Thursday, April 21, 2016

"அம்மாவுக்கும்" நமக்குமான இடைவெளி





 ( நண்பர்  அவர்கள் உணமைகள்  அவர்களுக்கு  நன்றி


சினிமாத் துறையில் உள்ள என் நண்பன் சொல்வான்

சினிமாவில் நடனமாடும் கதாநாயகனுக்கும்
குழு நடனக்காரர்களுக்குமான தூரம்
கற்பனை செய்ய  முடியாதது என்று

அவர்கள் மிக அருகில் ஆடுவது போல
நமக்குத் தெரிந்தாலும் அந்தக் குழுவினர்
அந்தக் கதாநாயகனுடன் பேசக் கூட முடியாது
என்பான்

அந்த வகையில் இப்போது நமது அம்மா
அவர்களுக்கும் இடையில் பொம்மைப்போல்
அசையாது அமர வைக்கப்பட்டிருக்கும்
வேட்பாளர்களுக்கும் அம்மாவுக்கும்
இடையிலான தூரம்...

அம்மாவுக்கும் நமக்குமான தூரம்...

மிக அருகில் போல் தெரிந்தாலும்
கிரகங்களுக்கிடையே உள்ள தூரம் போலத்தான்
என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை

சொர்க்க லோகம் போல் சிலுசிலுப்பாக்கப்பட்ட
மேடைக்கும்,பாலை போல் எரித்துக் கொல்லுகிற
மேடை முன் அமர வைக்கப் பட்டிருக்கும்
பொது மக்களுக்கும் ஆன  இடைவெளி...

என் நேரம் ,என் சௌகரியம் மட்டுமே
முக்கியம் அடுத்தடுத்து எத்தனை பேர்
செத்தாலும் கவலையில்லை என்னும்
மனப்பாங்கு...

கட்சியெனும் போதைக்கு அடிமையானவர்கள்
வேண்டுமானால் சகித்துக் கொள்வார்கள்

நிச்சயமாக சுய சிந்தனை உள்ளவர்கள்
ஒரு மாறுபட்ட முடிவை எடுக்கவே செய்வார்கள்


பார்ப்போம்..

( ஒருவேளை மே 16 க்குள் பதினாறு பேரை
வெய்யிலுக்குப் பலி கொடுத்தால்
வெற்றி நிச்சயம் என ஆஸ்தான ஜோதிடர்
சொல்லி இருந்தால், பத்திரிக்கைக் காரர்களைப் போல்
நாமும் இரண்டு நாலு என எண்ணிக்
கொண்டிருப்பதைத் தவிர
 எதுவும் செய்வதற்கில்லை )

9 comments:

S.P.SENTHIL KUMAR said...

தாயுள்ளம், மக்கள் மீது அன்பிருப்பவர் என்றால் ஒரு சம்பவம் நடந்த உடனே சுதாரித்திருக்க வேண்டும். கூட்டத்தை வெயில் குறைந்த மாலை நேரத்தில் நடத்த முயற்சித்திருக்க வேண்டும். அதைவிட்டு, பணம் கொடுக்கிறோமே வெயிலில் சாகட்டும் என்ற மனநிலைதான். தேர்தல் போது கூட மாறாத ஒரே நிலை.
த ம 2

Anonymous said...

நேற்று ஜெயஸ்ரீ என்பவர் தனது பதிவில்
எலக்ஷன் நேரத்திலே பைட் நியூஸ் எப்படி எல்லாம் வருகிறது என்று
விலா வாரியா எழுதி இருக்காக.


http://jayasreesaranathan.blogspot.in/2016/04/paid-news-by-toi-on-sasikalaa.html

ஸ்ரீராம். said...

கொடுமை.

Thulasidharan V Thillaiakathu said...

இது மிகவும் கொடுமை....அம்மா என்ற மிகவும் புனிதமான வார்த்தையையே கேவலப்படுத்துவதாக உள்ளது

Anonymous said...

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article8507845.ece?ref=sliderNews

G.M Balasubramaniam said...

பணம் கிடைக்கப்பெற்றால் சாகவும் தயாராய் இருக்கும் மக்களை என்ன சொல்ல ?இறந்தபின் குடும்பத்தாருக்கு காம்பென்சேஷன் கிடைக்குமே ..........!

Unknown said...

யாரிடமும் குறை காணாத இயல்புடைய நண்பரே மனம் வருந்தி இப்பதிவினை எழுதினார் என்றால் அவர் மனதில் ஏற்பட்ட வேதனையின் வெளிப்பாடு தெளிவாகிறது!

அப்பாதுரை said...

சிந்திக்க வைக்கிறது. சிந்திப்போமா?

”தளிர் சுரேஷ்” said...

அரசியல்வாதிகள் திருந்த மாட்டார்கள்!

Post a Comment