Wednesday, October 7, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 15 )

முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான்
துல்லியமாய் மனம் காட்டும்

உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
 பொருள் கூட அதைத்தானே சொல்கிறது

கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே

அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
 பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
 புரிந்து கொண்ட நாம் அவர்களை
 நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
 புதுகை ப்  பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல

அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள புதுகைப்  பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும் இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன்
 இந்த விழாமிகச் சிறப்பாக நடைபெற
நம்மால் ஆனஉதவிகளை செய்வதுடன்
நாம் நம்மை முழுமையாக இந்த நிகழ்வுடன்
ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக

மாறுதலை நம் எழுத்து
உருவாக்குகிறதோ இல்லையோ
மாறுதலுக்கான சூழலை  நம் எழுத்து
உருவாக்கும் என்பது நிச்சயமான உண்மை

இப்போது திரைப்படங்களில் எல்லாம்
பத்திரிக்கையுலக நண்பர்களுக்கு
நன்றி சொல்லுகையில்
மறக்காது   வலையுலகத்திற்கும்   நன்றி
சொல்வதை  நிச்சயம் கவனித்திருப்பீர்கள்

ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில்
வலைத்தளம்   எப்படி   ஒரு வலுவான
புறக்கணிக்க இயலாத சக்தியாக உள்ளது
என்பதற்கு  இது ஒரு சிறு உதாரணம்

நம் சக்தியை ஒருங்கிணைக்க    வலுவூட்ட
நிச்சயம் இதுபோன்ற   சந்திப்புகள்
உதவும் என்பது எனது
அசைக்கமுடியா நம்பிக்கை

புதுகையில் சந்திப்போம்
வாழ்த்துக்களுடன் .....


20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில் வலைத்தளம் ஒரு வலுவான புறக்கணிக்க இயலாத சக்தியாக உள்ளது//

மிக்க மகிழ்ச்சி :)

G.M Balasubramaniam said...

பொதுக்கருத்து உருவாகாமல் போனாலும் தவறில்லை. முயன்றிருக்கிறோம் என்பதே முக்கியம்

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பாய் சொன்னீர்கள்! சிறக்கட்டும்விழா!

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அருமையாகச் சொன்னீர்கள் ஐயா... நன்றி...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞர் அய்யாவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

Unknown said...

விளக்கம் நன்று! இம்மாறுதலை உறுதியோடு மேலும் வளர்க்க
மாநிலம் தழுவிய , பதிவுபெற்ற ஓர் அமைப்பை ஏற்படுத்த முயலுங்கள் இரமணி!

ப.கந்தசாமி said...

புலவர் இராமாநுசம் அவர்களின் நெடுநாளைய ஆசை மாநிலம் தழுவிய பதிவுபெற்ற ஓர் அமைப்பை ஏற்படுத்துவது. புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் இதற்கான விதையை ஊன்றலாம். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது ஒரு பெரிய கேள்வி?

இளமதி said...

மிக அருமை!
மனக்கருத்தை அப்படியே கவிவரிகளில்
அள்ளித் தெளித்துவிட்டீர்கள்!

விழாவிற்கான நாள் நெருங்க நெருங்க உங்கள்
அனைவரின் மகிழ்வும் பல்கிப் பெருகுவதை உணர்கின்றேன்! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

த ம+1

சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா சரியாகச் சொன்னீர்கள் விழா சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே வாழ்த்துகள்
தமிழ் மணம் 6

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//மாறுதலை நம் எழுத்து
உருவாக்குகிறதோ இல்லையோ
மாறுதலுக்கான சூழலை நம் எழுத்து
உருவாக்கும் என்பது நிச்சயமான உண்மை// கண்டிப்பாய் ஐயா! அருமை..நன்றி

சென்னை பித்தன் said...

பெருமூச்சுதன்!
நேற்று நீங்கள் 7;இன்று நான் 7

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சிறப்பான கருத்தை விதைத்துள்ளீர்கள் விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.த.ம 8

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

நன்று சொன்னீர் ஐயா
புதுகையில் சந்திப்போம்
நன்றி
தம +1

Geetha said...

உங்கள் கருத்தை ஏற்கிறேன்...மாநிலம் தழுவிய அமைப்பை உருவாக்க வேண்டும்....என்பது தேவையான ஒன்று...தான்

மகிழ்நிறை said...

அருமையாக சொன்னீர்கள் அய்யா! புதுகை விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் பல!

மகிழ்நிறை said...

அருமை! வருக!

stalinsaravanan said...

நன்றி ! மகிழ்ச்சி!!

கீதமஞ்சரி said...

சக்தி மிகுந்த வலைப்பூ ஊடகத்துள் நானும் ஒரு அங்கம் என்று நினைக்கையிலே பெருமிதம் கொள்கிறது மனம். செறிவான பதிவுக்கு நன்றி ரமணி சார்.

Unknown said...

சந்திப்போம் புதுகையில் :)

Post a Comment