.அரசியல் சாணக்கியரே
கருப்பில் துவங்கி
மஞ்சளுக்குப் போய்
மீண்டும் கருப்புக்கு வந்தது
அதிக மகிழ்வளிக்கிறது
மகளைப் புணர முயலும்
தந்தை குறித்த அருமையான
"கான்ஸ்டெபிள் கந்தசாமி "
காவியத்திலிருந்து
குறளோவியத்திற்கு வந்ததும்
குடிபோதையில் தங்கையைக்
கூடவரும் அண்ணன் குறித்த
"மறக்கமுடியாத "காப்பியத்திலிருந்து
தொல்காப்பியப் பூங்காவிற்கு வந்ததும்
"ராஜாஜியின் ஆண்மையற்ற பேச்சு "
"அனந்த நாயகிக்கு
அண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை "
"திராவிடத்தின் இருப்பிடம்" முதலான
காலத்தால் அழியாத
அநாகரீகமான பேச்சினை தொடராது
அரசியல் நாகரீகம் குறித்து
அதிகம் தொடர்ந்து பேசுவதும்
எங்களை மிகவும் கவருகிறது
இப்படி
இலக்கியம்.அரசியல் மேடைப்பேச்சு
அனைத்திலும் முற்றிலும் மாறி
பிராயச் சித்தம் செய்துவரும் தாங்கள்
குடும்பமாய் இருந்த கழகத்தை
குடும்பத்திற்குள் அடக்காது "விடுவிக்கும்
பிராயச் சித்தத்தை
என்று செய்யப்போகிறீர்கள் ?
குடும்பப பாசத்தை விட
தொண்டர்களின் நேசமே உயரந்ததென
உலகுக்கு என்று நிரூபிக்கப் போகிறீர்கள் ?
கருப்பில் துவங்கி
மஞ்சளுக்குப் போய்
மீண்டும் கருப்புக்கு வந்தது
அதிக மகிழ்வளிக்கிறது
மகளைப் புணர முயலும்
தந்தை குறித்த அருமையான
"கான்ஸ்டெபிள் கந்தசாமி "
காவியத்திலிருந்து
குறளோவியத்திற்கு வந்ததும்
குடிபோதையில் தங்கையைக்
கூடவரும் அண்ணன் குறித்த
"மறக்கமுடியாத "காப்பியத்திலிருந்து
தொல்காப்பியப் பூங்காவிற்கு வந்ததும்
"ராஜாஜியின் ஆண்மையற்ற பேச்சு "
"அனந்த நாயகிக்கு
அண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை "
"திராவிடத்தின் இருப்பிடம்" முதலான
காலத்தால் அழியாத
அநாகரீகமான பேச்சினை தொடராது
அரசியல் நாகரீகம் குறித்து
அதிகம் தொடர்ந்து பேசுவதும்
எங்களை மிகவும் கவருகிறது
இப்படி
இலக்கியம்.அரசியல் மேடைப்பேச்சு
அனைத்திலும் முற்றிலும் மாறி
பிராயச் சித்தம் செய்துவரும் தாங்கள்
குடும்பமாய் இருந்த கழகத்தை
குடும்பத்திற்குள் அடக்காது "விடுவிக்கும்
பிராயச் சித்தத்தை
என்று செய்யப்போகிறீர்கள் ?
குடும்பப பாசத்தை விட
தொண்டர்களின் நேசமே உயரந்ததென
உலகுக்கு என்று நிரூபிக்கப் போகிறீர்கள் ?
70 comments:
மிக அருமையான அரசியல் கவிதை! கடைசி காலத்தில் கலைஞர் திருந்துவாரா!
நல்ல கேள்வி.... ஆனால் பதில் சொல்லப் போவதில்லை அவர்.....
த.ம. 2
மிக அருமையான கவிதை ஐயா !
கலைஞருக்கு குடும்பம் தான் பலமும் பலவினமும்... நல்ல வரிகள் அய்யா!
கவிதை...
செவிடரின் காதில்
ஊதிய சங்கு தான் இரமணி ஐயா.
...ம்... இவர் எங்கே மாறுவது...? மாற நினைத்தாலும் முடியாது... (TM 4)
கலைஞர் ஏன் மாற வேண்டும்? மக்கள் மாறினால் போதுமே? சிறுத்தையின் புள்ளியும் சாக்கடையின் மணமும் மாறுமோ?
இதெல்லாம் எல்லாரும் மறந்திருப்பாங்கன்னு அவர் நினைச்சிருப்பார். கெடுத்துட்டீங்களே!
கவிதை வாசித்தேன் ஐயா.
(எனக்கு அதிகமாக அரசியல் பிடிக்காது).
விடயங்களை அறிந்து கொண்டேன் நன்றி.
வேதா. இலங்காதிலகம்
கவிப்ரியன் //
முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
நீங்கள் சொல்வதுதான் சரி
ஆனாலும் அவர் குறித்து மிகச் சரியாக
அறிந்தவர்கள் நிறைய இருக்கிறோம் என்பதையாவது
அவர் புரிந்து கொள்ள முயலட்டும்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இக்பால் செல்வன் //
முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ayesha Farook //
கலைஞருக்கு குடும்பம் தான் பலமும் பலவினமும்... நல்ல வரிகள் அய்யா!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் //
கவிதை...
செவிடரின் காதில்
ஊதிய சங்கு தான் இரமணி ஐயா.//
தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
...ம்... இவர் எங்கே மாறுவது...? மாற நினைத்தாலும் முடியாது.//
தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
கலைஞர் ஏன் மாற வேண்டும்? மக்கள் மாறினால் போதுமே? சிறுத்தையின் புள்ளியும் சாக்கடையின் மணமும் மாறுமோ?//
எல்லாம் முடியைக் கட்டி மலையை
இழுக்கிற முயற்சிதான் இது.
மலை நகராவிட்டாலும்
நமக்கு பெரிய இழப்பில்லைதானே ?
தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
bandhu //
இதெல்லாம் எல்லாரும் மறந்திருப்பாங்கன்னு அவர் நினைச்சிருப்பார். கெடுத்துட்டீங்களே!//
நீங்கள் சொல்வதுதான் சரி
ஆனாலும் அவர் குறித்து மிகச் சரியாக
அறிந்தவர்கள் நிறைய இருக்கிறோம் என்பதையாவது
அவர் புரிந்து கொள்ள முயலட்டும்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ayya nallaa irukku...
பாவம்!எத்தனை சட்டைகள் மாற்றினாலும் சாயம் வெளுத்து விடுகிறதே!
த.ம.5
தாங்கள் கூரியதுபோல் அவர் குறித்து மிகச் சரியாக அறிந்தவர்களும் அதிகம் இருக்கிறார்கள் என உணர்ந்தாலே போதும்!
நிறம் மாறிப் பயனில்லை நிலையான கொள்கை எதிலும், என்றும் வேண்டும்!
சரியான சாட்டையடி!
ஆனால்
சாட்டைதான் தேயும்..
சட்டை அப்படியேத்தான் இருக்கும்..
முன்பாவது பருத்தி ஆடையில் தைத்த வெள்ளை சட்டை.
அடித்த கறையாவது தென்படும்..சட்டை கிழிய வாய்ப்பாவது உண்டு.
இப்பொழுதோ நல்ல சாக்குப்பையில் தைத்த கருப்பு சட்டை..
அடித்த சுவடு கூட தெரியாது.கிழியவும் செய்யாது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று
சொல்வார்கள்..ஆனால் ஐந்திலும் வளையாமல்,ஐம்பதிலும் வளையாமல் இருக்கும் ஒன்று தொண்ணூறில் வளையும் என நம்பும் உங்கள் வெள்ளை மனதிற்கு என் வாழ்த்துக்கள்.
அவர், தன் குடும்பத்தை காப்பாற்றட்டும்.
அவரிடமிருந்து நம்மை இறைவன் காப்ப்ற்றுவாராக!
அவர் மாற நினைதாலும் விட்டுடுவாங்களா
ஐயா, பழசை கிளறி விட்டுடீங்களே
இவர் பற்றி என்ன சொல்வது
உங்கள் கவிதை அருமை பாஸ்
கருணாநிதியின் அனைத்து மாற்றங்களுக்கு பின்னாலும் அவரது சுயநலமே ஒளிந்திருக்கும்!
குடும்பப பாசத்தை விட
தொண்டர்களின் நேசமே உயரந்ததென
உலகுக்கு என்று நிரூபிக்கப் போகிறீர்கள் ?
அரசியல் வாதிகளுக்கு நேசம் என்றால் என்னவென்று தெரியுமா ?
கலைஞரின் மறுபக்கத்தைத் தெரிந்துகொள்ள நீங்கள் சொன்ன அவரது பழைய நூல்களையும் படிக்க வேண்டும். கண்ணதாசன் தனது வனவாசத்தில் கலைஞரைக் குறித்து அதிகம் அங்கலாய்த்திருக்கிறார். அவரது 'தென்றல்' மாதாந்திர இதழ்களிலும் அதிகம் எழுதியிருக்கிறார். அருமையான பதிவு. அட்டகாசமான சிந்தனை மாலை.
உலகத்தமிழர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாய் எண்ணிப் பார்த்திட்டு பாசம் நல்கிட்டு நேசம் அணிந்திட்டு மோசக்காரர்களின் முகத்திரையை கிழித்திடும் எம் கலைஞருக்குக் குடும்பப்பற்றே கிடையாதென்பதைக் குறுமதியோர் உணர்ந்திட வேண்டும்!.!...இது எப்படியிருக்கு?!
த.ம.10
குடும்பப பாசத்தை விட
தொண்டர்களின் நேசமே உயரந்ததென
உலகுக்கு என்று நிரூபிக்கப் போகிறீர்கள் ?//
தொண்டர்களின் நேசமா! அப்படி என்றால் என்ன?
தொண்டர்களுக்கு தலைவரின் மேல் நேசம் உண்டு, தலைவருக்கோ பதவி, புகழ் மேல் மட்டும் நேசம் உண்டு.
Seeni //.
ayya nallaa irukku...
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
பாவம்!எத்தனை சட்டைகள் மாற்றினாலும் சாயம் வெளுத்து விடுகிறதே!
கவித்துவமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
Seshadri e.s. //
தாங்கள் கூரியதுபோல் அவர் குறித்து மிகச் சரியாக அறிந்தவர்களும் அதிகம் இருக்கிறார்கள் என உணர்ந்தாலே போதும்!//
தற்கால இளைஞர்கள் அவருடைய பழைய
எழுத்துக்களையும் பேச்சையும் படித்திருக்கவோ
கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை என்பதால்
லேசாக கோடிட்டுக் காட்டலாம என நினைத்தேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
நிறம் மாறிப் பயனில்லை நிலையான கொள்கை எதிலும், என்றும் வேண்டும்!//
நிலையான கொள்கையில் நிற்காமல்
மாறுவதற்கு ஏற்றார்ப்போல
விளக்கம் கொடுப்பதில்தான் புத்திகூர்மையை
அதிகம் செலவழித்து மக்களையும் கஷ்டப்படுத்துகிறார்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
அவர் மாற நினைதாலும் விட்டுடுவாங்களா
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஆனால் ஐந்திலும் வளையாமல்,ஐம்பதிலும் வளையாமல் இருக்கும் ஒன்று தொண்ணூறில் வளையும் என நம்பும் உங்கள் வெள்ளை மனதிற்கு என் வாழ்த்துக்கள்.
அவர், தன் குடும்பத்தை காப்பாற்றட்டும்.
அவரிடமிருந்து நம்மை இறைவன் காப்ப்ற்றுவாராக!
Ganpat //
ஐந்திலும் வளையாமல்,ஐம்பதிலும் வளையாமல் இருக்கும் ஒன்று தொண்ணூறில் வளையும் என நம்பும் உங்கள் வெள்ளை மனதிற்கு என் வாழ்த்துக்கள்.
அவர், தன் குடும்பத்தை காப்பாற்றட்டும்.
அவரிடமிருந்து நம்மை இறைவன் காப்ப்ற்றுவாராக! நிச்சயம் மாறமாட்டார்
தற்கால இளைஞர்கள் அவருடைய பழைய
எழுத்துக்களையும் பேச்சையும் படித்திருக்கவோ
கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை என்பதால்
லேசாக கோடிட்டுக் காட்டலாம என நினைத்தேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முத்தரசு (மனசாட்சி) //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
இவர் பற்றி என்ன சொல்வது
உங்கள் கவிதை அருமை பாஸ்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Vijayakumar //
கருணாநிதியின் அனைத்து மாற்றங்களுக்கு பின்னாலும் அவரது சுயநலமே ஒளிந்திருக்கும்!//
மிகச் சரியாகச் சொன்னீர்கள்தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Sasi Kala //
அரசியல் வாதிகளுக்கு நேசம் என்றால் என்னவென்று தெரியுமா
தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
அருமையான பதிவு. அட்டகாசமான சிந்தனை மாலை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
#ராஜாஜியின் ஆண்மையற்ற பேச்சு "
"அனந்த நாயகிக்கு
அண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை "
"திராவிடத்தின் இருப்பிடம்" முதலான
காலத்தால் அழியாத
அநாகரீகமான பேச்சினை தொடராது
அரசியல் நாகரீகம் குறித்து
அதிகம் தொடர்ந்து பேசுவதும்
எங்களை மிகவும் கவருகிறது#
இதற்கு பெயர்தான் வஞ்சபுகழ்ச்சி அணியோ!சூப்பர்....
தமிழ் மக்கள் நல்லவர்கள். கலைஞர் இனி மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன. அவரை நம்பியவர்களை அவர் கைவிடவில்லை. எஞ்சி இருக்கும் நாட்களை அவர் இனிதாய்க் கழிக்க எல்லோரும் வேண்டுவோம். அரசியல்வாதி என பெற்ற பெயரைவிட தமிழறிஞர் என்னும் பெயரே நிலைக்கும்.
இந்தப் பதிவால் அவரைப் பற்றிய எண்ணம் உயரவோ தாழவோ போவதில்லை (அப்படி ஏதேனும் ஒரு எண்ணம் இருந்தால்தானே? எல்லா அரசியல்வாதிகளும் ஒரே....) என்றாலும் புதியதாய் சில அந்நாளைய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சியே.
நன்றி ரமணி சார்.
அருமை. அவர் எப்போது தெரிந்து கொள்ளப் போகிறார்?
குடும்பப பாசத்தை விட
தொண்டர்களின் நேசமே உயரந்ததென
உலகுக்கு என்று நிரூபிக்கப் போகிறீர்கள் ?
சரியாகச் சொன்னீர்..
தி.தமிழ் இளங்கோ //
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது
எனக்கு தங்கள் கருத்து உடன்பாடில்லை
அந்த வகையில் பார்த்தால் எல்லோரும்
நல்லவர்களாகித் தானே போவார்கள்
நல்லவர்களுக்கும் நல்லவைகளுக்கும்
ஏது மதிப்பு ?
தங்கள் வரவுக்கும் அருமையான
குறளுடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
NKS.ஹாஜா மைதீன் //
இதற்கு பெயர்தான் வஞ்சபுகழ்ச்சி அணியோ!சூப்பர்....
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கீதமஞ்சரி //
இந்தப் பதிவால் அவரைப் பற்றிய எண்ணம் உயரவோ தாழவோ போவதில்லை (அப்படி ஏதேனும் ஒரு எண்ணம் இருந்தால்தானே? எல்லா அரசியல்வாதிகளும் ஒரே....)//
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி said...
அருமை. அவர் எப்போது தெரிந்து கொள்ளப் போகிறார்?
தெரிந்து கொள்வதற்கான சாத்தியக் கூறு
நிச்சயம் இல்லைதான்
ஆயினும் ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் //
சரியாகச் சொன்னீர்..//
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நீதி கேட்டு நெடும்பயணம் போன கேலிக்கூத்தும், கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக மிதப்பேன், உங்களின் செருப்பாக இருப்பேன் என்று எம்.ஜி.ஆர்.இருக்கும்போது மக்களிடம் புலம்பியதும், இந்திராவின் மீதான தாக்குதலில் உண்டான குருதிப் பெருக்கைக் கீழ்த்தரமாக வர்ணித்ததும் அவரின் அரசியலுக்கும், நாகரீகத்துக்கும் ஒரு சோறுதான்.
மீதமிருக்கும் ஒரு பானையை நம் தலையில் கட்டியது காலத்தின் கோலம்தான்.
கறுப்புச் சட்டையின் காரணம் ஜாதகப் பரிகார நிவர்த்திதான்.குரு போய் இப்போ கேது.
எத்தனை நிறம் மாற்றினாலும், அத்தனையும் விரைவில் வெளுத்து விடுகிறதே! :-))
//தி.தமிழ் இளங்கோ //
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது//
நண்பரே,
பிறந்தது முதல் பொய்,கபடு, சூது,பித்தலாட்டம் இவைகளை உபயோகித்தே வாழ்ந்து வரும் இவர் என்ன நன்மை செய்துள்ளார் ?எனக்கு ஒன்றும் புலப்படவில்லை.உமக்கு தெரிந்தால் சொல்லுங்கள்..
இனி இவர் திருந்தபோவதும் இல்லை எனவே இனி இவர் மக்களுக்கு செய்யக்கூடிய ஒரே நன்மை.. ஏச்சு,பேச்சு அல்லது மூச்சு ..இவற்றில் ஏதாவது ஒன்றை நிறுத்துவதுதான்.
REPLY TO … … Ganpat said...
Ganpat அவர்களுக்கு வணக்கம்! ” நான் எந்த கட்சியையும் சாராதவன் “ என்பதனை முதலிலேயே சொல்லி விடுகிறேன். ( எனது பதிவுகளே சொல்லும் ) எல்லா அரசியல்வாதிகளுமே குடும்பத்தாரை அரசியலுக்கு கொண்டுவரத்தான் செய்கிறார்கள். என்ன மற்றவர்கள் பிள்ளைகள், குடும்பத்தார் போன்று இவர்கள் இல்லை. அவ்வளவுதான்.
// பிறந்தது முதல் பொய்,கபடு, சூது,பித்தலாட்டம் இவைகளை உபயோகித்தே வாழ்ந்து வரும் இவர் என்ன நன்மை செய்துள்ளார் ?எனக்கு ஒன்றும் புலப்படவில்லை.உமக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.. //
இங்கு நான் கருணாநிதி என்ற தனி மனிதனின் புகழ் பாடவோ அல்லது அவர் செய்தவற்றை பட்டியலிடவோ வரவில்லை. ஒவ்வொரு ஆட்சியிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. ஒவ்வொரு அரசியல்வாதியும் தான் அதிகாரத்தில் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனைத்தான் அவர் செய்துள்ளார். எனது கேள்வி அவர் செத்த பாம்பு என்றால் அவரை மட்டுமே ஏன் அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? என்பதுதான்.
திரு.தமிழ் இளங்கோ அவர்களுக்கு வணக்கம்! ” நானும் எந்த கட்சியையும் சாராதவன் “ என்பதனை சொல்லி விடுகிறேன்.
ஆனால் தீவிர தி(ரு).மு.க எதிர்ப்பாளன்.
உங்களின் அந்த ஒரு வரிதான் (//அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது// ) என்னை பதிலெழுத தூண்டியது.இந்தியாவின் சாபம் இந்திரா;தமிழ்நாட்டின் சாபம் கருணா என்பது என் தனிப்பட்ட கருத்து.
மேலும் அவர் செத்த பாம்பு என சொல்லியுள்ளீர்கள். மன்னிக்கவும்.நேற்று கூட தன் பழைய சட்டையை உரித்து விட்டு புது சட்டைக்கு மாறிய ஜீவனுள்ள பாம்பு அவர்.
என்ன, 2016 ஆம் ஆண்டு வரை பற்கள கட்டப்பட்ட பாம்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நன்றி.
தன்னுடைய உறவுகளின் மூன்றாம் தலைமுறையைக்கூட ஊழலின் கறை விட்டுவைக்காத அளவுக்கு இவர் குடும்பத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்திருக்கின்றார் எனப்துதான் இப்போதைய இவரது சாதனை. தொண்டர்களிடம் நேசமா? இன்னும் மோசம் பண்ணாமல் இருந்தாலே போதும்.
சுந்தர்ஜி அவர்களுக்கு
தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல அவர்குறித்து
எழுத நிறைய இருக்கிறது.பதின் நீளம் கருதி
குறைவாகச் சொல்லிவிட்டேன்.தங்கள் விரிவான
கருத்துக்கு மனமார்ந்த நன்றி
சேட்டைக்காரன்//
எத்தனை நிறம் மாற்றினாலும், அத்தனையும் விரைவில் வெளுத்து விடுகிறதே! //
நிச்சயமாக
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Ganpat //
இனி இவர் திருந்தபோவதும் இல்லை எனவே இனி இவர் மக்களுக்கு செய்யக்கூடிய ஒரே நன்மை.. ஏச்சு,பேச்சு அல்லது மூச்சு ..இவற்றில் ஏதாவது ஒன்றை நிறுத்துவதுதான்.//
நீங்கள் குறிப்பிடுவது சரிதான்
ஆனால் அவர் எதையும் நிறுத்தமாட்டார்
நல்ல வேளை சமூக வலைத்தளங்களில்
அவரின் அகட விகடம் செல்லுபடியாகவில்லை
தங்கள் வரவுக்கும் விரிவான சரியான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Ganpat //
அவர் செத்த பாம்பு என சொல்லியுள்ளீர்கள். மன்னிக்கவும்.நேற்று கூட தன் பழைய சட்டையை உரித்து விட்டு புது சட்டைக்கு மாறிய ஜீவனுள்ள பாம்பு அவர்.
என்ன, 2016 ஆம் ஆண்டு வரை பற்கள கட்டப்பட்ட பாம்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.//
சென்றமுறை அவரின் சரிவின் போதே
அவர் மீண்டும் எழாமல் செய்திருக்கவேண்டும்
சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் அதன் மதிப்பை உணராமல்
ஆடியதால் வந்தவினை பாம்புக்கு உயிர் வந்துவிட்டது
அவரும் குடும்பத்திற்குள் கட்சியை கொணரவும்
கொள்ளையடித்ததை காப்பாற்றவும் கடைசி நேர முயற்சியாக
என்ன என்னவோ செய்கிறார்.இனி அவர் வெற்றி பெறுதல் கடினமே
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
shamimanvar //
தன்னுடைய உறவுகளின் மூன்றாம் தலைமுறையைக்கூட ஊழலின் கறை விட்டுவைக்காத அளவுக்கு இவர் குடும்பத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்திருக்கின்றார் எனப்துதான் இப்போதைய இவரது சாதனை.//
ஒரு சின்ன லாஜிக்
பட்டப்படிப்பு முடித்த கையோடு
அவருடைய பேரன் கோடிக் கணக்கான ரூபாயை
முதலீடு செய்து படம் எடுத்தது
கேட்டால் நிச்சயம் கணக்கை சரியாக வைத்திருப்பார்கள்
தாங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
உங்களுடைய வேலைகளை
எல்லாம் விட்டுவிட்டு
அவரை பற்றியே உங்கள்
சிந்தனைகளை ஓட விட்டீர்களே
பின்னூட்டத்தில்
பலரை சேர்த்துக்கொண்டு
எண்பது வயதைக் கண்ட பின்னும்
அவரை மற்றவர்கள் தன் பேச்சால்,
செயலால் ,எழுத்தால்
திரும்பி பார்க்க வைக்கிறாரே
அதுவே அவரின் வெற்றிக்கு காரணம்
அவரின் விதவிதமான தரிசனங்கள்
விமரிசனங்களுக்கு ஆளாகும்என்பது
அவருக்கு தெரியும் முன்பாக
அதை எப்படிஎதிர் கொள்ள வேண்டும்
என்பதையும் அறிவார் நன்றாக
நண்பரையும் பகைவராக
மாற்றுவதில் வல்லவர்
பகைவரையும் நண்பராக
மாற்றி கொல்வதில் சாணக்கியர்
ஏழைகளின் சிரிப்பில்
இறைவனை காண்பவர்
அவரின் விதவிதமான தரிசனங்கள்
விமரிசனங்களுக்கு ஆளாகும்என்பது
அவருக்கு தெரியும் முன்பாக
அதை எப்படிஎதிர் கொள்ள வேண்டும்
என்பதையும் அறிவார் நன்றாக
Pattabi Raman //
.நண்பரையும் பகைவராக
மாற்றுவதில் வல்லவர்
பகைவரையும் நண்பராக
மாற்றி கொல்வதில் சாணக்கியர்
ஏழைகளின் சிரிப்பில்
இறைவனை காண்பவர்
அவருடைய ஓயாத உழைப்பு
தோல்வியில் துவளாத தன்னம்பிக்கை
மேடைப் பேச்சுத் திறன் அனைத்தின் மீதும்
எனக்கும் அளவு கடந்த மதிப்பு உண்டு
ஆயினும் எல்லாம் தான் தன் குடும்ப சுகம் என்பதில் போய்
முடிவதுதான் பலருக்கும் அவர் மீதுள்ள விமர்சனம்
தங்கள் வரவுக்கும் அருமையான விரிவான
கருத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
மானமார்ந்த நன்றி
குடும்பப பாசத்தை விட
தொண்டர்களின் நேசமே உயரந்ததென
உலகுக்கு என்று நிரூபிக்கப் போகிறீர்கள் ?
good question
r.v.saravanan //
good question //
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment