்ளுவன் சொல்லுக்கு ஏற்ப, மேடையில் இருக்கும் ஒவ்வொரு அறிஞனை
வாழ்த்தியும், வணங்கியும் அதே சமயம் அந்த அறிஞனுக்கு மட்டும் புரியும் வகையில் வசை பாடியும்
உள்ளத்தே மகிழும் அறிஞர் குழாம், உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
எனும் வள்ளுவச்சிந்தனைக்குட்பட்டுப் பகல் உணவு முடித்தபின் பரிசுப்பொருள்களுடன் வீடு நோக்குச்
செல்வதையும் கண்டிலையோ ..
(in lighter vein only. pl dont get angry. I am an old man)
சுப்பு தாத்தா.
// ஹாஹா:-))))//
இதெல்லாம் வேண்டாம்.
சீக்கிரம் எனக்குச் சேரவேண்டிய பட்டத்தைக் கொடுத்துவிட்டால் நான் வீடு திரும்புவேன்.
கடைசிப் பாரா ஒன்றே போதும். மிகமிகச் சரியே... நன்று சார்.
உண்மைதான் சார். மிக அருமையாக சொல்லியிருக்கீங்க..
பரவசம் தந்துதான் போகிற ப்ட்டம் அருமையாக உணர்வலைகள் நிரம்பிய அழ்கான பகிர்வுகளுக்கு மகிழ்ச்சியான பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஐயா....
நன்றாக உள்ளது நண்பரே ! வாழ்த்துக்கள் !
உச்சம் தொட்ட வரிகள் சிறப்பு ஐயா.
முதல் முறையாக உங்கள் எழுத்து தடுமாற வைக்கிறது!
இப்படி இருக்கலாமோ?
கோழையை வெல்வதை விட
வீரனிடம் தோற்பது
சிறந்ததாகப் படுகிறது
பணக்கார கஞ்சனாக வாழ்வதை விட
ஏழை வள்ளலாக மடிவது
கொஞ்சம் உயர்ந்ததாகத்தான் படுகிறது
முட்டாளிடம் மோதிரம் பெறுவதை விட
அறிஞன் மோதிரக்கையால் குட்டு படுவது,
கூடுதல் மகிழ்வளிக்கத்தான் செய்கிறது
வல்லவன் என
அயோக்கியன் தரும் சான்றிதழை விட
யோக்கியன் என நல்லவன் தரும் சான்று
கொஞ்சம் பெருமைகொள்ளத்தான் செய்கிறது
சராசரி வாசகன் தரும்
உற்சாகத்தை விட
மொக்கை பதிவர்கள் காட்டும் உதாசீனம் நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது
நன்றி.
அருமை சார்...முரணாக தெரிந்தாலும் அதுதான் உண்மை....
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது
>>
இது என்னைப்பத்திதானே எழுதினீங்க?!
ஆகா!புட்டுப் புட்டு வச்சிட்டீங்க!
ஒரு முறை படித்ததாக நினைவு. ஒருவரை மிகவும் அதிகமாலப் பாராட்டினால் நமக்கு ஒரு சாதாரணப் பாராட்டாவது கிடைக்கும். எதிர் மறையாகச் சொல்லப் போனால்.... ? யார் என்ன பட்டம் கொடுத்தாலும் நாம் நாம்தானே..!
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சார் (13)
அருமையான வார்த்தைகள், ஆழமான சிந்தனைகள்....மிகவும் ரசித்து படித்தேன்.
வாஸ்தவம்தான்.எல்லாம் சூழ்நிலையைப்பொறுத்தே அமைகிறது.
அருமையாக கூறியுள்ளீர்கள் அய்யா... அருமை
மிகவும் அருமையான வரிகள்! கருத்துக்கள்! மிக்க நன்றி!
த.ம. 6
அருமையான தலைப்பு….
அருமையான தொடக்கும் ரமணிசார்…. எல்லோரையும் சிந்திக்கவைத்த வரிகள்…. எளியவை தான்… ஆனால் அதில் பொதிந்துள்ள அர்த்தங்கள் ஏராளம்….
முதல் பத்தியே அட்டகாசம்…. செத்தப்பாம்பை அடித்து பாம்பை அடித்துக்கொன்றுவிட்டேன் என்று சொல்வதில் என்ன வீரம் இருந்துவிட முடியும்? நம் வீரத்தை நமக்கு சரிநிகரானவரிடம் காட்டி வெல்லுவது அதிச்சிறந்தது… இயலாத நிலையில் தலை நிமிர்த்தி கம்பீரமாக சொல்லமுடியும் வீரனிடம் தான் தோற்றதை….
கோழையை வெல்ல நாம் அவசியமில்லை… கோழை தனக்கு தானே தோல்வியுற்றவன் தான்….
நமக்கு சரி நிகரான திறமைகள் உள்ளவரிடம் தான் நம் போட்டிகள் ஆரோக்கியமானதாக இருக்கும்… வெற்றிப்பெற்றால் மணிமகுடம்… தோல்வியுற்றால் தோல்வி அடைந்ததற்கான காரணம் அறிய இயலும்.. இன்னும் அதிகமாக பயிற்சிப்பெற இயலும்… மிக அருமையான தொடக்கம் ரமணிசார்….
கஞ்சன் தருவான் வள்ளல் பட்டம்… எப்படி?? தன் கையில் வைத்துக்கொண்டு ஈயாத லோபியாக இருந்துக்கொண்டு வாயளவில் புகழ்ந்து….
மனதிற்குள் எங்கே தன்னிடம் ஏதாவது கேட்டு கையேந்திவிடுவானோ என்ற பதட்டத்தில் பயத்தில் இன்னொரு இடத்தில் போய் கேட்டுவிடு அதோ இருக்கிறான் பார் கொடைவள்ளல் என்று கைக்காட்டி தன் சொத்தை மிக பத்திரமாக பாதுகாத்தும் கொள்வான்…
அதே சமயம் இன்னொருவரிடம் வாங்கிக்கொள் உனக்கானதை அதோ இருக்கிறான் கர்ணமஹாபிரபு என்று புகழ்ந்து தள்ளுவான்.. அதே வள்ளல் தரும் கஞ்சப்பிரபு பட்டம் உயர்வாகவே கருதப்படும்… குட்டு வாங்கினாலும் மோதிரக்கையால் குட்டு வாங்கவேண்டும் என்பது போல….
வள்ளல் என்ற பெயர் உள்ளவன் மனம் உவந்து கொடுப்பவன்… எதையும் எதிர்ப்பாராது தருபவன்.. உதவி என்று வருபவனிடம் இல்லை என்று சொல்லாது இருப்பதை கொடுத்து சமாதானப்படுத்துபவன். அவன் சொல்வதும் நல்லதேயாகவே இருக்கும். செய்வதும் நல்லதேயாக இருக்கும். அதனால் அவன் வாயால் கஞ்சப்பிரபு பட்டம் பெறுவது உயர்வே…..
மூன்றாவது பத்தி என்னை மிகவும் கவர்ந்த பத்தி ரமணிசார்... முட்டாளிடம் பெறும் அறிஞர் பட்டத்தை விட.... முட்டாள் அப்படின்னா ஞானம் இல்லாதவனாக அந்த ஞானம் கேள்வி ஞானமாகவோ அல்லது அனுபவத்தில் தேர்ச்சி பெற்றவனாகவோ இல்லாமல் ஏதோ ஒன்று சொல்லவேண்டுமே என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து இவர் மிகவும் திறமை உள்ளவர் அப்படி இப்படி என்று சொல்லுவதை விட... எப்படி இவர் எந்த துறையில் என்ன திறமைகள் எப்படி வளர்த்து எப்படி பண்பட்டு எப்படி முன்னேறி இப்படி அறிஞரானார் என்று சொல்லக்கேட்கும்போது இதை கிரஹிப்பவரும் உள்வாங்கிக்கொண்டு அதன்படி தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
சும்மா போகும்போக்கில் இவர் சூப்பர் இவர் எழுதுவது சூப்பர் அப்படின்னு சொல்வதால் பயனில்லை என்பதை தான் சூசகமாக முட்டாளிடம் பெறும் அறிஞர் பட்டத்தை விட என்று தொடங்கி இருக்கீங்கன்னு நினைக்கிறேன் ரமணிசார்....
முட்டாள் அதற்காக அறிஞர் பட்டம் கொடுப்பதை தவறு என்றும் சொல்லவில்லை நீங்க. ஆனால் அதில் பெறும் உன்னதச்சிறப்பை விட அறிஞர்களிடம் இவன் ஒன்றும் அறியாதவன் என்று பெயர் எடுப்பதை மிக பாக்கியமாக கருதலாம் என்று சொல்ல வந்த கருத்து மிக மிக சிறப்பு ரமணிசார்....
பள்ளியில் டீச்சர் நாம் எத்தனை நல்லா படிச்சுட்டு போனாலும் இது போறாது இது போறாது இன்னும் நல்லா படிக்கணும் என்று நம்மை முதல் இடத்துக்கு வர வைக்கும் முயற்சியாக தான் அறிஞர்கள் தரும் முட்டாள் பட்டம் என்பது என் கருத்து.... அதனால் அறிஞர் தரும் முட்டாள் பட்டம்னா அப்ப அதை வாங்க இத்தனை அவசியமான்னு யோசிக்க கூடாது.
அறிஞர்கள் இப்படி சொல்றாங்கன்னா நமக்கு இன்னும் உத்வேகம் அவசியம்னு அர்த்தம்... இன்னும் நம் எழுத்துகள் வீரியமாகனும்னு அவசியம்.. அறிஞர் தரும் முட்டாள் பட்டம் இன்னும் நம்மை பண்படுத்தும் என்பது என் அபிப்ராயம்...
அயோக்கியன் நல்லவன் என்று சொல்றான்னா கண்டிப்பா அதில் எதாவது அவனுக்கு தேவையான சுயநலம் காரணமாக இருக்கலாம்... அவன் சொல்வதில் மயங்கி நம்மை இழக்காமல் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காக சொன்ன வார்த்தை அயோக்கியன் நல்லவன் என்று சொல்லும் சொல் இங்கே உபயோகித்தது கவிதையில் மிக அருமை..
யோசிக்கவைக்கும் வரிகள் ரமணிசார்.... அதே நல்லவன் நம்மை அயோக்கியன் அப்படின்னு சொல்றான்னா அதை அப்படியே எடுத்துக்காமல் நம்மை இத்தனை உரிமையாக சொல்லுவது கண்டிப்பாக நம் நலன் விரும்பிகளாக இருக்கலாம்.. அயோக்கியப்பையலே என்று சொல்லும்போது நாம் சண்டைக்கு போகாமல் யோசிக்க ஆரம்பிப்போம் கண்டிப்பாக.... நம்மிடம் என்ன தவறு இருக்கிறது என்பதில் ஆராய முற்படுவோம்.... நம் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அதை எடுத்துக்கொள்வோம்..
அமைதியாக சிந்தித்தால் எதிர்மறையாக சொல்வது கூட நம் முன்னேற்றத்துக்கான பாதையில் வரும் இடரை எப்படி அப்புறப்படுத்துவது என்பதில் நம் கவனம் இருக்க வரைந்த வரிகளாக தான் இந்த கவிதை வரிகள் எடுக்கமுடிகிறது ரமணிசார்...
கடைசி பத்தி ரசிக்க வைத்தது… சிந்திக்கவைத்தது…. பதிவர்களின் பேர் உள்ள மதிப்பை வரிகள் உணர்த்தியது…..
ஒரு படைப்பை நாம் இட்டதுமே ஓடி வந்து படித்து கருத்து இடும் பதிவர்களின் நல்ல மனதை காட்டியது… அவர்களின் கருத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உணரமுடிந்தது… அதனால் தான் பதிவர்கள் தரும் மொக்கைப்பட்டம் ரசிக்கவைப்பதாய் படித்தபோது என் மனமும் மகிழ்ந்தது…
இதை எழுதி வைத்து பதிவிட முடியாமல் ஏகப்பட்ட வேலைப்பளு ரமணிசார்…
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரமணிசார்…
arumai ayyaaa...
Post a Comment