எனது கல்லூரி நாட்களில் ஒரு கதையில்
வந்திருந்த "இன்ப அதிர்ச்சி "
என்கிற வார்த்தையைக் கிண்டலடித்து
ஒரு கூட்டத்தில் கலாய்த்திருக்கிறேன்
இன்பம் என்றால் நிச்சயம் அதிர்ச்சி தருவதாய்
இருக்காது. அதிர்ச்சி என்றால் அது நிச்சயம்
இன்பம் தருவதாக இருக்காது என்கிற ரீதியில்
உதாரணத்துடன் பேசிப் பாராட்டுப்
பெற்றிருக்கிறேன்
உண்மையில் இன்ப அதிர்ச்சி என்பது மிகச் சரியான
வார்த்தைதான் என்று பதிவர் தினத்திற்கு சில
தினங்களுக்கு முன்பு சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்
என்கிற முறையில் ஐயா முத்து நிலவன்
அவர்களிடம் இருந்து வந்த மின் அஞ்சலைப்
பார்த்துத்தான் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்
சந்திப்பு நிகழ்வினை ஒட்டி பல்வேறு போட்டிகளுக்கு
ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் மரபுக்
கவிதைக்கென ஒரு போட்டி வைத்திருப்பதுக் குறித்தும்
எழுதி அதில் நடுவராக மூவரைத்
தேர்ந்தெடுத்திருப்பதாகவும் அதில் நானும் ஒருவன்
என்கிற செய்திதான் அந்த இன்ப அதிர்ச்சி தந்த செய்தி
காரணம் கவிதையில் ஜாம்பவான்கள் பதிவுலகில்
பலர் இருக்க என்னை நடுவராகத் தேர்ந்தெடுத்தது
மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும்
அதனை மிகச் சரியாகச் செய்து முடிக்க முடியுமா
என்பதை நினைக்க அது அதிர்ச்சித் தருவதாகவும்
இருந்தது. அதற்கு வலிமையான காரணம்
இல்லாமல் இல்லை
ஏனெனில் வசன கவிதை என்றால் யாருக்கும்
எவ்வித அச்ச உணர்வு இல்லாமல் எழுதிவிடுவோம்
என்கிற தன்னம்பிக்கைத் தானாகவே வந்து விடுகிறது
ஆனால் மரபுக் கவிதை எனில் அப்படி இல்லை
இலக்கண அறிவு மற்றும் பயிற்சி இல்லாதவர்கள்
அதற்கு முயல்வதில்லை.முயல்பவர்கள் நிச்சயம்
ஏற்கெனவே எழுதி அனுபவம் பெற்றவர்களாகத்தான்
இருப்பார்கள்
இன்னும் சரியாகச் சொன்னால் மிக நேர்த்தியாக
நித்தமே ஆடை அலங்க்காரம் செய்து கொள்கிறவர்கள்
அழகுப் போட்டியெனில் எப்படியெல்லாம்
இன்னும் மிகச் சிறப்பாக அலங்காரம்
செய்து கொள்வார்கள் என விளக்கத் தேவையில்லை
அதைப் போலவே மரபுக் கவிதை எழுதுவதில்
தேர்ச்சிப் பெற்றவர்கள் இதுபோல் போட்டிக்கு
எழுதுகிறார்கள் என்றால் நிச்சயம் நான் மேற்குறித்த
உதாரணத்தில் சொன்னது போல
நன்றாக அலங்காரம் செய்து கொள்கிறவர்கள்
அழகிப் போட்டிக்குத் தயாராவதைப் போல
நிச்சயம் ஒரு மெனக்கெடல் இருக்கும்
அது நிச்சயம் நடுவர்களுக்கு ஒரு சவாலாகத் தான்
இருக்கும் என்கிற முடிவுக்கு நான் வந்தேன்
நிஜமாக அது அப்படித்தான் இருந்தது
( தொடரும் )

9 comments:
எனக்கும் இன்ப அதிர்ச்சிதான்! போனமாநாட்டில் உங்களை சந்தித்தது:-)
தொடர்கிறேன் ஜி...
சந்தேகமே இல்லை... மிகப் பெரிய சவால் தான் ஐயா...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html
தொடர்கிறேன் ஐயா
நன்றி
தம +1
மொத்த விழாவுமே இன்ப அதிர்ச்சிதான் எனக்கு!
த ம 5
மிக்கநன்றி சார்
ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான இன்பமும் அதிர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது அய்யா....
அடுத்து என்ன என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
வணக்கம்
ஐயா
அறியாத எங்களுக்கு அறியத்தந்தந்தமைக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment