Sunday, October 18, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 5 )

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்
"தோட்டத்தில் பாதி கிணறாய் இருந்தால்
வெள்ளாமை விளங்கினமாதிரிதான் " என்று
அது வெள்ளாமைக்கு வேண்டுமானால்
பொருந்தலாம்.

ஒரு பத்திரிக்கை . செய்தித்தாள் அல்லது
நமது சந்திப்பைப் போன்ற நிகழ்வுகளுக்கு
செலவில் பாதி நன்கொடைகள் மூலமாகவோ
ஸ்பான்சார் மூலமாகவோ வந்தால்தான்
மிகச் சிறப்பாகக் கொண்டு செல்லமுடியும்

மாறாக விற்பனை விலையைக் கொண்டு
பத்திரிக்கையோ,பதிவுக் கட்டணத்தைக் கொண்டு
நிகழ்வுகளை நடத்துவதென்பது அதுவும்
நம் பதிவர் சந்திப்பைப் போல ஒரு பெரும்
நிகழ்வை நடத்துவதென்பது நிச்சயம் சாத்தியமே
இல்லை.

பொது வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதனால்
இது குறித்து எனக்கு ஒரு தெளிவான கருத்து
இருந்ததால்,சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்
என்கிற முறையில் திருமிகு.முத்து நிலவன் ஐயா
அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் ஒன்று
இது விஷயமாய் அனுப்பிவைத்தேன்

நமது பதிவர்களைப் பொருத்தவரையில்
பதிவர் சந்திப்புக்கெனில் தாராளமாக நிதி
உதவி செய்வார்கள்.மிகக் குறிப்பாக வெளி
நாட்டில் வாழ் பதிவர்கள் எனக் குறிப்பிட்டு
அது குறித்து ஒரு வேண்டுகோள் விடுமாறு
அதில் குறைந்த பட்சம் நிதி
ஒரு இலட்சத்திற்கு மேல்சேருவதற்கு
வாய்ப்பிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன்

ஐயா அவர்களும் இது குறித்து  கலந்து பேசி
அறிவிப்பதாகச் சொல்லி, பின் இது குறித்து
புரவலர்களாக விருப்பம் உள்ள பதிவர்களுக்கு
ஒரு அன்பு வேண்டு கோள் விடுத்தார்

அது நாம் எதிபார்த்தபடியே அந்த நிதி
ஒரு இலட்சத்தை தாண்டி வந்தது.
விழா மிகச் சிறப்பாக நடைபெற காரணமாயிருந்த
பலவற்றுள் இந்தப் புரவலர்களின் பங்கும்
( "ம் "மைக் கவனிக்கவும் ) மிக முக்கியமானது
என்றால் அது மிகையில்லை

பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலில்
புரவலர்களைக் கௌரவித்தல் என ஒரு குறிப்பு
இருந்தது போல் ஒரு ஞாபகம்

அது விழாவின் சிறப்பு விருந்தினர் வருகையில்
ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிறு சிறு
மாறுதலுகுண்டான காரணத்தால் அது  விடுபட்டுப்
போய்விட்டது என் நினைக்கிறேன்

புரவலர்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு
ஃபிளக்ஸ் வைத்திருந்தாலும் மேடையில் ஒருமுறை
பெயரை வாசித்திருக்கலாமோ என எனக்குப் பட்டது
(அந்த  பிளக்ஸ் படம் ஏதேனும் பதிவில்  
பதியப்பட்டிருக்கிறதா ?  )

ஏனெனில் புரவலர்களில் ஏறக்குறைய எல்லோருமே
வெளி நாட்டில் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும்
நேரலையில் விழா நிகழ்வுகளைப் பார்த்துக்
கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

அவர்களில் யாரும் இதை அதிகம்
விரும்ப மாட்டார்கள் என்றாலும் கூட
அடுத்த நிகழ்வுக்கு அல்லது இந்த நிகழ்வுக்கே
நாமும் புரவலர்களாகி இருக்கலாமோ என்கிற
எண்ணத்தை பதிவர்களுக்கு ஏற்படுத்த
வாய்ப்பிருக்கிறது என்பதற்காக இதை எழுதுகிறேன்

இது குறை அல்ல. அதைச் செய்திருந்தால் இன்னும்
சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்

( தொடரும் )

10 comments:

Dr B Jambulingam said...

யோசிக்க யோசிக்க எதைவிட்டுவிட்டோம், எதைச் சேர்த்தோம் என்று எண்ணத் தோன்றுகிறது.

Muthu Nilavan said...

ஆமாம் அய்யா, ஏற்கெனவே நாம் தெரிவித்திருந்தது போல விழா அரங்கில் பதாகையில் எழுதி -நூல் விற்பனை செய்யும் இடத்தில், பலர்கண்ணும் படக்கூடிய இடத்தில் தொங்கவிட்டிருந்தாலும், விழா நிகழ்வின் ஊடாக இதனை ஒலிவாங்கியிலும் சொல்லியிருக்க வேண்டும். விடுபட்டது ஒரு தவறுதான். இதை அடுத்த நிகழ்வில் கவனத்திற்கொள்ள ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் நன்றி

புலவர் இராமாநுசம் said...

உண்மைதான்! நான்கூண நினைத்தேன்!

தி.தமிழ் இளங்கோ said...

நன்றாகவே சொன்னீர்கள். தொடர்கின்றேன்.

KILLERGEE Devakottai said...

நல்ல விட.ங்கள் கவிஞரே... இவை அடுத்த பதிவர் விழாவுக்கு பயன் பெறும் நன்று தொடர்கிறேன்...
தமிழ் மணம் 4

Bagawanjee KA said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது ,குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை முடிக்க வேண்டிய காரணத்தால் நன்றியுரைகூட சுருக்கமானதே!
புரவலர்களை மேடையேற்றி பாராட்டியிருக்கலாம்!

G.M Balasubramaniam said...

குறைகள் என்று தோன்றுவதை உங்களைப் போல் நாசூக்காய் சொல்லத் திறமை வேண்டும் வாழ்த்துக்கள்

ரூபன் said...

வணக்கம்
ஐயா
நிகழ்வை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா தொடருங்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அடுத்த சந்திப்பின் போது நிச்சயம் உதவும்....

தொடர்கிறேன்.

Geetha M said...

ஆம் நிச்சயமாக சொல்லியிருக்க வேண்டும்..சார் ...வருந்துகின்றோம்...

Post a Comment