Tuesday, October 16, 2012

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் சொல்லக்
கற்றுக் கொள்வோம்

பொய்யாயினும்
நம்ப முடியாததாயினும்
தர்க்கத்திற்கு எதிரானதாயினும்..

மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிக ஆழமாய் படர்கின்றன
தலைமுறை தாண்டி நிலையாய்த் தொடர்கின்றன

பால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல
வெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல
சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல
ஜாதி மதம் மட்டுமல்ல 

நாம் நம்பிக்கை கொண்டிருக்கிற
பகுத்தறிவுக்கு ஒப்பாதவை எல்லாம்
நமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே
நம்மீது திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவையே

எனவே
இவைகளுக்கு எதிரான
சாட்சியங்களை நிரூபணங்களை
ஒருமுறை சொல்லி ஓய்ந்துவிடாது

இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்

51 comments:

Easy (EZ) Editorial Calendar said...

கவிதை மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி......]

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மனோ சாமிநாதன் said...

வழக்கமான சொல்லாட்சியுடன் அருமையான கவிதை!!

NKS.ஹாஜா மைதீன் said...

வார்த்தை விளையாட்டுக்கள் அருமை சார்....

முத்தரசு said...

//மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்//

ஆமாம் கற்று கொள்வோம்

G.M Balasubramaniam said...


கோயபல்ஸ் என்பவன் ஹிட்லரின் ஆள். மீண்டும் மீண்டும் சொல்லப் படும் செய்திகள் பொய்யாய் இருப்பினும் உண்மையாகி விடும்.என்று நன்கு அறிந்தவன். சில நேரங்களில் அந்தப் பொய்யை சொல்பவனே அதை நம்பத்துவங்கி விடுவான்.அவற்றை முறியடிக்க மீண்டும் மீண்டும் உண்மை வெளிப்படுத்தப் பட வேண்டும். ஆனால் பொய்யிலே மூழ்கிப் போய் இருப்பவர்கள் காதில் எதுவும் விழுந்தமாதிரித் தெரியவில்லை. நான் என் பாணியில் சில கருத்துக்களை பதிவுகளில் எழுதி வருகிறேன். ஆனால் அவை போய்ச் சேருகிற மாதிரி தெரியவில்லை.உங்கள் பதிவின் கருத்து பாராட்டுதற்குரியது. வாழ்த்துக்கள்.

Admin said...

கற்றுக்கொள்வோம்..

தி.தமிழ் இளங்கோ said...

// இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம் //

ஆழமான கருத்து. வெல்வோம்!

சொலல் வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது - குறள் 647

கதம்ப உணர்வுகள் said...

த.ம. 2

இந்திரா said...

//மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிக ஆழமாய் படர்கின்றன
தலைமுறை தாண்டி நிலையாய்த் தொடர்கின்றன//


பொய்யையே திரும்பத் திரும்ப சொன்னா உண்மைனு நம்பிடுவாங்கனு சொல்வாங்களே..
அது மாதிரியோ..

Seeni said...

kattu kolvom ayya!

nalla pakirvu!

பால கணேஷ் said...

ஆம். அழுத்தமாய் மீண்டும் மீண்டும் சொல்வதற்குக் கற்றுக் கொள்ளலாம் ஸார். மிக நல்ல கருத்து.

யுவராணி தமிழரசன் said...

அருமையான பதிவு சார்! பகிர்வுக்கு நன்றி! பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தால் அதுவே சில சமயம் உண்மையோ என்று தோன்றிட வைக்கையில் நான் நிஜத்தை சொல்லிட தயங்குகிறோம்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

திரும்ப திரும்ப சொல்வது மனதில் இடம் பிடித்துவிடும்.
த.ம 7

அருணா செல்வம் said...

வணக்கம் இரமணி ஐயா.

கற்றவரும் கேட்டதைக் கொட்டுவார் நற்கவியில்!
மற்றவரும் நன்றாய் மகிழ்ந்திடுவார்! - பெற்றவரும்
உற்றவரும் போற்றி புகழ்ந்திருக்க உண்டென்றே
குற்றமதைப் போற்றும் புவி!

நன்றி.

மாதேவி said...

நல்ல கவிதை. மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்.

சசிகலா said...

கற்றவரும் கேட்டதைக் கொட்டுவார் நற்கவியில்!
மற்றவரும் நன்றாய் மகிழ்ந்திடுவார்! - பெற்றவரும்
உற்றவரும் போற்றி புகழ்ந்திருக்க உண்டென்றே
குற்றமதைப் போற்றும் புவி!

கற்றுக்கொள்வோம்.

Unknown said...


பகுத்தறிவைக் பகுத்து ஆய்ந்து வகுத்து எழுதினீர் நன்றி! இரமணி

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கருத்து.... மீண்டும் மீண்டும் சொல்வோம்.. மீண்டும் மீண்டும் கேட்போம்!

த.ம. 10

ADHI VENKAT said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

Easy (EZ) Editorial Calendar //

கவிதை மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

வழக்கமான சொல்லாட்சியுடன் அருமையான கவிதை!!//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

மீண்டும் மீண்டும் வர தூண்டும் பதிவு உங்களுடையது அய்யா!....

நல்ல வரிகள்....

Yaathoramani.blogspot.com said...

NKS.ஹாஜா மைதீன் //

வார்த்தை விளையாட்டுக்கள் அருமை சார்..//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முத்தரசு //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s. //.

அருமை!//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

நான் என் பாணியில் சில கருத்துக்களை பதிவுகளில் எழுதி வருகிறேன். ஆனால் அவை போய்ச் சேருகிற மாதிரி தெரியவில்லை.உங்கள் பதிவின் கருத்து பாராட்டுதற்குரியது. வாழ்த்துக்கள்.//

உங்கள் பதிவுகளுக்கென இருக்கிற
அதி தீவீர ரசிகர்களில் நானும் ஒருவன்
மின்தடைதான் இப்போது தொடர்வதற்கும்
பின்னூட்டமிடுவதற்கும் அனைவருக்கும்
தடையாக உள்ளது
தங்கள் வரவுக்கும் விரிவான மனம் திறந்த
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

ஆழமான கருத்து. வெல்வோம்!//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //


தங்கள் உடன் வரவுக்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்லதொரு பகுத்தறிவு கவிதை.
வாழ்த்துகள் சார்!

திண்டுக்கல் தனபாலன் said...

கற்றுக் கொள்ள வேண்டும்... (11)

ஆத்மா said...

நல்ல கவிதை
அடித்தாற் போல் சொல்லியிருக்கிறீர்கள் சார் (12)

Yaathoramani.blogspot.com said...


பொய்யையே திரும்பத் திரும்ப சொன்னா உண்மைனு நம்பிடுவாங்கனு சொல்வாங்களே..
அது மாதிரியோ..//

நிச்சயமாக அது மாதிரிதான்
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

ஆம். அழுத்தமாய் மீண்டும் மீண்டும் சொல்வதற்குக் கற்றுக் கொள்ளலாம் ஸார். மிக நல்ல கருத்து.//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //

அருமையான பதிவு சார்! பகிர்வுக்கு நன்றி!//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

திரும்ப திரும்ப சொல்வது மனதில் இடம் பிடித்துவிடும்.//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

சிறப்பானக் கருத்து அய்யா. அடி மேல் அடி அடித்தால் தானே அம்மியும் நகரும்.நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

நல்ல கவிதை. மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்.//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் s//

பகுத்தறிவைக் பகுத்து ஆய்ந்து வகுத்து எழுதினீர் நன்றி! இரமணி //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //.

சிறப்பான கருத்து.... மீண்டும் மீண்டும் சொல்வோம்.. மீண்டும் மீண்டும் கேட்போம்!//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி s//

அருமை.//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ayesha Farook //

மீண்டும் மீண்டும் வர தூண்டும் பதிவு உங்களுடையது அய்யா!....

நல்ல வரிகள்....//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

-தோழன் மபா, தமிழன் வீதி //

நல்லதொரு பகுத்தறிவு கவிதை.
வாழ்த்துகள் சார்!//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன்

கற்றுக் கொள்ள வேண்டும்//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

நல்ல கவிதை
அடித்தாற் போல் சொல்லியிருக்கிறீர்கள் சார் (//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

சிறப்பானக் கருத்து அய்யா. அடி மேல் அடி அடித்தால் தானே அம்மியும் நகரும்.நன்றி//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ராமலக்ஷ்மி said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

அருமை.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment