சமாதான காலங்களில்
சாய்வு நாற்காலிகளில்
சௌகரியமாய் அமர்ந்தபடி
" இந்து " என்றால்
திருடன் என
ஏதோ ஒரு மொழியில் இருப்பதாய்
வியாக்கியானம் செய்து கொண்டு
தேர்தல் காலங்களில்
புரோகிதர் புடைசூழ
பிரசாதம் பெற்றுக் கொண்டபடி
மருமகள்களையும்
மனைவியையும்
கோவில் கோவிலாய்ப்
போகவைத்துக் கொண்டிருப்பவரையும்..
ஊழிக்காலம் போல்
ஊரே மழை வெள்ளத்தால்
சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கையில்
எங்கிருக்கிறார்
என்ன செய்கிறார் என
அறியாதபடி இருந்துவிட்டு
தேர்தல் காலங்களில்
தாய்க்குத்தான் தெரியும்
என்ன செய்வதென்று
ஊர் ஊராய்
பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவரையும்
முக்கியமாய்
முதல்வர் வேட்பாளர்
என்னும் மதிப்புக் கூட அறியாது
மேடைகளில்
போகுமிடங்களில்
காமெடியனாகி
அரசியலை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும்
அந்தச் "சிப்பாயையும் "
முதுகு கை கால்
பகுதிகளை விட
தலையில் குட்டுவதே
ஞாபகத்தில் இருக்கவைக்கும் என்பதால்
தவறாது
மே 16 இல்
இந்தத் "தலை " களைத்
தோற்கடிப்பதம் மூலம்
அதிர்ச்சி வைத்தியம்
கொஞ்சம் கொடுத்து வைப்போம்
தமிழக அரசியலை
மே 16 இல்
இனி வருங்காலமேனும் சிறக்க
நம்மாலானதை
கொஞ்சம் செய்து வைப்போம்
சாய்வு நாற்காலிகளில்
சௌகரியமாய் அமர்ந்தபடி
" இந்து " என்றால்
திருடன் என
ஏதோ ஒரு மொழியில் இருப்பதாய்
வியாக்கியானம் செய்து கொண்டு
தேர்தல் காலங்களில்
புரோகிதர் புடைசூழ
பிரசாதம் பெற்றுக் கொண்டபடி
மருமகள்களையும்
மனைவியையும்
கோவில் கோவிலாய்ப்
போகவைத்துக் கொண்டிருப்பவரையும்..
ஊழிக்காலம் போல்
ஊரே மழை வெள்ளத்தால்
சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கையில்
எங்கிருக்கிறார்
என்ன செய்கிறார் என
அறியாதபடி இருந்துவிட்டு
தேர்தல் காலங்களில்
தாய்க்குத்தான் தெரியும்
என்ன செய்வதென்று
ஊர் ஊராய்
பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவரையும்
முக்கியமாய்
முதல்வர் வேட்பாளர்
என்னும் மதிப்புக் கூட அறியாது
மேடைகளில்
போகுமிடங்களில்
காமெடியனாகி
அரசியலை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும்
அந்தச் "சிப்பாயையும் "
முதுகு கை கால்
பகுதிகளை விட
தலையில் குட்டுவதே
ஞாபகத்தில் இருக்கவைக்கும் என்பதால்
தவறாது
மே 16 இல்
இந்தத் "தலை " களைத்
தோற்கடிப்பதம் மூலம்
அதிர்ச்சி வைத்தியம்
கொஞ்சம் கொடுத்து வைப்போம்
தமிழக அரசியலை
மே 16 இல்
இனி வருங்காலமேனும் சிறக்க
நம்மாலானதை
கொஞ்சம் செய்து வைப்போம்
6 comments:
அருமை கவிஞரே தேர்தல் தொடங்கியது முதல் நானும் இதையே வலியுருத்தி வருகிறேன் இந்த தேர்தலில் தலைவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
நல்லது செய்த காமராஜரையே தோற்கடித்தவர்கள் அன்றைய படிக்காத மக்கள், இன்று படித்த மக்கள்தானே கூடுதல் சிந்தித்து பார்த்தால் செய்யலாம்.
த.ம. + 1
இப்பதிவினைத் தாங்கள் மறுபடியும் தேர்தலுக்கு முதல் நாள் வெளியிடலாம். நல்ல பாடம் தரும் கவிதை.
மே 16 இல் மாற்றம் வேண்டும்
தமிழகத்தில் விடியல் வேண்டும்
நூற்றுக்கு நூறு சதவீதம் உடன் படுகிறேன் இந்தத்தலைவர்கள் நிற்கும் தொகுதிகளில் இதைத் துண்டுப்பிரசுரமாக வினியோகிக்கலாம்
ஆசை 33% நிறைவேறும் வாய்ப்பு உண்டு. 66% நிறைவேறினால் கூடப் போதாது. தமிழன் தேர முடியாது. கருத்துக் கணிப்புகள் திருப்திகரமாக இல்லை.
ஆசை 33% நிறைவேறும் வாய்ப்பு உண்டு. 66% நிறைவேறினால் கூடப் போதாது. தமிழன் தேர முடியாது. கருத்துக் கணிப்புகள் திருப்திகரமாக இல்லை.
Post a Comment