Monday, October 19, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 6 )

இந்துக்களின்  சம்பிரதாயப்படி ஒரு விஷயத்திற்கு
ஆண்டவனிடம் வேண்டிக் கொள்பவர்
முகச் சவரம் செய்வதைத் தவிர்த்து
தாடி மீசை வளர்த்துக் கொண்டிருப்பார்

திரு விழா முதலான நாட்களில்
அக்னி சட்டி எடுப்போர் முதலானோர்கள்
கையில் காப்புக் கட்டிக் கொள்வார்கள்

அது எல்லாம் மனதளவில் அவர்
எப்போதும் அந்த வேண்டுதலை
நேர்த்திக் கடனை மறக்காது நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்

அந்த வகையில் பதிவர் சந்திப்புத் தேதியும்
இடமும் முடிவானதும்  தொடர்ந்து பதிவர்களை
பதிவிடச் சொல்லி பதிவர் சந்திப்பை நடத்துவோர்
கேட்டுக் கொள்வதும் ,

பதிவர்களும் கவிதையாக கட்டுரையாக
வித்தியாசம் வித்தியாசமாகப் பதிவிடுவதும்,
சென்னைப் பதிவர் சந்திப்பு மற்றும்
மதுரைச் சந்திப்பு நடைபெறுகையிலும்
நடைபெற்றதுதான்

ஆனாலும் கூட புதுகையில் இருந்து
பதிவர்கள் பதிவிடுங்கள் என வேண்டுகோள்
வந்தவுடன்,மட மட வென நித்தமும்
பதிவர் சந்திப்புக்கு இத்தனைப் பதிவுகள்
வெளியானது இது தான் முதல் முறை

அப்படி மொத்தம் வந்த பதிவர் சந்திப்பு
பதிவுகள் 222 என்பது ஒரு பிரமிப்பூட்டும்
நிகழ்வுதான்

அத்தனைப் பதிவையும் விட்டுவிடாது
ஒரு பதிவின் கீழ் தொடர்ந்து தாமதிக்காது
இணைத்து அவர்களுக்கு இணைத்த தகவலையும்
உடனே தெரிவிப்பது என்பது ஒரு அசுரப்பணிதான்

அந்தப் பணியில் எவ்வித தொய்வுமின்றி
சித்தத்தைச் சிதறவிடாது அதிலேயே நிறுத்தி
அனைவரையும் பிரமிக்க வைத்த திண்டுக்கல்
தனபாலன் அவர்களின் பணியினை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்

வலைவிட்டு  ( மிகக் குறிப்பாகப்  பதிவர்கள் வலைவிட்டு )
 சிதறாத சித்தத்தைக் குறிக்கும்படியாக
வலைச் சித்தர் எனப் பட்டம் வழங்கியதும்
மிக மிகப் பொருத்தமானதே

இப்படி தனிப்பட்ட நபர்கள் பலரின் அதீத
உழைப்பும் , குழுவாக ஒருங்கிணைந்தோரின்
ஒத்த சிந்தனையும் ,உழைப்பும் இல்லையெனில்
இந்தப் பதிவர் சந்திப்பு இத்தனை சிறப்பாக
நடைபெற வாய்ப்பேயில்லை

அதிலும் குறிப்பாக சந்திப்புக்கென உண்டாக்கிய
பக்கத்தில் கவுண்ட் டவுன் டிஜிடல் கடிகாரத்தை
இணைத்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கையில்
பதிவர் சந்திப்புக் குறித்த நினைவில் இருந்த
என்போன்றோருக்கு அது எங்கள்
இதயத் துடிப்பைப் போலத்தான் இருந்தது என்றால்
நிச்சயம் அது மிகைப்படுத்திக் கூறல் இல்லை

( தொடரும் )

14 comments:

Nagendra Bharathi said...

காப்புக் கட்டித் திருவிழா நடத்திய வலைச் சித்தருக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் என்றும் .

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி ஐயா...

திண்டுக்கல் தனபாலன் said...

கவுண்ட் டவுன் டிஜிட்டல் கடிகாரத்தை உருவாக்க இணைப்பு : http://www.timeanddate.com/

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

ஆம் அய்யா, புதுக்கோட்டையில் இருந்துகொண்டு போட்டி போட்டு உழைத்த விழாக்குழுவினரே அசந்து போகும்படியான உழைப்பைத் தந்தவர் நமது வலைச்சித்தர். அதனால்தான், விழா மேடையில் அவரை அமரவைத்தோம். அவரும் அவ்வப்போது இறங்கி வந்தாலும் நாங்கள் விடவில்லை மீண்டும் அவரை விரட்டிச் சென்று மேடையில் அமர வேண்டினோம். விழாக்குழுவினர் மாறிமாறி அமர்ந்து சும்மா நாற்காலிகளை நிரப்பினோமே அன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்கள்தான் காலை அமர்வு முழுவதும் மேடையில் அமர்ந்திருக்கச் செய்தோம். உழைப்புக்கேற்ற மரியாதைதர விழாக்குழு ஒருமித்த கருத்தில் எடுத்த முடிவு இது அடுத்தடுத்த சந்திப்புகளிலும் அவரது இந்தத் தொழில்நுட்ப உழைப்பு தொடரவேண்டும். ஒவ்வொன்றையும் நுட்பமாகக் கவனித்து எழுதும் தங்களின் அன்புக்கு நன்றி அய்யா.வணக்கம்

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி தனபாலன்
இப்படிப் பின்னூட்டப் பதிவுகளையும்
அந்தத் தளத்திலேயே பதிவேற்றினால்தான்
புதுகைப் பதிவர் சந்திப்புக் குறித்த
முழுமையான மிகச் சரியான
அபிப்பிராயம் பின்னாட்களில் அறிய முற்படுவோருக்குக்
கிடைக்கும்.

அதானால்தான் இதையே சென்ற பதிவில்
கோரிக்கையாக வைத்திருந்தேன்

உடன் நிறைவேற்றிக் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துக்களும்..

வலிப்போக்கன் said...

அனைவரையும் பாராட்டி பதிவிட்ட தங்களுக்கு நன்றி! அய்யா....

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே தொடர்கிறேன்
தமிழ் மணம் 4

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
அள்ள அள்ள வற்றாத அமுத சுரபி போல்
தங்களின் பதிவுகள் அமைகின்றனஐயா
நன்றி
தம +1

இளமதி said...

புதுகைப் பதிவர் சந்திப்பென்னும் பொக்கிஷப் பதிவுகள் தொடராகப் பரிமளிக்கின்றதே!..

மிக அருமை ஐயா! போகாத குறையை
உங்களின் இப்பதிவுகளும் அதன் பின்னூட்டங்களும் தீர்க்கின்றன.

நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

வெங்கட் நாகராஜ் said...

அசர வைக்கும் உழைப்பு - வலைச்சித்தர் அவர்களுடையது....

தொடர்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

// அத்தனைப் பதிவையும் விட்டுவிடாது ஒரு பதிவின் கீழ் தொடர்ந்து தாமதிக்காது இணைத்து அவர்களுக்கு இணைத்த தகவலையும்
உடனே தெரிவிப்பது என்பது ஒரு அசுரப்பணிதான் //

ஆம் அய்யா! நன்றாகவே சொன்னீர்கள். இந்த அசுரத்தனமான வேலையை, பல்வேறு சூழலுக்கு இடையிலும் செய்த வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பணியை தனியே பாரட்டத்தான் வேண்டும். இந்த வலைப்பதிவர்கள் சந்திப்பின் வெற்றியில் திண்டுக்கல் தனபாலன் அவர்களது தொழில்நுட்ப அர்ப்பணிப்பு பெரியதொரு பங்காற்றி இருப்பதை மறுக்கவோ, மறக்கவோ இயலாது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நிகழ்வினை ஒன்றும் விடாமல் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அணில் said...

//..அதானால்தான் இதையே சென்ற பதிவில்
கோரிக்கையாக வைத்திருந்தேன்
நன்றி

Geetha said...

திண்டுக்கல் தனபாலன் சாரின் பணியே விழாவின் வெற்றிக்கு அடிப்படை எனில் மிகையில்லை சார்..

Post a Comment