Monday, October 1, 2012

கொள்கைகளுக்கு அஞ்சலி செய்வோம்

ஆண்டுக்காண்டு
வலிமை மிக்க ஆயுதங்களை
உற்பத்தி செய்யதலும்
அதன் பயன்படுத்துவதற்கு இசைவாக
நாட்டுக்கு நாடு
வன்மம் வளர்த்தலுமே
சரியானதாக இருக்கிற உலகுக்கு
நிராயுதபாணிப் போராட்டத்தைப் போதித்த
"அவரின்" போதனை எப்படிச் சரிவரும் ?

அன்னிய முதலீடுகளும்
பன்னாட்டு நிறுவனங்களுமே
நம் கால் வயிறுக்கு
கஞ்சி ஊற்றும் என
நம்பி செயலபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு
"அவரின்"கிராமப் பொருளாதாரமும்
சுயசார்புத் தத்துவங்களும்
எப்படிச் சரியானதாக இருக்கும் ?

நுகர்வுக் கலாச்சாரமே
பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டும் எனவும்
உணர்வைத் திருப்திப்படுத்துதலே
வாழ்வின் உன்னத நோக்கம் என்பதில்
சந்தேகமின்றி இருக்கும் நமக்கு
"அவரின்" அமைதித் தேடலும்,புலனடக்கமும்
எப்படிப் பொருந்தி வரும் ?

பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்
அரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்
அதுதான் வாழ்க்கை நெறியென
ஆகிப்போன நிலையில்
"அவரின் "சத்தியமேவ ஜெயதே
எப்படி உதவக் கூடியதாய் இருக்கும் ?

கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி
அவ்வழி அயராது இன்றுபோல்
என்றும் தொடர்வோம்
இருபதில் வல்லரசாய் உயர
அயராது முயல்வோம்
 "
வாழ்க காந்தி மகான் "

34 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி

அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.

தி.தமிழ் இளங்கோ said...

அன்றைக்கு ஒரு காந்தி இந்த இந்தியாவிற்கு தேவைப்பட்டார். இன்றைக்கு எல்லாமே மாற்றம் கண்டுள்ளது. எனவே உங்கள் கூற்றுப்படி அவருடைய கொள்கைகளுக்கு அஞ்சலி செய்வோம். வாழ்க! காந்தி மகான்!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆம். மகாத்மா அவர்களுக்கு மட்டுமல்ல அவரது கொள்கைகளுக்கும் அஞ்சலி செலுத்த வேண்டிய நாள் தான் இந்நாள்.

Sasi Kala said...

பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்..
ஆமாம் இவை இல்லாமல் ஒரு நாள் கடந்தால் அது கனவாக இருக்குமோ ?

புலவர் சா இராமாநுசம் said...ஒவ்வொரு பகுதியும் காந்தீயத்தைப் பறை சாற்ற அதைக் கருத்தில் கொள்ளாதவர்களின் ஆட்சிக்கு தரப்பட்ட சவுக்கடி! நன்று சகோ!

செய்தாலி said...

//கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி
அவ்வழி அயராது இன்றுபோல்
என்றும் தொடர்வோம்
இருபதில் வல்லரசாய் உயர
அயராது முயல்வோம்//

மிக சரியாக சொன்னீர்கள் சார்

திண்டுக்கல் தனபாலன் said...

/// பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்
அரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்
அதுதான் வாழ்க்கை நெறியென
ஆகிப்போன நிலையில் ///

உண்மை வரிகள்...

மாற வேண்டும்...

ராஜி said...

கொள்கைகளுக்கு அஞ்சலி செய்வோம்
>
தலைப்பே நாட்டு நடப்பை புட்டு புட்டு வச்சுட்டது ஐயா.
பகிர்வுக்கு நன்றி

NKS.ஹாஜா மைதீன் said...

#பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்
அரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்
அதுதான் வாழ்க்கை நெறியென
ஆகிப்போன நிலையில்
"அவரின் "சத்தியமேவ ஜெயதே
எப்படி உதவக் கூடியதாய் இருக்கும் ?#

சமுக நிலைமைகளை சாட்டையால் அடிப்பதுபோல சொல்லி உள்ளீர்கள்.....

r.v.saravanan said...

கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி

சாட்டை அடி வரிகள் சார்

T.N.MURALIDHARAN said...

காந்தியின் கொள்கைகளுக்கு அஞ்சலு செலுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்களே என்ற ஆதங்கம் அத்தனை வரிகளிலும் பிரதிபலிக்கிறது.
த,ம.9

Ayesha Farook said...

அண்ணல் போன்ற தலைவர் ஒருவர் மீண்டும் இந்தியாவிற்கு கிடைக்குமா என்கிற ஏக்கம் உள்ளது அய்யா!...
//கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி
அவ்வழி அயராது இன்றுபோல்
என்றும் தொடர்வோம்
இருபதில் வல்லரசாய் உயர
அயராது முயல்வோம்//

கண்டிப்பாக முயல்வோம்.. நல்ல படைப்பு...

குட்டன் said...

காந்தியம் என்பதுநிச்சயம மற்றக்கப்பட்டு விட்டது!
நல்ல பகிர்வு

குட்டன் said...

த.ம 10

G.M Balasubramaniam said...


நல்ல ஒரு ஒப்பீட்டுக் கவிதை. வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

காந்தியத்தையும் நாட்டு நடப்பையும் பற்றி நல்லதோர் படைப்பு!

s suresh said...

உண்மையான உணர்ச்சி பூர்வமான வரிகள்! கொள்கைகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்! நல்ல படைப்பு! நன்றி!

அம்பாளடியாள் said...

மிகவும் சரியான கருத்து மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

Ganpat said...

முற்றிலும் உண்மை அய்யா!
நமக்கு வருடத்தில் 364 நாட்கள் ஜனவரி 30.
ஒரே ஒரு நாள் மட்டும்தான் அக்டோபர் 2

அருணா செல்வம் said...

ஆமாம் ரமணி ஐயா...

அவரது கொள்கைகளுக்கும் அஞ்சலி செலுத்துவோம்....

அருமையான பதிவு ஐயா. நன்றி.

கோவை2தில்லி said...

நல்லதோர் படைப்பு....

Anonymous said...

நல்லதோர் சாட்டையடி !

விமலன் said...

காந்தி மகான் வாழ்க,அவரது கொள்கைகள் ,,,,,,,,,?அவரது கொள்கைகள் மட்டுமல்ல,வழ்வின் குறைந்த பட்ட நெறிமுறைகள் அழிந்து வருவது கண்கூடு,இந்த அவலம் எப்பொழுதிலிருந்து ,ஏன் நிகழ்கிறது என்பது மீள் ஆய்வுகுறீய விசயமாய் நம்மில்/நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

காந்தியின் தியாக வழிகளே அவருடைய பெருமையைக் குலைக்கும் தடங்களாயின என்று அவ்வப்போது நினைப்பதுண்டு.

அப்பாதுரை said...

"கிராமப் பொருளாதாரம்" இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவருவது மிகவும் சிரமம் - impractical. இதெல்லாம் அறுநூறு ஆண்டுகளாகச் சுரண்டியவர்கள் செய்த கொடுமை. இன்றைய அரசியல்வாதிகளின் சுரண்டலுக்கு குரல் கொடுக்கிறோம் - கிழக்கிந்தியக் கம்பெனியும் இங்கிலாந்தும் சுரண்டிய சுரண்டலின் விளைவு இது என்ற உண்மை அடிவயிற்றில் இருந்து எரிகிறது. சுரண்டியது போக ஊழலை வளர்த்ததும் அவர்கள் தான். இதை எங்கே முட்டிகொண்டு அழுது தீர்ப்பது?

VENKAT said...
This comment has been removed by the author.
VENKAT said...

விடுமுறை விடுவதுதான் கொண்டாடுவது என்று அர்த்தமா?

ரூபாய் நோட்டில் இருப்பதால் பெயரை மட்டும் ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி காந்தியைப் பற்றியோ அவர் கொள்கைகள் பற்றியோ 50+ ல் இருக்கும் சிலர் ஞாபகம் வைத்திருக்கலாம்.

ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையைத் தொலைக் காட்சிமுன் அருமையாகக் கொண்டாடுபவர்களே அதிகம்.

வாழ்க இந்தியா. வளர்க அதன் பன்னாட்டுக் கொள்கை.

Anonymous said...

இப்படிச் சொல்ல மட்டும் தான் முடியம். அனைத்தையும் இழந்து இலஞ்சம் ஊழல் மலிந்தது தான் மிச்சம். அனைத்தும் சரியாகச் சொல்லப்பட்டுள்ளது. நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

அமைதிச்சாரல் said...

அருமையானதோர் படைப்பு.. அவர் பிறந்த தினத்தில் மட்டும் நினைவுகூர்ந்து விட்டு பின் மறந்து விடுவதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Seeni said...

nalla sonneenga ayya!

ஸாதிகா said...

இன்றைய நிலைமையை சட்டையடி வரிகளால் விளாசித்தள்ளி இருக்கின்றீரக்ள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_3.html) சென்று பார்க்கவும்...

நன்றி…

Suresh Kumar said...

அருமை ரமணி சார், அதுவும் "அவரின்" என்று நீங்கள் அழுத்தி சொல்லும்போது, காந்தியை பற்றி அதிகம் நினைக்க தோன்றியது. அருமையான பதிவிற்கு நன்றி !

cheena (சீனா) said...

அன்பின் ரமணீ - மகாதமாவின் கொள்கைகள் இன்று கடைப்பிடிக்கப் படவில்லை. காரணம் பலப்பல - இருப்பினும் அவரை மறக்க இயலுமா ? பிறந்த நாளிலாவது நினைவு கூர்வோம். நல்வாழ்த்துகள் ரமணீ - நட்புடன் சீனா

Post a Comment