மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும்
ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை
மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை
எந்த பொறியாளருக்கும
எந்த பொறியாளருக்கும
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும்பெண்கள்தான் காரணம் என்பதை
இந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை
ஏனெனில் இதனை ஆதியிலேயே
மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,
படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக
கலைக்கும் கல்விக்குமான கலைமகளை
துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்
காக்கும் திருமாலுக்கு இணையாக
கருணையும் செல்வத்திற்குமான திருமகளை
துணைவியாக்கி குதூகலித்திருக்கிறான்
அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக
ஆக்ரோஷமும் சக்தி மிக்கவளுமான மலைமகளை
இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்
கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
நவராத்திரியாக கொண்டாடியும் மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்
அதைப் போன்றே குழந்தையாய் முழுமையாக
அவளைச் சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவாக அன்னையாகஅவளைச் சார்ந்திருக்கும் நாளில்
கணவனாக அவளுக்கு இணையாக
சேர்ந்திருக்கும் நாளில் பின்னிருந்து இயக்கும்
சக்தியாக தாரமாக
வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய் தாங்கும் அன்புமிக்க மகளாக
மண்ணகத்தில் மங்கையர் எல்லாம்
கண்கண்ட முப்பெரும் தேவியராய்த்
திகழ்வதாலேயே மங்கையரைக் கௌரவிக்கும்
நாளாகவே இந்த நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
நாமும் மகிழ்கின்றோம்
அவர்களது தியாக உள்ளங்களை
இந் நாளில் சிறிதேனும்
நாமும் கொள்ள முயல்வோம்
அவர்களோடு இணந்து இந்தச்
சீர்கெட்ட சமூகம் சிறக்க
நாமும் நம்மாலானதைச் செய்வோம்
31 comments:
//அவர்களது தியாக உள்ளங்களை
இந் நாளில் சிறிதேனும்
நாமும் கொள்ள முயல்வோம் //
நவராத்திரி திருவிழா நாளில் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு மங்கையர்களைப் பற்றி சிந்தனை செய்து சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
/// கணவனாக அவளுக்கு இணையாக
சேர்ந்திருக்கும் நாளில் பின்னிருந்து இயக்கும்
சக்தியாக தாரமாக
வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய் தாங்கும் அன்புமிக்க மகளாக ///
சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்...
நன்றி சார்...
மங்கயரை கௌரவிக்கும் நாளாய் நவராதிரிரியை சித்தரிததற்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
நவராத்திரி கொண்டாடுவதன் பொருள் தெரிந்துகொண்டேன்...!
மிக்க நன்றி !!!
- இப்படிக்கு அனீஷ் ஜெ...
நல்ல நாளில் அழகான விளக்கத்துடன் நவராத்திரி பற்றியும் மங்கையர்களின் சிறப்பு பற்றி அழகாக கூறியுள்ளீர்கள்...
நவராத்திரி விழாவை, இக்கால பெண்களுக்கும் ஏத்தப்படி கொண்டாடலாம்ன்னு பண்ணிகைக்குள்ளும் புதுமையை புகுத்திய விதம் அழகு. பகிர்வுக்கு நன்றி ஐயா!
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்!
நல்ல பதிவு! பகிர்விற்கு நன்றி! "தாயுள்ளம்" உணர்த்தும் பதிவொன்றை இட்டுள்ளேன்!
பெண்மையை போற்றுவோம்னு வார்த்தைகளில் மட்டும் சொல்லாமல் வரிகளிலும் வாழ்வது கண்டு மகிழ்கிறேன் நன்றி ஐயா.
பெண்ணுக்குப் பெருமை சேர்க்கவே இத்தினங்கள் என்னும் உண்மைக் காரணம் புரிந்ததனால் இப் படைப்பு தனித்துவம் பெறுகின்றது . அதனாலேயே இத் தோற்றங்களும் இப்படிப் படைக்கப் பட்டன என்பதை விபரிப்ப ஒரு ஆக்கம் தரவுள்ளேன் . இந்து சமய குழுக்கள் தந்தை அனைத்தும் அர்த்தம் பொருந்தியவையே
முப்பெருந்தேவிகளும் கற்பனைகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! நம்வீட்டுப் பெண்களை அவர்களின் வடிவில் இருத்திப் பார்த்துக் கொள்வோம்!
நன்று..வாழ்த்துக்கள்!
//இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும்
பெண்கள்தான் காரணம் என்பதை
இந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை//
சந்தேகமில்லை - பெண்கள் இல்லாது வெற்றி ஏது....
இந்நாளில் மட்டுமல்ல எந்நாளும் அவர்களது தியாக உள்ளத்தை நாமும் கொள்வோம்.
சிறப்பான பகிர்வு. த.ம. 2
பெண்களை சிறப்பிக்கும் நவராத்திரி கவிதையும் கருத்தும் அருமை! பகிர்வுக்கு நன்றி!
நவராதிரிசிறப்பை சிறப்பாக சொல்லி இருக்கீங்க.மங்கயைராய்ப்பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா.
அறிந்து கொண்டேன் நவராத்திரியின் பொருளை..
பகிர்வுக்கு நன்றி சார் (3)
என்னத்தைச் சொல்லி என்னத்தைச் செய்ய....
பல பெண்களிற்குச் சீர் கெட்ட வாழ்வு தானே!
முதலில் அனைவரும் வீட்டில்
ஒழுங்கைப் பேணினால் நாடு உருப்படும்.
வேதா. இலங்காதிலகம்.
த.ம 4
மிக ஆணித்தரமான அழுத்தமான உவமைகளில் தொடங்கி மிக அற்புதமாக வரைந்த கவிதை.. பெண்கள் எனும் சக்தி விஸ்வரூபம் எடுத்தால் வீட்டுக்கும் நாட்டுக்கும் சுபிக்ஷம் என்று உணர்த்த முப்பெரும் தேவியரையே உதாரணமாகச்சொல்லி சென்ற கவிதை வரிகள் மிக மிக அருமை ரமணிசார்.
எத்தனை அழகான ஆழ்சிந்தனை உவமை இது…. மரம் பல ஆண்டு காலம் பழமையாக இருக்குன்னா அதற்கு மூலக்காரணம் வேர் தான் என்றும்… நட்டுவைத்த மரம் அமோகமான விளைச்சலை தருகிறது என்பதற்கும் வேர் தான் காரணம் என்பதை மிக மிக அழகாக சொல்லி இருக்கீங்க ரமணி சார் உண்மை தான்… விவசாயி மட்டும் அறிந்ததால் தான் அன்னம் தரும் பூமியை தன் குலத்தை காக்கும் தெய்வமாக வழிபடுகிறான்… எத்தனை சிறந்த கல்வி படித்து மென்மேலும் உயர்ந்தாலும் விவசாயத்தொழிலை தன்னை உருவாக்கிய தாய் என்றுச்சொல்லி கர்வப்படுகிறான்….
அதேபோல் பாலம் அமைத்தாலும், கட்டிடங்கள் பலமாடி கட்டினாலும் அஸ்திவாரம் உறுதியானதாய் இருந்தால் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இல்லை என்றால் பஸ் போகும்போது பாலம் சரியலாம்…. சிமெண்ட் கலப்படம்.. கமிஷன் பட்டுவாடா இதில் பலமாடி கட்டிடங்கள் சரியலாம்.. இதெல்லாம் கட்டிடப்பொறியாளர்கள் அறிந்திருப்பதை மிக அழகிய உவமையாக ஆரம்பித்து….
உயிர்ப்பூ உலகத்தைப்பார்க்கும்போது முதன் முதல் குழந்தையின் அழுகுரலை கேட்கும் பேறுபெற்றவளாக தாய் தன் பொறுப்பினை உணர்ந்து உலகுக்கு தன் பிள்ளையை ஒரு நல்லவனாக உருவாக்கும் மிகப்பெரிய கடமையாக செய்து அதில் வெற்றியும் பெறுகிறாள்….
சமூகம் என்பது எங்கிருந்து தொடங்குகிறது? நம்மிடமிருந்து… நம் வீட்டிலிருந்து…. நம் வீட்டில் நம் குழந்தைகளை கல்வி கற்கவைக்கும்போதே ஒழுக்கமும், அறிவும், புத்திசாலித்தனமும், உதவும் தன்மையும், துன்பப்படுவோரைக்கண்டாள் இளகும் தன்மையும், நல்லவற்றை இனம் கண்டு தீயவற்றை பிரிக்கவும் கற்றுத்தருகிறாள் தாய்… குழந்தைக்கு முதல் ஆசான் தாயில் இருந்து தான் தொடங்குவதே…. அம்மா சொல்லு அம்ம்ம்ம்ம்ம்மா… அப்பா சொல்லு அதோ அப்பா அப்ப்ப்ப்ப்பா…. குழந்தையும் தவழ்ந்து தட்டு தடுமாறி எழுந்து நல்லவை கற்று வல்லமைப்பெற்று சமூகத்தை உருவாக்குகிறது… ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு நல்லப்பிள்ளையை வளர்க்கும் பொறுப்பினை தாய் ஏற்கும்போது அந்த குழந்தைகளின் சமூகம் வெற்றிகளையும் சாதனைகளையும் உருவாக்கி முன்னேறுகிறது….சமூகத்தின் வளர்ச்சிக்கு முழுப்பங்காய் தன்னை அர்ப்பணிக்கிறது…
அன்றையக்காலம் போல அல்லாமல் பெண்கள் ஒரு காலக்கட்டத்தில் வயசு இத்தனை ஆனதும் பள்ளிக்கு போவதை நிப்பாட்டிவிடுவார்கள்…. ஆனால் இன்றோ பெண்கள் விண்ணிலும் மண்ணிலும் அரசியலிலும் குடும்பத்திலும் மிக அற்புதமான செயல்களால் சாதித்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறார்கள்… அதை மிக அருமையாக கவிதை வரிகளில் விவரித்த விதம் சிறப்பு ரமணிசார்…
அருமையான நவராத்திரி கவிதை....
கடவுளாக இருந்தாலும் சரி
சாதாரணமானவனா இருந்தாலும் சரி
சக்தி இல்லாமல் இருக்கவா சாதிக்கவா முடியும் .... :))
படைத்தல்….
படைத்ததை காத்தல்….
தீமையை அழித்தல்….
இந்த மூன்று தொழில்களை சிறப்புற செம்மையாகச்செய்யும் மூவேந்தர்களுடைய இணையும் அருகே இருப்பது தான் அவர்களின் பலமே என்று மிக அழுத்தமாக ஆணித்தரமாக சொன்னது சபாஷ் என்று சொல்லவைத்தது. நானும் பெண் என்பதால் தானோ? இல்லை…
எந்த ஒரு காரியம் தொடங்குவதிலும் செயல்படுத்துவதிலும் பொறுமையுடன் யோசித்து அதன்பின் ஈடுபடுவது பெண்களின் மிக சிறப்பான குணங்கள்….
ஆயிரம் அப்பா சேர்ந்தாலும் ஒரு அம்மா ஆகமுடியாது…. உண்மையே.. அப்பா இல்லாது ஒரு பெண் தைரியமாக திண்மையாக ஒழுக்கமாக இருந்து தன் பிள்ளையை வளர்த்து ஆளாக்க உழைத்து பாடுபட்டு தந்தையாகவும் இருந்து காப்பாள் குழந்தையை.. தந்தைக்கு அத்தனை பொறுமை இருப்பதில்லை…
உதாரணத்திற்கு….
குழந்தை ஓடி வரான் பாரும்மா என் பைல் அவன் கால் பட்டு அழுக்காகிவிடப்போகிறது ஜாக்கிரதை இது அப்பா…
ஐயோ என்னங்க குழந்தை என்ன அழகா அடி எடுத்து வைக்கிறான்… பட்டுக்குழந்தை ஃபைலில் கால் தடுக்கி கீழே விழுந்துரப்போகிறான் கவனம்..
தந்தைக்கு கடமை. தாய்க்கோ தன் பிள்ளையைப்பற்றிய கவலை…
பெண்கள் எப்போதும் எல்லா இடத்திலும் சாதித்து முன்னேறுவது மட்டுமில்லாமல் நற்செயல்கள் புரிவதிலும் குடும்பம் அமைதியாக செல்வதிலும் பெண்களின் பங்கு மிக முக்கியமானது…
கல்யாணம் ஆனதுமே கணவன் நினைப்பது என்னவென்றால்…. மனைவி நம் அம்மா அப்பா தம்பி தங்கை எல்லோருடனும் அட்ஜெஸ்ட் செய்து நல்ல மருமகள் என்ற பெயர் வாங்கனுமே….
ஏனெனில் திருமணம் என்பது பெண்களுக்கு இடப்பெயர்ச்சி போல வேரோடு ஒரு இடத்தில் இருந்து ஒரு செடியை பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவது போல…
பெண்களும் மாமியாரை தன் தாயாக நினைத்து தன் கணவருடன் பிறந்தவர்களை அனுசரித்து மகளாகவும் அன்பாகவும் வாழ்க்கையில் தன் பாசத்தை காட்டும்போது அங்கே சுபிக்ஷம் நிலவுகிறது….
அதை மிக அழகாக கவிதையில் மேன்மைப்படுத்தி பெண்களின் தியாகங்களை வகைப்படுத்தி சொன்னது மிக நெகிழ்வான விஷயம் ரமணி சார்…
தாய் மட்டும் தான் குழந்தைக்கு ஊட்டும் கவளத்தில் கூட கணக்கு பார்க்கமாட்டாள்.. இப்ப நாம் கொடுக்கும் பாசம் நாளை நாம் முதியவர் ஆனப்பின் திரும்ப தன் மகன் தனக்கு கொடுக்கனும் என்று எதிர்ப்பாராமல் தன்னலம் கருதாது தன் முழுமையான அன்பை பிள்ளைகளுக்கு கொடுப்பார்…
நவராத்திரி என்ற சிறப்பே பெண்களுக்கான தினமாக ஆணித்தரமாக சொன்னது மகிழ்வளிக்கிறது ரமணிசார்….
அத்தகைய தியாகங்கள் புரியும் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதையில் அற்புதமாக சொல்லி இருக்கீங்க ரமணிசார்…
மனம் நிறைந்த தசரா வாழ்த்துகள் ரமணிசார் மனம் நிறைந்த அன்புநன்றிகள் பெண்களை உயர்வாய் கவிதையில் பகிர்ந்தமைக்கு…
Penmaiyai kondata than vendum. Arumai!
சீர்கெட்ட சமுதாயம் சீராக்கவா சிறக்கவா..?நல்ல சிந்தனை .வாழ்த்துக்கள்.
தி.தமிழ் இளங்கோ //
நவராத்திரி திருவிழா நாளில் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு மங்கையர்களைப் பற்றி சிந்தனை செய்து சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!//
முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
.
சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்...//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விமலன் //
மங்கயரை கௌரவிக்கும் நாளாய் நவராதிரிரியை சித்தரிததற்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
*anishj* //
நவராத்திரி கொண்டாடுவதன் பொருள் தெரிந்துகொண்டேன்...!
மிக்க நன்றி !!!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விஜயதசமி நன்நாளில் பெண்களைப் போற்றும் சிறப்பான கவிதை மகிழ்கின்றேன்.
படைத்த உங்களுக்கு பாராட்டுகள்.
"கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்" miga arumai
மாதேவி //
விஜயதசமி நன்நாளில் பெண்களைப் போற்றும் சிறப்பான கவிதை மகிழ்கின்றேன்.
படைத்த உங்களுக்கு பாராட்டுகள்.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Balaji //
"கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்" miga arumai//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மஞ்சுபாஷிணி //
வழக்கம்போல் பதிவின் உயிர் அறிந்து
இடப்பட்ட அருமையான விரிவான
பின்னூட்டம்.
என் பதிவை பொட்டிட்டு பூவிட்டு
அழகாக்கிவிடும் உங்கள் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
Post a Comment