Monday, October 26, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 12 )

நான் சிறுவனாக இருக்கையில்
எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக
இருந்தவர்கள் எல்லாம்  சிவாஜி
எம்.ஜி.ஆர் விஷயத்தில் இரண்டாகப்
பிரிந்து விடுவோம்

யாராக இருந்தாலும் இரண்டில் யாராவது
ஒருவர் பக்கம் நின்றாகவேண்டும்

இரண்டு பக்கமும் என்பதற்கெல்லாம்
அப்போது வாய்ப்பே கிடையாது

எப்படித்தான் அருமையாக சண்டைப்
போட்டாலும்  எம்.ஜி ஆர்அவர்களுடன்
ஒப்பிட்டுப் பேசுதல் என்பது கிடையாது
அவர் லெவலே வேறு

ஆனால் புதிதாக நடிக்க வந்தவர்கள்
யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்தால்
அவரை சிவாஜி அவர்களுடன் ஒப்பீடு
செய்வோம்.அனேகமாக அது
சிவாஜிக்கு முக்கால்  வருவார்,அரை வருவார்
கால் தூசி பெறமாட்டார் என்பதைப்
போலத்தான் எப்போதும் இருக்கும்

எனக்குத் தெரிய அந்த லிஸ்டில் மேஜர்
சவுந்திரராஜன்,ஏ.வி எம் ராஜன் எல்லாம்
 வந்து போனதுண்டு

ஆனால் யாரும் சிவாஜி அவர்களுக்கு
இணையாக வந்ததில்லை

அதைப் போலவே இனி பதிவர் சந்திப்பு
என்றால் புதுகைப் பதிவர் சந்திப்புத்தான்
நிச்சயம் ஒரு அளவுகோலாக இருக்கும்
புதுகைப் பதிவர் சந்திப்புப் போல் வராது
அல்லது புதுகைச் சந்திப்பைப்போலச்
சிறந்தது,அல்லது புதுகைப் பதிவர் சந்திப்பை
விட மிகச் சிறப்பாக இருந்தது
என்பதைப் போலத்தான் நிச்சயம் இருக்கும்

அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவர்
சந்திப்பை நடத்தி முடித்த அனைவருக்கும்
அதற்கு முழுமையாக அனைத்து விதத்திலும்
ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதோடு...

இந்த ஒற்றுமையும்,அமைப்பும் பதிவர்
சந்திப்பு நடத்துவதற்காகக்த்தான்
என்பதற்காக மட்டும் இல்லாது,

பதிவர்களுக்குள் எப்போதுமே ஒரு
இணப்புப் பாலமாக இருக்கும்படியான
ஒரு அமைப்பாக மாற்றினால்...

கூட்டு முயற்சியில் பொதுவாக ஒரு
வலைத்தளம்(தமிழ்மணம் போல் )
உருவாக்கும்படியான முயற்சியில் ஈடுபட்டால்...

புத்தகமாக தமது படைப்புகளை வெளிக்
கொணர விரும்புவோருக்கு  உதவும் ஒரு நல்ல
அமைப்பாக மாறினால்...

தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனை
வேண்டுவோருக்கு எப்போது வேண்டுமானாலும்
உதவும் ஓர் அமைப்பாக மாறினால்..

நல்லதோர் வீணையை  நலங்கெடாது
அதற்குரிய உயரிய பீடத்தில் வைத்தது போலாகும்
எனக் கூறி எனது இந்தத் தொடர்பதிவை
மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்....

























17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இணைப்பு பாலமாக அமைப்பு, பொதுவான தளம், புத்தக வெளியீடு மற்றும் மின்னூல் ஆக்குதல், தொழில் நுட்ப ஆலோசனை - இவை அனைத்தும் சாத்தியமே... அனைவரும் சேர்ந்து யோசித்து, செயல்படுவோம் ஐயா... நன்றி...

கரூர்பூபகீதன் said...

வணக்கம் அய்யா! மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்! மிக்க நன்றி!

Avargal Unmaigal said...

மாறினால் மாறினால் என்று நீங்கள் சொன்னது அனைத்தும் நல்ல ஐடியாகவே இருக்கிறது, ஆனால் அப்படி மாற சங்கம் ஒன்று இருந்தால்தான் முடியும். அப்படி சங்கம் அமைத்தால் சண்டைகளில்தான் வந்து முடியும் அதன் விளைவாக மேலும் பல சங்கங்கள் தோன்றும்.

என்னை கேட்டால் ஒவ்வொரு பதிவரும் தாங்கள் படித்த அல்லது அறிந்த நல்ல படைப்புகளை தத்தம் தளங்களில் அறிமுகப்படுத்தினாலே நல்லது அது பலரையும் சென்று அடையும்

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

தங்களின் பதிவுகள் :

பதிவர் திருவிழாவிற்கு முன் 16
பதிவர் திருவிழாவிற்கு பின் 12

நன்றிகள் ஐயா...

இப்பதிவும் நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

உடன் வரவுக்கும் நேர்மறையான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கரூர்பூபகீதன் //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //
மாறினால் மாறினால் என்று நீங்கள் சொன்னது அனைத்தும் நல்ல ஐடியாகவே இருக்கிறது, ஆனால் அப்படி மாற சங்கம் ஒன்று இருந்தால்தான் முடியும். அப்படி சங்கம் அமைத்தால் சண்டைகளில்தான் வந்து முடியும் அதன் விளைவாக மேலும் பல சங்கங்கள் தோன்றும்.//

நன்மையை விட தீமைகள் மிகக்
குறைந்த அளவில் இருப்பின்
நன்மையைக் குறித்து யோசித்தலே
சரி என்பது எனது எண்ணம்

கூர்மையான கத்தியை கொஞ்சம்
பாதுகாப்பாகத்தான் வைத்துக் கொள்ள
வேண்டும்

உடன் வரவுக்கும் வெளிப்படையான
கருத்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...
தங்களின் பதிவுகள் :

பதிவர் திருவிழாவிற்கு முன் 16
பதிவர் திருவிழாவிற்கு பின் 12

நன்றிகள் ஐயா...//
வலைச் சித்தர் என்பதுடன்
வலைத்தள அதிசயம் எனக் கூட
உங்களுக்கு இன்னொரு பட்டம்
நிச்சயம் தரலாம்
அத்தனை தொழில் நுட்ப வேகம்
பகிர்வுக்கும் உடன் தகவலுக்கும்
மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துக்களும்

Avargal Unmaigal said...

உங்களை போலவே எல்லோரும் சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனையே இல்லையே.. ஆனால் இங்கு பதிவுலகில் நடப்பதை பாருங்கள் ஒரு பதிவிற்கு மாற்று கருத்து சொல்லிவிட்டால் ஒரு நிகழ்விற்கு மாற்று கருத்து சொல்லிவிட்டால் அந்த கருத்து நல்லவையாக இருந்தாலும் குருப்பாக வந்து அட்டாக் செய்வதுதானே ங்கே நடக்கிறது..இன்றைய கால மனிதர்கள் அந்த கால மனிதர்கள் போல மனப்பக்குவம் கொண்டவர்கள் அல்ல......

எப்படி இருந்தாலும் ஆசானாகிய உங்கள் முயற்சிகள் அனைத்தும் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையானதோர் தொடர் அதற்குள் நிறைவடைந்து விட்டதே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம் கால ’சிவாஜி / எம்.ஜி.ஆர்’ ஒப்பீடுகள் மிகவும் பொருத்தமாக அழகாக உள்ளன.

பாராட்டுகள் + வாழ்த்துகள், சார்.

கரந்தை ஜெயக்குமார் said...

சிறந்த யோசனை ஐயா
தம +1

Geetha said...

வணக்கம் சார்..மிக்கநன்றி ....பதிவுகள் அனைத்தும் எங்களை உற்சாகப்படுத்துவதாய்..மேலும் ஊக்கமூட்டுவதாய் அமைந்துள்ளன...அதற்குள் முடிந்துவிட்டதே என்ற வருத்தமுடன்....அனைவரும் ஒன்று இணைந்த சங்கம் அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை இந்த விழாவில் கூறவேண்டும் என எண்ணியிருந்தோம்...அனைவரின் கருத்தறிந்து பின் அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் என்றும் கூறினோம்..ஆனா நிலவன் அண்ணா முதலில் விழாவை சிறப்பாக முடிப்போம்..இறுதியில் கூறலாம் என்று சொன்னதால் விழாவிற்கு முன்பே சங்கம் அமைப்பது குறித்து பேசவில்லை...ஆனால் எண்ணியிருந்தபடி தீர்மானம் இயற்ற முடியவில்லை ...ஒருமுறை அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து நிச்சயம் சங்கம் அமைக்க வேண்டும்.பதிவர் விழாவின் சிறப்பு மூத்தோர்களின் ஆலோசனையாலும் நிலவன் அண்ணாவின் வழிகாட்டலாலும் சிறப்பாக முடிந்தது...மிக்கநன்றி சார்.

KILLERGEE Devakottai said...

சிறப்பான விடயங்களோடு பதிவு நன்று வாழ்த்துகள்
தமிழ் மணம் 4

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புதுக்கோட்டை நிகழ்வுகளைத் தொடர்ந்து அசராமல் பதிந்துவரும் தங்களின் பணி போற்றுதற்குரியது. ஒரு நல்ல ஆவணமாக இது எப்போதும் உதவும். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பதிவர் சந்திப்பு பற்றிய உங்கள்பதிவுகள் அனைத்துமே நன்று. எல்லா விஷயங்களையும் சொல்லிய விதம் நன்று.

நல்ல விஷயங்கள் நடந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

S.P.SENTHIL KUMAR said...

மிக நிறைவான ஒரு தொடராக பதிவர் சந்திப்பு பற்றிய தங்களின் தொடர் இருந்தது. மீண்டும் ஒருமுறை விழாவை தரிசித்துவிட்டு வந்த உணர்வை தந்தது. நன்றி அய்யா!

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத வருத்தம் மேலிடுகிறது! புதுகை பதிவர்களான விழாக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

Post a Comment