Saturday, October 13, 2012

கரண்டும் மூடும் இணைந்திருந்தா

அது இருந்தா இது இல்லே
இது இருந்தா அது இல்லே
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்தால்
இணைத்துப் பார்க்க நேரம் இல்லே

பசியில் துடிச்சா சோறு இல்லே
சோறு இருந்தா பசியே இல்லே
பசியும்  சோறும் சேர்ந்து இருந்தா
பிச்சுப் போட நேரம் இல்லே

குளிராய் இருந்தா போர்வை இல்லே
போர்வை இருந்தா குளிரே இல்லை
குளிரும் போர்வையும் சேர்ந்திருந்தா
புத்தி தூங்க விடுவ தில்லே

பணிவாய் இருந்தா பதவி இல்லே
பதவி வந்தா  பணிவு இல்லே
பணிவும் பதவியும் சேர்ந்து வந்தா
நேரம் நமக்கு நல்லா இல்லே

கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணை ந்திருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே

73 comments:

வெங்கட் நாகராஜ் said...

மின்வெட்டு தமிழகத்தினை ரொம்பவே படுத்துகிறது. திருச்சியிலும் 15 மணி நேரம் மின்வெட்டு....

என்னத்தச் சொல்ல!

த.ம. 2

ஆத்மா said...

கல்லிருந்தா நாயக் காணோம்
நாயிருந்தா கல்லக் காணோம்...

சில நாட்களுக்கு முன் நாங்கள் அனுபவித்தது தான்
ரொம்ப கஸ்டமான விடயம்தான்
இன்றைக்கு கரண்ட்லதானே எல்லாம் இயங்குது
அழகாக சொல்லியுள்ளிர்கள் சார்

த. ம 3

Unknown said...

இல்லாத பட்டியல் உடனே கிடைக்க .தொப்புள் கொடி உறவுகளே .வாருங்கள் சிங்காரச் சென்னைக்கு!

அடுத்த ஜூன் மாதம் வரை இந்நிலையே தொடருமென சத்தம் சாமிநாதன் எச்சரித்துள்ளார்!

அனுபவிப்போம் வாருங்கள்!

NKS.ஹாஜா மைதீன் said...

#பணிவாய் இருந்தா பதவி இல்லே
பதவி வந்தா பணிவு இல்லே#

யதார்த்தமான உண்மை ...அருமை சார்.......

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணை ந்திருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே//

இதுதான் இன்றைய உண்மை நிலை.
வருத்தமாகவே உள்ளது. ;((((((((

அருமையான படைப்பு.
வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

அன்புடன்
VGK

kankaatchi.blogspot.com said...

இல்லை இல்லை
என்பவர்க்கு கவலையில்லை
ஆனால் இருந்தும் இல்லை
என்பவர்க்கு அமைதியில்லை

ராமலக்ஷ்மி said...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

kowsy said...

இததான் நேரம் சரியில்லை என்பது. உலக வாழ்க்கையே இப்படித்தான். இங்கு நான் வந்து 18 வருடங்கள் ஆன்னல் இதுவரை ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருந்ததில்லை . மின்வெட்டு ஒருநிமிடம் ஏற்பட்டால் பல லட்சங்கள் நட்டம் ஏற்ப்படுமாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அது இல்லை போல் மேல்வட்டம் கேநேரட்டர் பாவிப்பார்கள் போல் . நடுத்தரவர்க்கம் தான் எங்கேயும் பாதிப்புக்குள்ளாவார்கள் . கவிதை மூலம் நிலை உணர்த்தியுள்ளீர்கள் . எதற்கும் ஒரு தீர்வு
உ ண்டுதானே பொறுத்திருந்து பாருங்கள் . நல்லதே நடக்கட்டும்

கதம்ப உணர்வுகள் said...

த.ம. 7

Rathnavel Natarajan said...

கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே

பாடாய்ப் படுகிறோம்.

Unknown said...

NARAGA SOLLIRUKIRIRGAL NANRI :-)
www.balajistirupur.blogspot.com

kankaatchi.blogspot.com said...

பாடுபட்டு உழைத்தபோது
உடலில் நோயில்லை

உழைப்பை இயந்திரங்களிடம்
விட்டுவிட்டோம்

நம் உடல் என்னும் இயந்திரம்
பழுதாய் போய்விட்டது

நம் இயலாமையை நன்றாக
பயன்படுத்தி
நாளொன்றுக்கு வித விதமாக
இயந்திரங்களை தயார் செய்து
நம் தலைமேல் கட்டி
இயந்திர முதலாளிகள்
கொழுக்கின்றார்

இன்று மின்சாரம் இல்லாத
மனிதனின் வாழ்வு
சம்சாரத்தை இழந்த
கணவன் போன்றதே

சம்சாரம் மின்சாரத்தை
போல் இன்பமும் தரும்

விஷம் போல் உயர்ந்து விட்ட
மின்கட்டணம் போல்
துன்பமும் தரும்

இன்பமும் துன்பமும் பின்னி
பிணைந்ததுதான் வாழ்க்கை .

அதை எண்ணி கலங்கிநேரத்தை
வீணடிக்காமல்
பிரச்சினைகளை சமாளிக்க
வழி தேடுவதுதான்
அனைவருக்கும்
உகந்த வழி

Unknown said...

சுருங்க சொன்னா இது தான் வாழ்க்கை என உங்கள் கவிதை உணர்த்துகிறது அய்யா...

செய்தாலி said...

ம்ம்ம்... நல்லா சொனீங்க சார்

துரைடேனியல் said...

//கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணை ந்திருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே//

- அட...அட... என் நிலைமையும் இதுதான். எங்க தூத்துக்குடி-ல 18 மணி நேர மின்வெட்டு. இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போய்ட்டு வருது. எவ்வளவோ எழுத நினைத்தும் எழுத நேரமில்லை. நேரமிருந்தா மூடு இல்லை. அப்படியே மனதில் நினைத்ததை எழுத்தில் கொண்டு வந்து அசைபோட வைத்த உங்களுக்கு நன்றி ரமணி சார்! மற்ற அனைத்து வரிகளுமே ரசித்தேன். அருமை. அருமையிலும் அருமை.

ராஜி said...

இன்னுமா இன்வெர்ட்டர் போடலை:-(

குட்டன்ஜி said...

இன்னும் எத்தனை நாள் இந்த போராட்டமோ!இன்வெர்டர் போட்டுடுங்க!

குட்டன்ஜி said...

த.ம.11

அருணா செல்வம் said...

கவலைப்படாதீங்க இரமணி ஐயா.

நான் முதல் அமைச்சர் ஆனால் இந்தப் பிரட்சனை இல்லாமல் செய்கிறேன்.
எனக்கே ஓட்டுப் போடுங்கள்....

நன்றி.

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

உண்மைதான் ரமணி சார்

Avargal Unmaigal said...

இல்லே இல்லே இல்லே என்று நீங்கள் எழுதிய பதிவு நல்லா இல்லே என்று யாரலும் சொல்ல முடியாதபடிக்கு மிக அருமையாக இருக்கிறது

vimalanperali said...

இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என்பது மூளையை பொறுத்ததும்,சூழலைப்பொறுத்ததுமே/

தி.தமிழ் இளங்கோ said...

//பணிவாய் இருந்தா பதவி இல்லே
பதவி வந்தா பணிவு இல்லே
பணிவும் பதவியும் சேர்ந்து வந்தா
நேரம் நமக்கு நல்லா இல்லே //

கவிதை வரிகள் அருமை. காலம்தோறும் வழிவழியாக எல்லாத் துறையிலும் நடப்பது. ஒன்றிரண்டுபேர் இதற்கு விதிவிலக்கு!

// கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணை ந்திருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே//

தொடர் மின்வெட்டு காரணமாக எதையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியவில்லை. இதனால்தான் பதிவர்களின் பக்கம் சரியாக வர இயலவில்லை. பதிவும் எழுத முடிவதில்லை.


MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா குரு சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிட்டீங்க ரொம்ப ரொம்ப ரசிச்சேன் சிரிச்சேன்...!

MANO நாஞ்சில் மனோ said...

கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணை ந்திருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே...............!!!!!!!!!!!!!!!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான்.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் முதல் வரவுக்கும்
பின்னூட்டத்தீற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

சில நாட்களுக்கு முன் நாங்கள் அனுபவித்தது தான்
ரொம்ப கஸ்டமான விடயம்தான்
இன்றைக்கு கரண்ட்லதானே எல்லாம் இயங்குது
அழகாக சொல்லியுள்ளிர்கள் சார்//

சில நாட்களுக்கு முன்பா
அப்போ இப்போ நீங்கள் தமிழ் நாட்டில் இல்லையா
அல்லது சென்னையில் இருக்கிறீர்களா ?
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்தீற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி

இல்லாத பட்டியல் உடனே கிடைக்க .தொப்புள் கொடி உறவுகளே .வாருங்கள் சிங்காரச் சென்னைக்கு!//

மிகச் சரி
சரியாகத் தூங்கவேண்டும் என்றால் கூட
சென்னைக்குத்தான் போக வேண்டியிருக்கிறது
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்தீற்கும் மனமார்ந்த நன்றி

vanathy said...

Very nice and well written, Anna.

Yaathoramani.blogspot.com said...

NKS.ஹாஜா மைதீன் //

யதார்த்தமான உண்மை ...அருமை சார்..//


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்தீற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...



இதுதான் இன்றைய உண்மை நிலை.
வருத்தமாகவே உள்ளது. ;((((((((

அருமையான படைப்பு.//

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்தீற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Pattabi Raman //

ஆனால் இருந்தும் இல்லை
என்பவர்க்கு அமைதியில்லை //

மிகச் சரி
கரெண்ட் கனெக்க்ஷன் இருந்தும்
கரண்ட் பில் கட்டியும்
கரண்ட் இல்லையென்றால்... \
நீங்க்கள் சொல்வதுமிகச் சரி

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!//

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

FOOD NELLAI //

இன்றைய நிலையினை
நன்றாய் உணர்த்திய வரிகள்.//

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

நடுத்தரவர்க்கம் தான் எங்கேயும் பாதிப்புக்குள்ளாவார்கள் . கவிதை மூலம் நிலை உணர்த்தியுள்ளீர்கள் . எதற்கும் ஒரு தீர்வு
உ ண்டுதானே பொறுத்திருந்து பாருங்கள் . நல்லதே நடக்கட்டும் //

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தினபதிவு //

மிக அருமையான பதிவு //

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //

பதிவுக்கான வாக்கினை யாரும்
கொடுத்துவிட முடியும்
தங்களைப் போல பதிவைப் புரிந்து
விரிவாக அழகாக அருமையாக
பின்னூட்டமிடுவதுதான் கடினம்
வரவுக்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Pattabi Raman //

நானெல்லாம் ஒரு பின்னூட்டத்திற்குரியதை
பதிவாக்கித் தந்து கொண்டிருக்கையில்
ஒரு பதிவுக்குரியதையே பின்னூட்டமாய்
தந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ayesha Farook //

சுருங்க சொன்னா இது தான் வாழ்க்கை என உங்கள் கவிதை உணர்த்துகிறது அய்யா..//


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

ம்ம்ம்... நல்லா சொனீங்க சார் //

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் /..

.... எவ்வளவோ எழுத நினைத்தும் எழுத நேரமில்லை. நேரமிருந்தா மூடு இல்லை. அப்படியே மனதில் நினைத்ததை எழுத்தில் கொண்டு வந்து அசைபோட வைத்த உங்களுக்கு நன்றி ரமணி சார்! மற்ற அனைத்து வரிகளுமே ரசித்தேன். அருமை. அருமையிலும் அருமை.


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

இன்னுமா இன்வெர்ட்டர் போடலை//

கொஞ்சம் இயற்கையாக (இருளோடு )
வாழ்ந்து பார்க்கலாமே என்கிற எண்ணத்தில்
போடாமல் இருக்கிறேன்
பார்ப்போம்..//


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

குட்டன் //

இன்னும் எத்தனை நாள் இந்த போராட்டமோ!//

கொஞ்சம் இயற்கையாக (இருளோடு )
வாழ்ந்து பார்க்கலாமே என்கிற எண்ணத்தில்
போடாமல் இருக்கிறேன்
பார்ப்போம்..//


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

கவலைப்படாதீங்க இரமணி ஐயா.

நான் முதல் அமைச்சர் ஆனால் இந்தப் பிரட்சனை இல்லாமல் செய்கிறேன்.
எனக்கே ஓட்டுப் போடுங்கள்..//

நிச்சயமாக

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

thamilselvi //


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

இல்லே இல்லே இல்லே என்று நீங்கள் எழுதிய பதிவு நல்லா இல்லே என்று யாரலும் சொல்ல முடியாதபடிக்கு மிக அருமையாக இருக்கிறது//


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

கூடல் பாலா said...

ஹா...ஹா...அருமை!

Anonymous said...

மிக நன்றாக உண்மை கூறப்பட்டுள்ளது. நன்று.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

பால கணேஷ் said...

வரிக்கு வரி நிஜம். அருமை.

இராஜராஜேஸ்வரி said...

இணையாதிருக்கும் இணைகோடுகளோ !

அருமையான கவிதை வரிகள்.. பாராட்டுக்கள்..

கே. பி. ஜனா... said...

ஏதோ ஒன்று இருந்தால் சரி! இல்லையா?

இந்திரா said...

ஷ்ஷ்ஷ்ஷ்ப்பாஆஆஆஆ...
ம்ம்ம்முடியல..

திண்டுக்கல் தனபாலன் said...

வரிக்கு வரி உண்மை...

இன்று காலை ஆறு மணிக்கு போன மின்சாரம் இப்போது தான் (4.15 pm.) வந்தது... ...ம்...

த.ம. 16

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தொடர் மின்வெட்டு காரணமாக எதையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியவில்லை. இதனால்தான் பதிவர்களின் பக்கம் சரியாக வர இயலவில்லை. பதிவும் எழுத முடிவதில்லை.//


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

ஹா ஹா ஹா ஹா ஹா குரு சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிட்டீங்க ரொம்ப ரொம்ப ரசிச்சேன் சிரிச்சேன்.//


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

koodal bala //

ஹா...ஹா...அருமை!//


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

மிக நன்றாக உண்மை கூறப்பட்டுள்ளது. நன்று.
நல்வாழ்த்து.//


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

Very nice and well written, Anna.//

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

வரிக்கு வரி நிஜம். அருமை.//

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இந்திரா //

ஷ்ஷ்ஷ்ஷ்ப்பாஆஆஆஆ...
ம்ம்ம்முடியல..//

தங்கள் வரவுக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

வரிக்கு வரி உண்மை.//

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

சரியா சொல்லியிருக்கீங்க....

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி said...

சரியா சொல்லியிருக்கீங்க....//

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

கதம்ப உணர்வுகள் said...

//மஞ்சுபாஷிணி //

பதிவுக்கான வாக்கினை யாரும்
கொடுத்துவிட முடியும்
தங்களைப் போல பதிவைப் புரிந்து
விரிவாக அழகாக அருமையாக
பின்னூட்டமிடுவதுதான் கடினம்
வரவுக்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி//

நேற்று வேலை அதிகம் ரமணி சார்... அதனால தான் பாதி டைப் செய்துட்டு அதை போடாம கிளம்பினேன். இன்னும் சிறிது நேரத்தில் போடப்போகிறேன் ரமணி சார். எனக்கு மிகவும் பிடித்த டாபிக் நீங்க கொடுத்திருப்பது... வரேன் வரேன் இருங்க..

கதம்ப உணர்வுகள் said...

இந்த முறையும் ஒரு சமூக கண்ணோட்டத்துடன் கருவை வைத்து அருமையான கவிதை பகிர்வு ரமணி சார்.... அது இருந்தா இது இல்லை. கரெண்ட் இருந்தால் நெட் இல்லை. நெட் இருந்தால் கரெண்ட் இல்லை. ரெண்டும் இருந்தா இணைத்து பார்க்க நேரம் இருப்பதில்லை. எத்தனை சரியான வார்த்தை.... ஒவ்வொரு வரியிலும் நிதர்சனம் தெறிக்கிறதே ரமணி சார்....

பசியில் துடிக்கும் ஜனங்கள் ஒருபுறம் சாப்பிட உணவில்லாமல் மண்ணையும் கிழங்கையும் உண்டு எத்தனையோ பேர் இறந்தும் அந்த கொடுமையான காட்சிகள் சிலவற்றை பார்த்திருக்கிறேன். இந்த வரி வாசிக்கும்போது சரியா அதுவே நினைவில் வந்து நின்றது... சிறுவயதில் நிறைய சாப்பிட ஆசைப்படும் எத்தனையோப்பேர் வறுமையில் உழன்று, உழைத்து தனக்கென ஒரு இடம் இந்த சமுதாயத்தில் தக்கவைத்துக்கொள்ள போராடி முன்னுக்கு வந்து சாதிக்கிறார்கள். ஆனால் அதற்குள் வயது ஏறிவிடுகிறது. இத்தனை வருடங்கள் பட்ட பாடு சுகர், பிபி, கொலஸ்ட்ரால் என்று நம் உடலில் நீங்கா இடத்தையும் பிடித்துக்கொள்கிறது. பணம் சேர்ந்து என்னப்பயன்? நினைத்ததை சாப்பிட முடியலை.... ஏழையா இருந்தபோது பசி இருந்தது சோறு இல்லை ஏன்னா கிடைக்கலை. வறுமை... பணம் சேர்ந்ததும் செல்வம் வந்ததும் சோறு வகை வகையா கிடைத்தது. ஆனா பசி இல்லை. பசி இருந்தாலும் ஆயிரம் வியாதிகள்... இரண்டுமே அமைந்தால் பசிச்சு சோறும் இருந்தால் இதோ எங்களைப்போல் இயந்திர உலகமாய் வேலை வேலை என்று பறந்துட்டு இருக்கோம் நேரமின்மையால்... அதனால் ஓடிக்கொண்டு இருக்கிறோம்... சோறு இருந்தும் பசி இருந்தும் சாப்பிட நேரமில்லாமல்.....

கதம்ப உணர்வுகள் said...

இந்தப்பத்தி ரொம்ப அருமை ரமணி சார்.. குளிர் இருந்தா போர்த்திக்கொள்ள போர்வை இல்லை.. ( வறுமையின் காரணமாக) போர்வை இருந்தால் குளிர் இல்லை... க்ளைமேட் மாறிவிட்டதால் இருக்குமோ? இந்த ஜூன் இந்தியா சென்றபோது இந்த கதை தான் ஆனது.... அங்கே மழையோ மழை... கரெண்ட் கட்டோ கட்.... குளிர்... ஏர்ப்போர்ட் வந்துப்பார்த்தால் சால்வை கொண்டு வர மறந்தாச்சு. என்ன செய்ய? அங்கயே காசு கொடுத்து வாங்கி நடுங்கிக்கொண்டே குவைத் வந்து இறங்கினால்.. இங்க சுட்டெரிக்கும் வெயில் யப்பா சாமி... கவிதையில் சொல்லி இருப்பதோ எல்லா வசதியும் இருந்துவிட்டால் நிம்மதியான உறக்கம் கண்களை தழுவ வேண்டாமா? அதான் இல்லைன்னு சொல்லிட்டீங்களே.... புத்தி தூங்கவிடாதாம். ஏனாம்? ஏன்னா சிந்தனை உயிர்த்து அடுத்து என்ன செய்யலாம் என்ன கவிதை வரிகள் அமைக்கலாம்? கவிதை எழுத ஒரு சின்னப்பொறி கிடைக்குமா என்று எண்ணம் அலைபாய்ந்துக்கொண்டே இருந்தால் எப்படி தூக்கம் வரும்?

ஆஹா அரசியலை ஊடுருவி வந்த பத்தி போல அருமை ஐயா இது...
பணிவும், பண்பும், நல்லது செய்யும் குணமும் இருப்போருக்கு பதவி கிடைப்பதில்லை... பதவி என்ன... இன்றைய அரசியல் சூதாட்டத்திற்கு சூட் இல்லை.... அதுவே பதவி வந்தால் பணிவு எல்லாம் பறந்து போயிடுது.... வயதில் மூத்தவர்கள் பதவி முன்னிட்டு காலில் விழுந்தாலும் அமைதியா ஆசீர்வாதம் தரும் அளவுக்கு பதவி செய்யும் ஜாலம் இது.... பதவி தரும் தைரியம் இது...பதவி வந்தப்பின் பணிவு தன்னிடம் இருந்து போய்விடுவது மட்டுமல்லாமல் எல்லோரும் தன்னிடம் பணிவு இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவைக்கும் செப்படி வித்தை.... பதவியும் பணிவும் இருந்தால் உயிரோடவே இருக்கவிட மாட்டாங்க... உடனே மேல் லோகத்துக்கு ஃப்ரீ டிக்கெட் கொடுத்து அனுப்பிருவாங்க.. அசத்தல் ரமணி சார்... வார்த்தைகள் உங்களுக்கு இலகுவா வருது...

கதம்ப உணர்வுகள் said...

எழுதுறவங்க நிலை எப்படியோ... ஆனா வாசிக்கிறவங்க நிலை செம்ம கொண்டாட்டம் தான். பின்ன என்னவாம் ரமணிசார்.... உங்க இக்கட்டு எங்களுக்கு இப்படி ஒரு அழகிய கவிதை கிடைச்சிருக்கே அந்த சந்தோஷம். ரசித்து வாசித்தேன்.... எல்லாத்துக்குமே எல்லாமே பொருந்தி வந்தால் தான் வடிவம் முழுமைப்பெறும்.. எத்தனை அருமையான விஷயம் இது. மின்வெட்டு தமிழகத்துல எல்லார் மனதிலும் இந்த ஒரே கோபம் தான்... ஒரு நாளைக்கு 18 மணிநேர மின்வெட்டு மக்கள் எப்படி அவஸ்தை படுவார்கள்னு அரசியல்வாதிகள் யோசிச்சு பார்ப்பதுண்டா?? எதெதெற்கோ கொடி பிடிக்கிறார்கள் ஸ்ட்ரைக் செய்கிறார்கள்... உண்ணாவிரதம் இருக்கிறார்கள், தினசரி அத்தியாவசிய வாழ்க்கைக்கு அவசியமான மின்சாரம் இத்தனை கடுமையா குறைத்து மக்களை கஷ்டப்படுத்துகிறார்களே இதற்கு ஒரு போராட்டம் நடத்தக்கூடாதா? உலகமே ஸ்தம்பித்து நிற்கணும் இந்த போராட்டத்தைப்பார்த்து... மேல்வர்க்கம் ஜெனரேட்டர் வைத்து சமாளித்துக்கொள்ளும். ஏழைகளுக்கு மின்சாரம் அவசியமே இல்லை என்பது போல் இருக்கிறார்கள்.... பாதிக்கப்படுவது என்னவோ நடுத்தரவர்க்கத்தினரே.... வந்து வந்து போகும் கரெண்டை சபிக்கவும் முடியாம திட்டவும் முடியாம அவசர அவசரமா அந்த நேரம் முடிக்கவேண்டிய அரைகுறை வேலைகள் எல்லாம் முடிப்பதில் தான் நம் கவனம் இருக்கும். இதனால் பிழைகளும் ஏற்பட வாய்ப்புண்டு... அந்த நேரத்தில் கவிதை எழுத மூட் வருமா? வரிகள் அமைப்பதில் யோசனை தான் போகுமா? இல்லை கவிதைக்கருவை ரசித்து கவிதை அமைக்க வார்த்தை கோர்க்கமுடியுமா??

உங்க எண்ணங்களை வண்ணம் தோய்த்து கவிதை வரிகளாக்கி இங்க அசத்தலா கொடுத்துட்டீங்க ரமணி சார்.. இருக்குற கரெண்ட்லயே அட்டகாசமா எளிமையா கவிதை கொடுத்துட்டீங்க...

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி said...


தங்கள் பின்னூட்டத்தை மட்டும் இரண்டு மூன்று முறை
படித்து பின் பதிலுரை எழுத வேண்டி இருக்கிறது
அத்தனை ஆழமாக சிந்தித்து அருமையாக சரளமாக
பின்னூட்டமிடுகிறீர்கள்.அதுதான் கொஞ்சம் கால தாமதமாக
தங்களுக்கு மட்டும் பதிலுரை எழுத நேர்ந்து விடுகிறது
வழக்கம்போல் அருமையான அலசல்
வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கதம்ப உணர்வுகள் said...

பணிவான அன்புநன்றிகள் ரமணிசார்....

Post a Comment