Thursday, October 15, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 2 )

நான் திருவிழா மற்றும் கோவிலுக்குச்
செல்லுகையில் முண்டியடித்து முன்னேறி
நெருக்கடிமிக்க பகுதிக்கு செல்வதை
விரும்ப மாட்டேன்

விளக்கம் கேட்போருக்கு " சாமியை
நாம் பார்ப்பதை விட சாமி நம்மைப் பார்க்கணும்
அதுதான் முக்கியம் " என்பேன்

சிலர் இதை விதண்டவாதம் எனக் கூட
முகம் சுளித்திருக்கிறார்கள்.அதைப் பற்றி
நான் அதிகம் கவலை கொள்வதில்லை

அதைப் போலவே ஒரு பொது நிகழ்வென்றால்
நிகழ்வை நடத்துபவர்கள் போக்கிலேயே
யோசிப்பேனே ஒழிய எனக்கு அது குறித்த
மிகச் சரியான அனுபவம் இருந்தாலும்
அதில் அதிகம் மூக்கை நுழைப்பதில்லை

புதுகைப் பதிவர் சந்திப்பு என்கிற தகவல்
கசியத் துவங்கிய உடனேயே அவர்கள்
மதுரை சந்திப்புக்கு வந்திருந்து கலந்து கொண்ட
முறையைக் கொண்டும்,
புதுகையில் பதிவர்களுக்கென மிகச் சிறப்பாக
ஒருதொழிற் நுட்பக் கருத்தரங்கு
நடத்தியதிலிருந்தும் நிச்சயம்இந்தப்
புதுகைப் பதிவர் சந்திப்பு வித்தியாசமானதாகவும்
மிகச் சிறந்ததாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை
எனக்கு மட்டுமல்ல
எல்லோருக்குமே இருந்தது

அதிலும் குறிப்பாக 10 ஆம் தேதி வைக்கலாம
இல்லை 11ம் தேதி வைக்கலாமா எனத் தேதி நிர்ணயம்
செய்வதில் கூட அனைவரின் ஒருமித்த கருத்தை
அறிந்து செய்ய முயன்றது நம் நம்பிக்கைக்கு
உறுதி சேர்ப்பதாக இருந்தது

என்னுடைய கருத்தைக் கேட்டபோது கூட
இது குறித்து அனைவரிடமும் கேட்பது சரியாக வராது
மண்டபம் அமைவது, உள்ளூர் திருவிழா, சந்தை
இவைகளை உத்தேசித்து புதுகைப்பதிவர்களே
முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்
எனத் தெரிவித்தேன்

(மதுரை பதிவர் சந்திப்பில் தீபாவளி ஒட்டி
இந்த தேதி முடிவு செய்வதில்தான்
 ஆரம்பக் குழப்பம்வந்தது
 என்பதை இங்கு குறிப்பிடுவது தவறாகாது )

இரண்டாவதாக பதிவர்கள் பதிவுக் கூட்டத்தில்
நடந்து கொள்ளவேண்டிய முறைகளெனச் சொல்லி
அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை
பதிவர்கள் அறிமுகம் குறித்து  காலதாமதம்
செய்யாமல் அறிமுகம் செய்து கொண்டால் நல்லது
என்பதைத்தான் அதிகம் வலியுறுத்தினார்கள்

(முதலில் நடத்தியதாலோ என்னவோ
சென்னைப் பதிவர்கள்  சந்திப்புக்கு
பதிவர்கள் பெண் பதிவர்களை அனுமதி இன்றி
புகைப்படம் எடுக்கக் கூடாது மற்றும்
இன்னபிற வலியுறுத்தல்கள் அதிகம் இருந்தது )

இப்படித் துவக்கமே சிறப்பாக இருந்ததால்
 நிகழ்வும் மிக்ச் சிறப்பாக இருக்கும் என்கிற
 நம்பிக்கையில்தான் அனைவரும் புதுகைச் சந்திப்பை
 மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கினார்கள்

( தொடரும் )

16 comments:

Geetha M said...

உண்மை தான் சார்...மிகுந்த கவனத்தோடு தான் திட்டமிட்டோம்....தொடர்ச்சியை படிக்கும் ஆவலுடன்..

Nagendra Bharathi said...

நன்றி. படிக்கிறோம் தொடர்ந்து

KILLERGEE Devakottai said...

யதார்த்தமான விடயங்கள் தொடர்கிறேன் கவிஞரே
தமிழ்மணம் 2

Muthu Nilavan said...

அய்யா வணக்கம். தேதி முடிவுசெய்வதிலிருந்து, முன்னோடிப் பதிவர்களான சென்னை மற்றும் மதுரைப் பதிவர்களை நேரில் சந்தித்தே அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்து அதன்படி நடக்கவேண்டும் என்றுதான் அலைச்சலைப் பார்க்காமல் தங்களைப் பலமுறை கேட்டேன் தாங்களும் முயற்சி செய்தீர்கள். ஆனால் சென்னைப் பதிவர்களைச் சந்தித்தது போல மதுரைப் பதிவர்களைச் சந்திக்க இயலாமல் போனது எனக்கும் ஏமாற்றமே. பின்னரும் தாங்கள் அவ்வப்போதைய எனது தொலைபேசி உரையாடல்களில் அரிய பல ஆலோசனைகளை வழங்கினீர்கள் புரவலர் பட்டியல் புதிதாக இடம்பெற்றது தங்களால்தான். அதன்பின்னும் பதிவர் விழாப்பற்றிய தங்களின் பதிவுகள் எங்களுக்குத் தோன்றாத் துணையாகி நின்றன. தங்களை மேலும் வருத்தி, நடுவராகவும் வேண்டினோம். அனைத்துக்கும் சளைக்காமல் உதவி செய்தீர்கள். வந்திருந்து சிறப்பித்ததோடு புரவலராக இணைந்து ரூ.5,000 தந்ததெல்லாம் மறக்க முடியாத உதவிகள் அய்யா. இந்த விழா வெற்றிபெற்றதாக நினைத்தால் அதில் தங்கள் பங்கு மறக்கவியலாதது. விழாப்பற்றிய தங்களின் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறோம்.நன்றி

வெங்கட் நாகராஜ் said...

விழா பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள் ஐயா
தொடர்கிறேன்
தம+1

ரூபன் said...

வணக்கம்
ஐயா

விழா பற்றி சொல்லிக்கொண்டு போவது ஒரு சுவையாக உள்ளது. தொடருங்டகள் ஐயா
த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...

கவிஞர் அவர்களே! புதுக்கோட்டை வலைப்பதிவர் விழா தொடங்கியவுடன், காலயந்திரத்தில் பயணம் செய்து, நல்ல பல யோசனைகளை நீங்கள் சொன்னதை யாராலும் மறக்க இயலாது.

// முதலில் நடத்தியதாலோ என்னவோ சென்னைப் பதிவர்கள் சந்திப்புக்கு பதிவர்கள் பெண் பதிவர்களை அனுமதி இன்றி
புகைப்படம் எடுக்கக் கூடாது மற்றும் இன்னபிற வலியுறுத்தல்கள் அதிகம் இருந்தது //

ஆமாம் அய்யா! ஒரு பக்கம் புதுமைப் பெண்களடி கவி பாரதி சொன்னானே என்று சொல்லிக் கொண்டே, பெண்ணுக்கும் ஆணுக்கும் கட்டுப்பாடுகளை, நிறையவே, அப்போதைய சூழ்நிலையில் சொன்னார்கள். புதுக்கோட்டையில் எந்த கூட்டம் நடந்தாலும் படம் எடுக்க யாரும் கட்டுப்பாடுகள் சொன்னதில்லை. எல்லோருமே முற்போக்கு எழுத்தாளர்கள். இதற்கு காரணம் அய்யா முத்துநிலவன் அவர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

S.P. Senthil Kumar said...

அருமையான தொடக்கம். தொடருங்கள். நானும் தொடர்கிறேன்!
த ம 7

G.M Balasubramaniam said...

ஏறத்தாழ அனைவரும் பதிவர்களின் வழக்கப்படி போற்றியும் வாழ்த்தியும் பதிவிடுகிறார்கள் ஆனால் எனக்கு அதில் முழுவதும் உடன்பாடில்லை. ஒரு சங்கமத்தை ஏற்று நடத்துவது எவ்வளவு சிரமம் என்று எனக்குத் தெரியும் இருந்தாலும் குறைகளே இல்லை என்று கூற முடியவில்லை. அது பற்றி என் பதிவில் எழுதுகிறேன் வாழ்த்துக்கள்

Ramani S said...

G.M Balasubramaniam //

.நிறைகளை மிகச் சரியாகச் சொல்லி
பின் இருந்த சிறுச் சிறு குறைகளைச்
சொல்வதே சரி என நினைக்கிறேன்

விழாக் குழுவினர் கூட நாம் சொல்லும்
பாராட்டுகளை விட குறைகளைத் தெரிந்து
கொள்ளவே அதிக ஆர்வமாக உள்ளார்கள்
என்பது என் அபிப்பிராயம்

‘தளிர்’ சுரேஷ் said...

புதுகை சங்கமம் பற்றி அருமையாக தொகுத்து அளித்து வருவது மகிழ்ச்சி! தொடர்கிறேன்! நன்றி!

ஞா. கலையரசி said...

விழா பற்றிய விபரங்களை அருமையாகத் தொகுத்துச் சொல்கிறீர்கள். தொடர்கிறேன். விழாவில் தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

Dr B Jambulingam said...

நல்ல நிகழ்வினைப் பகிர்ந்துகொள்ளும் விதம் அருமை. தொடர்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

கீத மஞ்சரி said...

மிக அழகான தொகுப்பு... ஒரு நிகழ்வின் வெற்றிக்குப்பின்னால் இருக்கும் சிரத்தையும் திட்டமிடலும் பலரும் அறியாமலேயே போய்விடும் ஆபத்து இருக்கிறது. உங்களைப் போன்று அறிந்தவர்கள் அவற்றை வெளியிடும்போது எங்களைப் போன்று அறியாதவர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்து சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி ரமணி சார்.

Post a Comment