புரிந்ததை
புரிந்து கொண்டபடி
புரியும் படியும்
சொல்லிப் போனேன்
இது சராசரிக்கும் கீழே என
முகம் சுழித்துப் போனார்கள்
புரியாததை
நான் புரிந்து கொண்டபடி
புரியும்படியே
சொல்லிப் போனேன்
இது பரவாயில்லை என்றார்கள்
புரியாததை
புரிந்து கொள்ளாமலேயே
புரியாதபடியே
சொல்லிப்போகிறேன்
அருமை என்கிறார்கள்
இதுவரை எனக்கு
இதில் எது சரியெனத் புரியவில்லை
உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா ?
புரிந்து கொண்டபடி
புரியும் படியும்
சொல்லிப் போனேன்
இது சராசரிக்கும் கீழே என
முகம் சுழித்துப் போனார்கள்
புரியாததை
நான் புரிந்து கொண்டபடி
புரியும்படியே
சொல்லிப் போனேன்
இது பரவாயில்லை என்றார்கள்
புரியாததை
புரிந்து கொள்ளாமலேயே
புரியாதபடியே
சொல்லிப்போகிறேன்
அருமை என்கிறார்கள்
இதுவரை எனக்கு
இதில் எது சரியெனத் புரியவில்லை
உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா ?
55 comments:
புரிகிறது ஐயா! நம்ம புரியாத மாதிரி ஏதாச்சும் சொன்னாத்தான் நம்மள ஞானினு நெனச்சுடராங்களே! பகிர்வுக்கு நன்றி!
த.ம 1
:)
புரிந்தும் புரியாத மாறி இருக்கு சார்!
தெரிஞ்சதைச் சொன்னா இவ்வளவுதானா என்று தோன்றிவிடும். தெரியாததைச் சொன்னாத்தான் என்னமோ சொல்றாங்க, பெரிய விஷயமாத்தான் இருக்கும் என்று நினைப்பதுதான் உலக வழக்கம்.
எல்லாம் பப்ரிந்தவர்களென எவரும் இல்லை,
எல்லாவற்றையும் புரிந்து கொள்ளாதவர் என
எவரும் இல்லை.எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிடுவதுமில்லை.
ஆஹா தூள் கிளப்பறீங்களே அய்யா!
கை துருதுருங்கிறதே!!
உங்கள் அனுமதியுடன் இன்னும் இரண்டு வகைகள்..
புரியாததை
புரிந்து கொண்டதை போல
புரியாதபடியே
சொல்லிப் போனேன்
குருவே வணங்குகிறோம் என்றார்கள்
புரிந்ததை
புரிந்து கொள்ளாததை போல
புரிந்து கொள்ள முடியாதபடி
சொல்லிப்போகிறேன்
தலைவா நீ வாழ்க என்கிறார்கள்
=========================================
பி.கு:
புரிந்ததை
நான் புரிந்து கொண்டபடி
சற்றே புரியாதபடி
சொல்லிப் போனேன்
இது ரமணி ஸார் பாணி அன்றோ
என்கிறார்கள்.
புரியாததை
புரிந்து கொள்ளாமலேயே
புரியாதபடியே
சொல்லிப்போகிறேன்
அருமை என்கிறார்கள்
//////////////////////////////
பதிவுலகிலும் பலர் இப்படித்தான்..... நானும் கூட
நன்றாக இருக்கிறது சார் (5)
கலக்கிட்டீங்க சார்... tm5
அதுதான் உலகம்!நாம சொல்றது புரியலேன்ன நாமதான் பெரிய ஆள்!அருமை சார்
த.ம.7
புரிந்தது! புரிந்தது! :-)
ஓ.... “அது“ வின் தொடர்தான் தான் “இது“வோ...?
புரிகிறது ரமணி ஐயா.
வாழ்க்கையே ஒரு புரியாத புதிர்தானே!
புதுசா ஏதாவது தெரியாத விஷயத்தை சொன்னால் அருமை என்பார்கள்! தெரிந்ததை தெளிவாக சொன்னால் இதுதான் என்றாகிவிடுகிறது சார்! சரியா??
///பழனி.கந்தசாமி said...
தெரிஞ்சதைச் சொன்னா இவ்வளவுதானா என்று தோன்றிவிடும். தெரியாததைச் சொன்னாத்தான் என்னமோ சொல்றாங்க, பெரிய விஷயமாத்தான் இருக்கும் என்று நினைப்பதுதான் உலக வழக்கம்.///
நான் சொல்லவந்ததை திரு. பழனி.கந்தசாமி அவர்களே சொல்லிவிட்டார்
purinthathu!
puriyala!
avaravarkal kannottam kondathu ayya!
enakku purikirathu ungal ezhuthukkal..
சுடர்விழி //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் s//
கொஞ்சம் குழப்பி விட்டேனோ ?
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
NKS.ஹாஜா மைதீன் //
புரிந்தும் புரியாத மாறி இருக்கு சார்!//
கொஞ்சம் குழப்பி விட்டேனோ ?
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பழனி.கந்தசாமி //.
தெரிஞ்சதைச் சொன்னா இவ்வளவுதானா என்று தோன்றிவிடும். தெரியாததைச் சொன்னாத்தான் என்னமோ சொல்றாங்க, பெரிய விஷயமாத்தான் இருக்கும் என்று நினைப்பதுதான் உலக வழக்கம்.//
இதைத்தான் வேறு மாதிரி
சொல்ல முயற்சித்துள்ளேன்
தங்கள் வரவுக்கும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விமலன் //
என் பதிவைப் போலவே
பின்னூட்டமும் கொடுத்துள்ளதை
மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்
இப்ப நான் புரிந்து கொண்டதை அருமைன்னுதான் சொல்வேன்.
த.ம.10
உண்மைதான் ரமணி சார் உங்கள் வரிகள் இன்றைய இலக்கியம் என்று சொல்லி கொண்டு அடையாளபடுத்தும் சிலரின் எழுத்துகளை நினைவு படுத்துகிறது எதற்கு எழுதுகிறார்கள் புரியாத எழுத்துகளை என்று பல நேரம் யோசித்தும் உண்டு ஆனால் அதற்க்குத்தான் மதிப்பு அதிகம் நம் சமூகத்தில் இன்னும் கூட சொல்ல வேண்டும் என்றால் நேர்த்தியான ஓவியத்தை விட அலங்கோலமாய் சிதறி கிடக்கும் நிறங்களை கொண்டாடுகிறார்கள் அப்படிதான் புரிந்து கொண்டேன் நீங்கள் சொல்ல வந்ததை .......ஒரு வட்டத்திற்குள் சிக்காத வார்த்தைகள் உங்களுடையது வாழ்த்துக்கள்
ஐயா நீங்களுமா ? எனக்கு புரியள
புரியாத புதிர்தான், இல்லையா?
அருமை.
என்னால் சற்று நேரம் கழித்தே நீங்கள் சொல்ல வந்ததை விளங்கிக் கொள்ள முடிந்தது. எல்லாருக்கும புரியும் படி எல்லாவற்றையும் சொல்லி விடுதல் இயலாத விஷயம்தான் இல்லையா... ஆகவே புரியவில்லை என்று எவர் சொன்னாலும் நீங்கள் நீங்களாகவே எழுதிக் கொண்டிருங்கள் என்பதே என் எண்ணம்.
Ganpat //
புரிந்ததை
நான் புரிந்து கொண்டபடி
சற்றே புரியாதபடி
சொல்லிப் போனேன்
இது ரமணி ஸார் பாணி அன்றோ
என்கிறார்கள்.வழக்கம்போல் மிகச் சரியாகப் புரிந்து
அருமையாக பின்னூட்டமிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி.
(என் பதிவை விட தங்கள் பின்னூட்டம்
மற்றும் மஞ்சுபாஷிணி,அப்பாத்துரை அவர்களின்
பின்னூட்டம் படிப்பதற்கென்றே பலர்
என் பதிவுக்கு வருகிறார்கள் என்பதை
இங்கு பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்)
சிட்டுக்குருவி //
பதிவுலகிலும் பலர் இப்படித்தான்..... நானும் கூட
நன்றாக இருக்கிறது சார் //
ரசிக்கும் படியான அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
கலக்கிட்டீங்க சார்...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
குட்டன் //
அதுதான் உலகம்!நாம சொல்றது புரியலேன்ன நாமதான் பெரிய ஆள்!அருமை சார்//
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது
அதைத்தான் நானும் சொல்லமுயன்றிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சேட்டைக்காரன் //
புரிந்தது! புரிந்தது! :-)
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் //
ஓ.... “அது“ வின் தொடர்தான் தான் “இது“வோ...?
மிகச் சரியாகப் புரிந்து
பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தியமைக்கு
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன் //
புதுசா ஏதாவது தெரியாத விஷயத்தை சொன்னால் அருமை என்பார்கள்! தெரிந்ததை தெளிவாக சொன்னால் இதுதான் என்றாகிவிடுகிறது சார்! சரியா??//
மிகச் சரி
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தெரிஞ்சதைச் சொன்னா இவ்வளவுதானா என்று தோன்றிவிடும். தெரியாததைச் சொன்னாத்தான் என்னமோ சொல்றாங்க, பெரிய விஷயமாத்தான் இருக்கும் என்று நினைப்பதுதான் உலக வழக்கம்.///
மிகச் சரி
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எனக்கு நன்றாகவே புரிகின்றது. இது தான் வாசகர்கள் . எல்லோரையும் திருப்திப்படுத்தவும் முடியாது . எல்லோருக்கும் ஏற்றது போல் எழுதவும் முடியாது.சிலருக்கு சில விடயங்களிலேயே ஆர்வம் இருக்கும் . சிலர் பதிவிட வேண்டும் என்பதற்காக மேலோட்டமாக வாசிப்பார்கள் . எமக்கு அவர்களை விளங்கும் வகையிலேயே பதில் இடுவார்கள். நீங்கள் நிச்சயமாக உங்களுக்குப் புரியாததை எழுதியதே கிடையாது.உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகின்றன . அதனால் சாதாரணமாகவே உங்கள் பாணியில் நீங்கள் எழுதலாம். சஞ்சலம் தேவை இல்லை
புரிந்ததும் புரியாததும் இரண்டுமே கவிதையாக அசத்துகின்றது.
ரமணி சார், இந்தக் குழப்பம் எனக்குமுண்டு. ஆனால் நான் என் எழுத்துக்களில் COMPROMISE செய்து கொள்வதில்லை.அப்படி செய்யப் போனால் இருவர் கழுதை சுமந்த கதையாகிவிடும்.
Arumai.
புரிந்தும் புரியாமலும் புரியாமல் புரிந்தும் புதிராக ஒரு கவிதை அய்யா...
புரியாததை
நான் புரிந்து கொண்டபடி
புரியும்படியே
சொல்லிப் போனேன்
இது பரவாயில்லை என்றார்கள்//அசத்துகின்றது பகிர்வுக்கு நன்றி!
அனுபவ வரிகள் அய்யா அருமை
சந்திரகௌரி //
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகின்றன . அதனால் சாதாரணமாகவே உங்கள் பாணியில் நீங்கள் எழுதலாம். சஞ்சலம் தேவை இல்லை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
புரிந்ததும் புரியாததும் இரண்டுமே கவிதையாக அசத்துகின்றது.//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
ரமணி சார், இந்தக் குழப்பம் எனக்குமுண்டு. ஆனால் நான் என் எழுத்துக்களில் COMPROMISE செய்து கொள்வதில்லை.அப்படி செய்யப் போனால் இருவர் கழுதை சுமந்த கதையாகிவிடும்.
மிகச் சரியான கருத்து
வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ayesha Farook //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாலதி //
//அசத்துகின்றது பகிர்வுக்கு நன்றி!//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் //
அனுபவ வரிகள் அய்யா அருமை //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புரியாப் புதிர் - புரியாத புதிர் !
இராஜராஜேஸ்வரி //
புரியாப் புதிர் - புரியாத புதிர் !//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//Ganpat //
புரிந்ததை
நான் புரிந்து கொண்டபடி
சற்றே புரியாதபடி
சொல்லிப் போனேன்
இது ரமணி ஸார் பாணி அன்றோ
என்கிறார்கள்.வழக்கம்போல் மிகச் சரியாகப் புரிந்து
அருமையாக பின்னூட்டமிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி.
(என் பதிவை விட தங்கள் பின்னூட்டம்
மற்றும் மஞ்சுபாஷிணி,அப்பாத்துரை அவர்களின்
பின்னூட்டம் படிப்பதற்கென்றே பலர்
என் பதிவுக்கு வருகிறார்கள் என்பதை
இங்கு பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்)//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்... வருவேன் பின்னூட்டமிட.... எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு இது...
புரியுது ஆனா புரியாத மாதிரி தெரியுது
கவியாழி கண்ணதாசன் //
புரியுது ஆனா புரியாத மாதிரி தெரியுது//
பதிவைப் போலவே பின்னூட்டமிட்டது
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்
Post a Comment