Tuesday, April 26, 2016

தேர்தல் வாக்குறுதிகள்

ஆட்சியில் இருப்பவர்களோ இதுவரை
இல்லாதவர்களோ மக்கள் எதைச் சொன்னால்
மயங்குவார்கள் எனக் கவனித்து அதை
வாக்குறுதிகளாகச் சொல்லி கவர முயல்வது
அரசியல் கட்சிகளுக்குச் சகஜம்.

ஜெயித்த பின்  மக்கள் அதை
நினைவில் கொள்ளமாட்டார்கள் என்பது
அவர்களுக்கும் தெரியும்.அப்படி ஒருவேளை
ஞாபகம் வைத்துக் கேட்டால்
அதற்குச் சாமர்த்தியமாய் மிகச் சரியான
ஒரு பதிலும் சொல்ல அவர்களுக்குத் தெரியும்

1967 இல் எல்லா பத்திரிக்கையிலும்
குண்டடிபட்டுக் கட்டுப்போட்ட நிலையில்
புரட்சித் தலைவரின் படத்தைப் போட்டு
அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ஒரு ரூபாய்க்கு  மூன்று படி அரிசி தருவோம்
என தி.மு க வாக்குறுதி கொடுத்து விளம்பரம்
கொடுத்திருந்தார்கள்

உண்மையில் அப்போது அரிசிப் பஞ்சம் நிலவிய காலம்

அந்த வாக்குறுதியும், புரட்சித் தலைவரின்
மீதிருந்த அனுதாபமும் தான் அதிக இடங்களில்
அப்போது தி. மு. க வெல்லக் காரணமாக இருந்தது
என்றால் அது மிகையில்லை

ஆனால் வென்று முடித்ததும் அவர்கள்
சொன்ன வாசகம் "அல்வா கொடுப்பது "
என்பதற்கு மிகச் சரியான உதாரணமாக இருந்தது

அந்த  "அல்வா  "வாசகம்.....

ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியம்
ஒரு படி நிச்சயம்
ரூபாய்க்கு மூன்று படி அரிசி எண்ணம்
ஒரு படி திண்ணம்

இப்படி வாசகத்தை மாற்றியதோடு அல்லாமல்
தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களில்
போட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றி விட்டதாக பிரச்சாரமும்
செய்து விட்டார்கள். மக்களும் மறந்து விட்டார்கள்

எனவே மயானத் தீர்மானம்,
பிரசவ காலத் தீர்மானம் போல
இந்த தேர்தல் கால வாக்குறுதிகளும்
என்பதில் அரசியல் கட்சிகள் மிகத்
தெளிவாய்தான்  இருக்கின்றன

எனவே நாமும் இதை ஒரு பொருட்டாக
எடுத்துக் கொள்ளாது , மற்ற விஷயங்களில்
கட்சியையும்,வேட்பாளர்களையும்
தேர்வு செய்வதில் மிகக் கவனமாய் இருப்போம்

ஒரு நொடித் தவறில் ஐந்தாண்டு கால
அவஸ்தையைத் தவிர்ப்போம்

8 comments:

ezhil said...

அரசியல் கட்சிகள் தெளிவாகத் தான் இருக்கின்றன. மக்கள் தான் குழம்பித் தவிக்கிறோம்...

ஸ்ரீராம். said...

தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு பம்மாத்து! மக்கள் யாரும் அதை மிக சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அறிக்கைகள் மட்டும்தான் தருவோம்.. அதை நிறைவேற்ற சொல்லிகேட்பது ரொம்ப தப்புங்க...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணும்ங்க...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா, ஒரு தேர்தலில் தரும் வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சி அடுத்த தேர்தலில் நிற்கும் வாய்ப்பைப் பறிக்க வேண்டும். இதுபற்றிய எனது பதிவில் தங்கள் உதவியையும் எதிர்பார்த்துப் பதிவிட்டிருக்கிறேன். வருக!

”தளிர் சுரேஷ்” said...

கட்சிகளின் வாக்குறுதி எல்லாம் போலியானது என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்த "அல்வா "வாசகம்.....

ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியம்
ஒரு படி நிச்சயம்
ரூபாய்க்கு மூன்று படி அரிசி எண்ணம்
ஒரு படி திண்ணம்

இப்படி வாசகத்தை மாற்றியதோடு அல்லாமல்
தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களில்
போட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றி விட்டதாக பிரச்சாரமும்
செய்து விட்டார்கள். மக்களும் மறந்து விட்டார்கள்//

மக்களில் பலர் மறந்துவிட்டாலும், 16 வயதினில் கேட்ட இதனை 61 வயதிலும் நம்மில் சிலர் இன்னும் மறக்கவே இல்லை.

அவர்கள் தொடர்ந்து அல்வா கொடுப்பதும், மக்களில் பலர் அல்வாவுக்கு ஆசைப்படுவதும் வழக்கமாகி சகஜமாகிப் போய்விட்டது.

Seeni said...

சரிதாங்க அய்யா..

Bhanumathy Venkateswaran said...

அது இலவசம், இது இலவசம், கடன்கள் ரத்து என்றெல்லாம் கூறுபவர்கள் அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவார்கள் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். இந்த லட்சணத்தில் டாஸ்மாக்கை மூடுவார்களாம். நம்பிட்டோம்..!!

Post a Comment