Thursday, March 10, 2016

பாழுங்கிணற்றில் வீசுதல் கூட.....

குடிகாரர்களும்
கொள்ளைக்காரர்களும்
ஆணவக் காரர்களும்

நம் வீட்டு வாசலில்
விதம் விதமாய்
வேஷமிட்டப்படி
விதம் விதமாய்க்
கோஷமிட்டப்படி

நாம்
கையிலேந்தி இருக்கும்
கூர்மிகு வாளினைக் கோரியபடி..

பாதுகாப்பாய்
வைத்துக் கொள்வதாய்
வாக்குறுதி கொடுத்தபடி.

 தனக்கென இல்லை
நம்மைக் காக்கத்தான் என
சத்தியம் செய்தபடி...

முன் அனுபவங்கள்
கொடுத்த மிரட்சியில்
நாம் அவர்களைக் கடந்துப் பார்க்க

 கைகளற்றவன் மீதமர்ந்த
கால்களற்றவனும்

காது கேளாதவன்
வழிகாட்டக் கண்களற்றவனும்...

ஒருவர் தயவில் ஒருவர்
நம் இல்லம் நோக்கி
நகர்ந்து வர....

குழம்பத் துவங்குகிறோம் நாம்
கனக்கத் துவங்குகிறது
அந்தக் கூரிய வாள்

தகுதியற்றவர்களிடம்
கொடுத்து நோவதை விட
கொடுத்துச் சாவதை விட..

கூரிய வாளின்
சக்தி அறிந்திருந்தும்
அதன் பலன் புரிந்திருந்தும்

பாழுங்கிணற்றில் வீசுதல் கூட
சரிதானோ எனப்படுகிறது
"அது  "முட்டாள்த்தனம் என அறிந்திருந்தும்....

10 comments:

ஸ்ரீராம். said...

ஆம், மறுபடியும் ஒரு தேர்தல் நாடகம் வந்து விட்டது!!

RAMJI said...

மாற்றம் வரும் நல்லதாகவே வரும்

மீரா செல்வக்குமார் said...

காலத்திற்கு ஏற்ற கவிதை...

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் கோபம் புரிகிறது குரு, ஆனால் அவனில்லை என்றால் இவன் என்று அல்லவா திருடர்கள் இருக்கிறார்கள்...பேசாமல் நேட்டா"வில் ஓட்டு போடலாம், ஆனால் மக்களுக்கு அம்புட்டு விழிப்புணர்வு கிடையாது...!

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

நோட்டோவால் எந்தப் பலனும் இல்லை
அதனையே பாழுங்கிணறு எனக் குறிப்பிட்டுள்ளேன்
சுமார் மோசமானவனுக்கு போட்டுத் தொலைப்பதைத் தவிர
வேறு வழி இல்லை.எப்படியோ மிக மோசமானவனைத்
தவிர்த்தால் சரி.நமக்குள்ள ஆப்ஸன் அது ஒன்றுதான்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
காலம் உணர்ந்து கவி பாடிய விதம் சிறப்பு ஐயா. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

கஷ்ட காலம்...

Thulasidharan V Thillaiakathu said...

தமிழ்நாட்டின் தலைவிதி!

Unknown said...

நல்லதொரு வீணை செய்தே...

Unknown said...

நல்லதொரு வீணை செய்தே...

Post a Comment