Wednesday, April 6, 2016

வேராகப் பதிவுலகு இருக்க..

சந்தமதும் சிந்தனையும்
சந்தனமும் குங்குமமாய்
ஒன்றையொன்று சார்ந்துநிற்கும் போது-கவிநூறு
பொங்கிவரத் தடையுண்டோ கூறு

தாளமதும் இராகமதும்
தண்ணீரும் குளுமையுமாய்
மாயக்கட்டுக் கொண்டிருக்கும் போது-கவிஆறு
மடையடங்கிக் கிடந்திடுமோ கூறு

இளமனதும் அனுபவமும்
இலைபோலக் கிளைபோல
பலமாகப் பிணைந்திருக்கும் போது-கவித்தேர்
நிலையடங்கிக் கிடந்திடுமோ கூறு

சீராட்டவும் பாராட்டவும்
தாயாக உறவாக
வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
வழங்குவதில் குறைவருமோ கூறு

9 comments:

ஸ்ரீராம். said...

கிடையாது, கிடையாது, கிடைக்காது, வராது!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சந்த நயத்துடன் கவிதை அருமை .மனதில் நினைத்தவற்றை கொட்டி வைக்க பதிவுலகம் ஒரு வரம்தான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சீராட்டவும் பாராட்டவும், தாயாக உறவாக வேராகப் பதிவுலகு இருக்க ....//

அருமை. அழகான வரிகள். பாராட்டுகள்.

கோமதி அரசு said...

அருமையான கவிதை.
பதிவுலகம் இருக்கும்போது குறை வராது.

கீதமஞ்சரி said...

ஆஹா.. அபாரம். ஆடவும் தெரிந்து கூடமும் அற்புதமாக இருந்தால் சாதிக்க சொல்லவும் வேண்டுமோ?

G.M Balasubramaniam said...

ரசித்தேன்

Yarlpavanan said...


அருமையான பகிர்வு

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை...சந்த நயமும் பொருளும் விளையாடுகிறது. பதிவுலகம் வரமே! வரமே! எனவே குறை வராது!!! வரவே வராது..

சாந்தி மாரியப்பன் said...

குறை வரவே வராது..

Post a Comment