Saturday, October 3, 2015

வாழும் வகையறிந்து.....

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  நடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

7 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு வரும் சோதனைகளை வென்று வாழும் வகையறிந்து சிறப்பாக வாழ வேண்டுமென்பதை தங்கள் பதிவின் மூலம் அழகாய் விளக்கிவிட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

G.M Balasubramaniam said...

சிறப்பாகச் சொல்லிப் போயிருக்கிறீர்கள்

”தளிர் சுரேஷ்” said...

உங்கள் ஒப்புமைகளும் உதாரணங்களும் எப்போதுமே அசத்தல் ரகம்! வாழ்த்துக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//
உண்மைதான்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை! சரியான ஒப்புமை. நிச்சய்மாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் உல்லாசப் படகு சவாரிக்கு....வாழ்த்துகள்!

Unknown said...

சிறிது நேர பயணத்திற்கு தேவையா

Unknown said...

சிறிது நேர பயணத்திற்கு தேவையா

Post a Comment