பருவம் தாண்டிப் பிறந்தக் காதல்
பாடாய்ப் படுத்துதடி-வயது
வரம்பை மீறி மனதுக் குள்ளே
மோகம் கூட்டுதடி
பார்க்கும் பொருளில் எல்லாம் இருந்து
பாவனைக் காட்டுதடி-என்னைச்
சேர்த்து அணைத்துச் சொக்க வைத்துச்
சோதனை பண்ணுதடி
இரவில் எல்லாம் விழிக்க வைத்து
இம்சைப் பண்ணுதடி -பட்டப்
பகலில் கூடக் கனவில் லயித்து
கிறங்கச் சொல்லுதடி
கருவைக் கொடுத்து முதலில் என்னை
அருகில் அழைக்குதடி-பின்
உருவம் கொடுக்க அலைய விட்டு
வேதனைக் கூட்டுதடி
உறவுக் கூட்டம் நிறையக் கொடுத்து
உணர்வைக் கூட்டுதடி-அவர்கள்
உணர்வுப் பூர்வப் பதிலைக் காட்டி
உயிரை உலுக்குதடி
பதிவு எட்டு நூறினைத தாண்டியும்
ஆர்வம் குறையலையே -நான்கு
நூறுப் பதிவர் தொடர்ந்த பின்னும்
தாகம் குறையலையே
பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுந்திட
இல்லை சாத்தியமே
பாடாய்ப் படுத்துதடி-வயது
வரம்பை மீறி மனதுக் குள்ளே
மோகம் கூட்டுதடி
பார்க்கும் பொருளில் எல்லாம் இருந்து
பாவனைக் காட்டுதடி-என்னைச்
சேர்த்து அணைத்துச் சொக்க வைத்துச்
சோதனை பண்ணுதடி
இரவில் எல்லாம் விழிக்க வைத்து
இம்சைப் பண்ணுதடி -பட்டப்
பகலில் கூடக் கனவில் லயித்து
கிறங்கச் சொல்லுதடி
கருவைக் கொடுத்து முதலில் என்னை
அருகில் அழைக்குதடி-பின்
உருவம் கொடுக்க அலைய விட்டு
வேதனைக் கூட்டுதடி
உறவுக் கூட்டம் நிறையக் கொடுத்து
உணர்வைக் கூட்டுதடி-அவர்கள்
உணர்வுப் பூர்வப் பதிலைக் காட்டி
உயிரை உலுக்குதடி
பதிவு எட்டு நூறினைத தாண்டியும்
ஆர்வம் குறையலையே -நான்கு
நூறுப் பதிவர் தொடர்ந்த பின்னும்
தாகம் குறையலையே
பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுந்திட
இல்லை சாத்தியமே
8 comments:
பதிவுப்பெண்ணா? ஹா... ஹா... ஹா... அருமை. எண்ணூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
அருமையான ஆக்கம். மெட்டும் அழகு. மிகவும் ரஸித்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுப்பெண்ணின் மோகம் சற்றும் குறையாமல், தீராமல் பாடாய்ப் படுத்தித்தான் வருகிறது.
நானும் பலமுறை அவளை விட்டுவிட்டு ஓட நினைத்தும் என்னால் அது இன்றுவரை முடியாமலேதான் இருந்து வருகிறது.
அந்த அளவுக்குச் சொக்குப்பொடி போட்டு இருக்கிறாள்.
ஏப்ரல் முடியட்டும் .... இவளை விட்டுப் பிரிந்து பார்ப்போம் என எனக்குள் எண்ணியுள்ளேன். அவளுக்கு ஆச்சு, எனக்காச்சு. விடுவாளா ? பார்ப்போம். :)
அருமை அய்யா....பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே
எத்தனையோ பேர் பதிவுப் பெண்ணின் மோக வலையில் இருந்து மீண்டு இருக்கிறார்களே
அஹஹஹஹ்ஹ் பதிவுபெண்!! நல்ல வார்த்தை! மிகவும் ரசித்தோம்....அருமை அருமை! அருமையான காதல்!
800 வது பதிவிற்கு வாழ்த்துகள்! பதிவுப்பெண்ணின் காதல் இனிக்குதையா..!! அவளது காதல் கூடிட வாழ்த்துகள்!
கவிதையை மிகவும் ரசித்தேன். 800-வது பதிவுக்கு வாழ்த்துகள். பதிவுப் பெண் என்பது புது பரிமானம்தான்.
த ம 4
பதிவு பெண் கவிதை அருமை.
எண்ணூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
Post a Comment