எக்கட்சித் தொண்டராயினும்
கட்சியைச் ஜெயிக்க வைப்போம்
கட்சித் தலைவர்களைத்
தோற்கடிப்போம்
முன்பெல்லாம்
பேருக்காவது
பொதுக் குழுக் கூடி
செயற்குழுக் கூடி
தலைவருக்கு அதிகாரமளிப்பதாக
ஒரு நாடகம் போடுவார்கள்
இந்தத் தேர்தலில்
ஒப்புக்கூட அது இல்லை
அப்படிச் செய்த
ஒரு சில கட்சியிலும்
தொண்டனின் கருத்துக்கு
நேர் எதிராகவே
அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்
நம் கருத்துக்கும்
இனியேனும்
மதிப்பிருக்க வேண்டுமெனில்
எக்கட்சித் தொண்டராயினும்
கட்சித் தலைவர்களைத்
தவறாதுத் தோற்கடிப்போம்
எந்தக் கட்சித் தொண்டராயினும்
கட்சியைச் ஜெயிக்கவைப்போம்
வாரிசுத் தலைவர்களைத்
தோற்கடிப்போம்
தியாகம்
அர்ப்பணிப்பு
விசுவாசம்
எல்லாம் செல்லாக் காசாகி
தலைவரின் வாரீசுகளும்
வாரீசென
அடையாளப்படுத்தப் பட்டவர்களே
தலைமுறை தலைமுறையாய்
தலைமைப் பொறுப்புக்கென
திணிக்கப் படுவதால்...
ஒரு சாமானியனின் குரல்
அரங்கேறும் சாத்தியம்
ஒரு சாமானியன்
தலைவனாகும் சாத்தியம்
அடியோடு ஒழிந்து தொலைவதால்
எந்தக் கட்சித் தொண்டராயினும்
வாரீசுத் தலைவர்களைத்
தவறாது தோற்கடிப்போம்
கட்சியைச் ஜெயிக்க வைப்போம்
கட்சித் தலைவர்களைத்
தோற்கடிப்போம்
முன்பெல்லாம்
பேருக்காவது
பொதுக் குழுக் கூடி
செயற்குழுக் கூடி
தலைவருக்கு அதிகாரமளிப்பதாக
ஒரு நாடகம் போடுவார்கள்
இந்தத் தேர்தலில்
ஒப்புக்கூட அது இல்லை
அப்படிச் செய்த
ஒரு சில கட்சியிலும்
தொண்டனின் கருத்துக்கு
நேர் எதிராகவே
அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்
நம் கருத்துக்கும்
இனியேனும்
மதிப்பிருக்க வேண்டுமெனில்
எக்கட்சித் தொண்டராயினும்
கட்சித் தலைவர்களைத்
தவறாதுத் தோற்கடிப்போம்
எந்தக் கட்சித் தொண்டராயினும்
கட்சியைச் ஜெயிக்கவைப்போம்
வாரிசுத் தலைவர்களைத்
தோற்கடிப்போம்
தியாகம்
அர்ப்பணிப்பு
விசுவாசம்
எல்லாம் செல்லாக் காசாகி
தலைவரின் வாரீசுகளும்
வாரீசென
அடையாளப்படுத்தப் பட்டவர்களே
தலைமுறை தலைமுறையாய்
தலைமைப் பொறுப்புக்கென
திணிக்கப் படுவதால்...
ஒரு சாமானியனின் குரல்
அரங்கேறும் சாத்தியம்
ஒரு சாமானியன்
தலைவனாகும் சாத்தியம்
அடியோடு ஒழிந்து தொலைவதால்
எந்தக் கட்சித் தொண்டராயினும்
வாரீசுத் தலைவர்களைத்
தவறாது தோற்கடிப்போம்
9 comments:
ஒரு சாமானியனின் குரல் அரங்கேறும் சாத்தியம்
ஒரு சாமானியன் தலைவனாகும் சாத்தியம்
அடியோடு ஒழிந்து தொலைவதால் ..... சாமானியர்களாகிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல்தான் உள்ளது.
இருப்பினும் தங்களின் கருத்துக்களில் நியாயம் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
எக்கட்சித் தொண்டராயினும்
கட்சியைச் ஜெயிக்க வைப்போம்
கட்சித் தலைவர்களைத்
தோற்கடிப்போம்
உண்மை உண்மை கவிஞரே அருமையான வரிகள்
தமிழ் மணம் 1
அப்படியானால் அம்மா ஜெயித்து விடுவார்.......
அம்மாவும் வாரீசென அடையாளப்படுத்தப்பட்டவர் தானே
இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று குழப்பமாகவே இருக்கிறது. 'பின்கி பின்கி பாங்கி' போட்டுதான் முடிவெடுக்க வேண்டும் போல இருக்கிறது.
தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் ஐயா
தலைவன் எதேச்சாதிகாரி . இது ஜனநாயகமா ?பணநாயகமா ?கொத்தடிமைகளா ?
நல்ல வழிகாட்டி---தலைவர்களைத் தோற்கடிப்போம். சரி --பன்னீர் செல்வம் போல் குனிந்து பணிந்து கொள்ளை அடிக்கும் தொண்டர்கள். ?!
அங்கிங்கெனாதபடி எங்கும் வாரிசு அரசியல். சிந்திக்க வேண்டிய கருத்துகளை அருமையாக சொன்னீர்கள்
சிந்திக்க வேண்டியது சார். ஒரே குழப்பமாக இருக்கிறது யாருக்கு என்று. ஒன்றுமே புரியவில்லை...என்றாலும் யாரேனும் ஒருவர் நல்லவர் இருக்க மாட்டாரா நம் பகுதியிலும்...பார்ப்போம்.
கீதா
Post a Comment