Saturday, October 31, 2015

விஷய ஞானத்தினும்....

குப்பை மூடைகளை
வீடு முழுதும் அடுக்கிவைத்து
இடமற்று வெளியில்
மனம்பிசகிக் கோட்டியாய்
கிடப்பவனுக்கும்

வீடு குப்பைக்கானதில்லை
தனக்கானதென்று
அறியாதவனுக்கும்

ஊர் விஷயங்களை
மூளை நிறையக் குவித்துவைத்து
தனைக் குறித்து ஏதுமறியாது
அறிவானவன் என
இறுமாந்துத் திரிபவனுக்கும்

தன்னை அறிதலே
அறிவென்பதை
அறியாதிருப்போனுக்கும்

என்ன வித்தியாசமிருக்கிறதென்று
எனக்குப் புரியவில்லை
உங்களுக்கேதும் புரிகிறதா ?

12 comments:

ananthako said...

நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்

ananthako said...

நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்

KILLERGEE Devakottai said...

வாழ்வியல் உண்மை அருமை கவிஞரே தமிழ் மணம் 2

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
நம்மை நாமறிவோம்
நன்றி
தம +1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம 4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயா அவர்கள் முதல் கருத்துரையிலே சொல்லி விட்டார்கள்...

கீதமஞ்சரி said...

வித்தியாசமேதுமில்லை என்பது மிக நன்றாகவே புரிகிறது. நன்றி ரமணி சார்.

sury siva said...

உங்களுக்கேதும் புரிகிறதா ?//

புரிகிறதே !!

அறியாதவன் அறிந்தவன் போல்
அனைத்தையும் அலசி எழுதி, பின்னே
அனைத்தையும் குப்பை என்று
உணருமுன்னே
அவனும் குப்பையாய் எரிக்கப்படுகிறான் .

எல்லாமே குப்பை என்றுணர்ந்தவன்
வாளா நிற்கிறான்.
நடப்பவைக்குத் தான் சாட்சி என்றே
நம்பி நிற்கிறான்.
சும்மா இருக்கிறான். சொல் அற என்றும்
சொல்வதில்லை.

சு ப்பு தாத் தா

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான உவமை! சிறப்பான கவிதை! அருமை!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கவிதை.

Unknown said...

உண்மைதான் ! நம்மை முதலில் முழுவதுமாக அறிவோம்!

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு கவிதை! சிந்தனைகள் மிக்க கவிதை...

Post a Comment