Thursday, October 1, 2015

" வாழ்க காந்தி மகான் "

 ஆண்டுக்காண்டு
வலிமை மிக்க ஆயுதங்களை
உற்பத்தி செய்யதலும்
அதன் பயன்படுத்துவதற்கு இசைவாக
நாட்டுக்கு நாடு
வன்மம் வளர்த்தலுமே
சரியானதாக இருக்கிற உலகுக்கு
நிராயுதபாணிப் போராட்டத்தைப் போதித்த
"அவரின்" போதனை எப்படிச் சரிவரும் ?

அன்னிய முதலீடுகளும்
பன்னாட்டு நிறுவனங்களுமே
நம் கால் வயிறுக்கு
கஞ்சி ஊற்றும் என
நம்பி செயலபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு
"அவரின்"கிராமப் பொருளாதாரமும்
சுயசார்புத் தத்துவங்களும்
எப்படிச் சரியானதாக இருக்கும் ?

நுகர்வுக் கலாச்சாரமே
பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டும் எனவும்
உணர்வைத் திருப்திப்படுத்துதலே
வாழ்வின் உன்னத நோக்கம் என்பதில்
சந்தேகமின்றி இருக்கும் நமக்கு
"அவரின்" அமைதித் தேடலும்,புலனடக்கமும்
எப்படிப் பொருந்தி வரும் ?

பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்
அரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்
அதுதான் வாழ்க்கை நெறியென
ஆகிப்போன நிலையில்
"அவரின் "சத்தியமேவ ஜெயதே
எப்படி உதவக் கூடியதாய் இருக்கும் ?

கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி
அவ்வழி அயராது இன்றுபோல்
என்றும் தொடர்வோம்
இருபதில் வல்லரசாய் உயர
அயராது முயல்வோம்
 "
வாழ்க காந்தி மகான் "

6 comments:

இளமதி said...

அருமையான காந்தி சிந்தனை!
சொல்லியவிதம் மிகச் சிறப்பு ஐயா!

அண்ணல் காந்தியின் நினைவுகளுடன்...
வாழ்த்துக்கள்!

த ம 2

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
வாழ்க காந்தி மகான்
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கொள்கைகளுக்கு அஞ்சலி செலுத்திய விதம் அருமை.
பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண எனது முதல் வலைப்பூவிற்கு அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

yathavan64@gmail.com said...

காந்திய சிந்தனையை போற்றி சிறப்பிக்கும் வேளையில்...
இன்றையை நடைமுறை போக்கினையும் வேதனை கலந்து
சொல்லிய பாங்கு போற்றுதலுக்குரியது அய்யா!
மிக நல்ல பதிவு! நன்றி!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காந்தியைப் போற்றும் நாம் அவரது கொள்கைகளை மறந்து விட்டோம் . சிறப்பான பதிவு

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...
வாழ்த்துக்கள்.

Post a Comment