Tuesday, October 27, 2015

மழையைத் தொடரும் தூவானம்

 ஒருமுறை பீர்பாலும் மன்னரும் நடந்து
சாலை வழி மாறுவேடத்தில் போய்க்
கொண்டிருக்கையில் ஒருவன் இறைவனைக்
குறித்து வேண்டிக் கொண்டிருக்கிறான்

அப்போது மன்னர் பீர்பாலை நோக்கி
 " என்ன பீர்பால்இவன் இங்கு அமர்ந்து
வேண்டிக் கொண்டிருப்பது
அந்த ஆண்டவனுக்கு எப்படிச் சேரும் ?
ஏன் இப்படி காலத்தை விரயம்
செய்து கொண்டிருக்கிறான் ?" என்கிறார்

அதற்குப் பீர்பால்  "இவன் உண்மையாக
உறுதியாக வேண்டிக் கொண்டால் நிச்சயம்
அது ஆண்டவனுக்குச் சேரும் மன்னா ?"
என்கிறார்

மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை
" இதை நிரூபிக்க முடியுமா ?" எனச் சவால்
விடுகிறார். பீர்பாலும் அந்தச் சவாலை
ஏற்றுக் கொள்கிறார்

பின் பீர்பால் ஒரு கிராமத்தானை ஏற்பாடு செய்து
" நான் மன்னரைக் காணவேண்டும் " எனத்
திரும்பத் திரும்பச் சப்தமாகத் தினமும்
சாலை ஒரம் அமர்ந்து சொல்லச்
சொல்கிறார்.

முதலில் இதைப் பார்த்த ஒற்றன் எவனோ
கிறுக்கன் உளறுகிறான் எனக் 
கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறான்

நாளும் பொழுதும் அதே இடத்தில்
அதே வார்த்தையைச் சொல்லிக்
கொண்டிருப்பதைக் கண்ட ஒற்றன் இதைத் 
தலைமை ஒற்றனிடம் சொல்கிறான்

முதலில் இதை வெறும் தகவலாக மட்டும் கொண்ட
ஒற்றர் தலைவன், இது தொடர்ந்து
தொடர்வதைக் கண்டு எதற்கும் சேனாதிபதியிடம்
சொல்லிவிடுவோம் எனச் சொல்லி விடுகிறான்

இப்படியே தகவல் மந்திரி கடந்து மன்னரிடம்
சென்றுவிடுகிறது.முதலில் தகவலாக
அதை எடுத்துக்கொண்ட மன்னர் தொடர்ந்து
 அவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்
எனத் தெரிய ஒரு நாள் ஏன் தான் நம்மைப் பார்க்க
வேண்டுமென்பதில் இவ்வளவு உறுதியாய்
இருக்கிறான் எனத் தெரிந்து கொள்ளும்
ஆவலில் அவன் இருப்பிடம் தேடி வருகிறார்

அப்போதும் அதையே சொல்லிக் கொண்டிருந்த
அந்தகிராமத்தானை நோக்கி "
இதோ மன்னனே வந்து விட்டேன்.
என்ன விஷயம் சொல் " என்கிறார்

கிராமத்தானோ "மன்னா மன்னிக்க வேண்டும்
பீர்பால்தான் தினமும் இப்படி இங்கே அமர்ந்து
இப்படிச் சப்தமாய்ச்  சொல்லிக் கொண்டிரு
மன்னர் நிச்சயம் வருவார். அப்படி வருகிற நாளில்
நான் உனக்கு நூறு பொற்காசுகள் தருவேன் என்றார்
தங்கள் கருணையால் எனக்கு இன்று நூறு
பொற்காசுகள் கிடைக்கப் போகிறது" என்கிறான்

மன்னருக்கு  பீர்பால் ஏன் இப்படி ஏற்பாடு செய்தார்
என்கிற விஷயம் விளங்கவில்லை

உடன் பீர்பாலை வரவழைத்து காரணம் கேட்க
பீர்பால் 'மன்னா தாங்கள் அன்றொரு நாள்
தொடர்ந்து வேண்டிக் கொண்டிருப்பவன் குரல்
எப்படி ஆண்டவனுக்கும் கேட்கும் எனக்
கேட்டதற்கு இதுதான் பதில்

ஒரு சாதாரண கிராமத்தானின் புலம்பல்
அவன் சந்திக்கவே முடியாத மன்னருக்குக்
கேட்கும்பொழுது,ஒரு பக்தனின் குரல் எப்படி
அந்த எல்லாம் வல்லவனுக்குக் கேட்காமல் இருக்கும்"
என கேட்க மன்னருக்கும் இது சாத்தியம் தான்
புரிய, கிராமத்தானுக்கு தானே நூறு  பொற்காசுகள்
கொடுத்து பீர்பாலை மனதாரப் பாராட்டுகிறார்

அது சரி இந்தக் கதை இப்போது எதற்கு
என்கிறீர்களா ? அதை அடுத்துச் சொல்கிறேன்

18 comments:

ஸ்ரீராம். said...

மன்னருக்கு மறதி போலும்! ஊகிக்க முடியாதவராயிருக்கறாரே!
தம +1

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...//
மன்னருக்கு மறதி போலும்! ஊகிக்க முடியாதவராயிருக்கறாரே!//

மன்னர் சாக்கில்
படிப்பவர்களுக்கு ஞாபகம் மூட்டத்தான்

குவைத் தமிழ்நேசன் said...

மன்னர்கள் என்றாலே மறதியாளர்கள் தானே. இன்றைய ஆட்சியாளர்கள் போல்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு கதை. பாராட்டுகள்.

//அது சரி இந்தக் கதை இப்போது எதற்கு
என்கிறீர்களா ? அதை அடுத்துச் சொல்கிறேன்//

அதுதான் மிகவும் முக்கியம். :)

ஆவலுடன் காத்திருக்கிறோம்.

[நான் என் மனதில் ஒன்றை யூகித்து வைத்துள்ளேன். அதுவாகவே இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே :) ]

அன்பே சிவம் said...

இதென்ன அநியாயம் அக்கிரமம்

நானொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறதே

இதே போல சஸ்பென்ஸ் வைத்து

ஒரு பதிவுக்கு முன்னூட்டம் கொடுக்க முற்படுகையில்

ஒரு மூத்த பதிவராகிய தாங்கள்

தம்மத்தூண்டு பையனான என்னுடன்

போட்டிக்கு வந்தால்

என் (பிழை)ப்பு என்னவாவது

ச்சும்மா வேடிக்கைக்காக பதிந்தேன்.

விஷமமாக புரிந்துகொள்ள வேண்டாமய்யா..

இது ஏற்கனவே ரணப்பட்ட மனம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நினைத்தது நடக்குமா...? என்கிற ஆவலில் உள்ளேன்...!

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said..//

.[நான் என் மனதில் ஒன்றை யூகித்து வைத்துள்ளேன். அதுவாகவே இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே :) ]
ஆம் நிச்சயம் அதுதான்
வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அன்பே சிவம் //

என் பதிவை விட உங்கள்
பதிவில்தான் சுவாரஸ்யம் அதிகம் உள்ளது
உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து...

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

நான் சும்மா புள்ளிவைத்துப் போகிறவன்
அழகிய கோலமாக அதை ஆக்குவதெல்லாம்
நீங்கள் தானே
வாழ்த்துக்களுடன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவின் தொடர்ச்சியா?

சென்னை பித்தன் said...

மன்னனே வருவான் என்றால்,மலையவன் வரமாட்டானா என்ன?
அருமை

KILLERGEE Devakottai said...

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் கவிஞரே..
தமிழ் மணம் 6

தி.தமிழ் இளங்கோ said...

பீர்பால் எதைச் சொன்னாலும் செய்தாலும், அதற்கும் ஒரு காரணம் இருக்கும். அதைப்போல நீங்கள் சொன்ன இந்த கதைக்கும் ஒரு காரணம் இருக்கும்.

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான கதை! தொடர்கிறேன்!

Unknown said...

அடுத்து வருவேன்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை....

விவரங்கள் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கதை...இதோ உங்கள் தொடர்ச்சியைக் காண செல்கின்றோம் அடுத்த பதிவிற்கு...

Geetha said...

எதிர்ப்பார்ப்பைக்குட்டியுள்ளீர்கள் சார்..

Post a Comment