Monday, April 4, 2016

வார்த்தைகள் உயிர் பெறுவது..

வண்ணங்கள்
நம் கண்களுக்கு
குளிர்ச்சித்  தருபவைகள்தான்

மனதிற்கு
மகிழ்ச்சித்  தருபவைகள்தான்

ஆயினும்
வண்ணங்கள்
குளிர்ச்சிப்  பெறுவதும்
மகிழ்ச்சிப்  பெறுவதும்

ஓவியனின் தூரிகைத்
தன்னைத் தொட்டுத் தழுவுகையில்தான்

ஆயுதங்கள்
நம் உடமைகளுக்கு
பாதுகாப்புத்  தருபவைகள்தான்

மனதிற்குப்
பலம் தருபவைகள்தான்

ஆயினும்
ஆயுதங்கள்
பாதுகாப்புப் பெறுவதும்
பலம் பெறுவதும்

ஒரு வீரன்
அதைத் தாங்கி நிற்கையில்தான்

இல்லத்து உணவு
நம் நாவுக்கு
சுவைத்  தருபவைகள்தான்

உடலுக்கு
சக்தித்  தருபவைகள்தான்

ஆயினும்
அந்த உணவு
சுவைப்  பெறுவதும்
சக்திப்  பெறுவதும்
அன்னையவள் அன்பாய்ப் படைப்பதில்தான்

வார்த்தைகள்
நம் உணர்வுக்கு
உயிர் கொடுப்பவைகள்தான்

நம் நினைவுக்கு
உருக்  கொடுப்பவைகள்தான்

ஆயினும்
வார்த்தைகள்
உயிர் பெறுவதும்
உச்சம் தொடுவதும்
கவிஞனால் கையாளப்படுகையில்தான்

10 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை...ஆயினும் என்று சொல்லியவை அனைத்தும் ..!!

கோமதி அரசு said...

உண்மை.

கடம்பவன குயில் said...

ஆம் உண்மை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொன்றையும் மிகத் தெளிவாகவும் அழகாகவும் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Seeni said...

அருமைங்க அய்யா..

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

UmayalGayathri said...

உண்மை

Unknown said...

அருமை

Yarlpavanan said...

"வார்த்தைகள்
உயிர் பெறுவதும்
உச்சம் தொடுவதும்
கவிஞனால் கையாளப்படுகையில் தான்!" என்பதை
எவராலும் மறுக்க இயலாதே!
சிறந்த படைப்பு!

G.M Balasubramaniam said...

வார்த்தைகளை உயிர் பெற வைப்பதும் உச்சம் தொட வைக்கவும் சாமானியர்களாலும் முடியும்

Post a Comment