Saturday, April 2, 2016

மதுவை விரும்புவதே இராச விசுவாசம்

மதுவை விரும்புவதே...இங்கு.
இராச விசுவாசம் ...தினம்  
மதுவை அருந்துவதே..நல்ல
குடிமகன் அடையாளம்

மதுவை எதிர்ப்பவர்கள்...நிச்சயம்
இராசத் துரோகிகள்...இதை
அறியாது எதிர்க்காதீர்...வீணே
அவதிப் படாதீர்

ஆலைகள் எல்லாமே...தனியார்
உடமைகள் என்றாலும்...மதுச்
சாலைகள் எல்லாமே...அரசு
நிறுவனம் மறக்காதீர்

மக்களின் நலம்வேண்டி....அரசு
முனைந்து செயல்படுத்தும்....மதுத்
திட்டத்தை எதிர்க்காதீர்...அரசின்
கோபத்தைக் கிளறாதீர்

காலை ஆனாலும்...ஊரில்
சாவு ஆனாலும்
மாலை ஆனாலும்...மகிழும்
தருணம் ஆனாலும்

இரவு ஆனாலும்...எந்த
இன்னல் ஆனாலும்
சரக்கு அடிப்பதுவே...தமிழன்
சிறப்பெனச் செய்துவிட்டோம்

தமிழனை இந்நிலைக்கு...கொணர
அரசின் முதலீடு
தமிழனை இந்நிலைக்கு...கொணர
அரசின் பெரும்பாடு

ஏதும் அறியாது...மதுவை
எதிர்க்கத் துணியாதீர்
தேசத் துரோகியென...ஆகிச்
சிறையில் அடையாதீர்


                              

21 comments:

KILLERGEE Devakottai said...

நடைமுறை உண்மை.
வேதனையான வரிகள் கவிஞரே
தமிழ் மணம் 1

ஸ்ரீராம். said...

குடி மகன்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல சரக்கை நயம்பட ஊத்திக்கொடுத்து விட்டீர்கள் இந்தப்பதிவினில்.

கவிதை முழுவதும் ஒரே கிக்கோ ’கிக்’காக உள்ளது.

’மது ரம்’ ஆன கவிதைக்குப் பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

மதுவில் மயங்கிக் கிடக்கும் தமிழகம். நினைத்தாலே வேதனை தான்.

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

Unknown said...

மதுஒழிப்புசிரமமே.4தலைமுறைபழகிடுச்சு.எல்லோருமேதூங்குவதுபோல்நடிக்கின்றனர்

Unknown said...

மதுஒழிப்புசிரமமே.4தலைமுறைபழகிடுச்சு.எல்லோருமேதூங்குவதுபோல்நடிக்கின்றனர்

Unknown said...

மதுஒழிப்புசிரமமே.4தலைமுறைபழகிடுச்சு.எல்லோருமேதூங்குவதுபோல்நடிக்கின்றனர்

Unknown said...

மதுஒழிப்புசிரமமே.4தலைமுறைபழகிடுச்சு.எல்லோருமேதூங்குவதுபோல்நடிக்கின்றனர்

Kasthuri Rengan said...

அருமை தோழர்,
மனம் கணக்கவைக்கும் கவிதை..

Kasthuri Rengan said...

தம +

Seeni said...

பெரும்கொடுமை சார் இது..

சீராளன்.வீ said...
This comment has been removed by the author.
சீராளன்.வீ said...

மதுவுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றோர்கள்
சிதறுண்டு சேர்வார் சிறை !

நாட்டு நடப்பு இப்படி ஆகிவிட்டதே ஐயா
விடிவுதான் என்று நமக்கு !
அருமையான கவிதை வாழக் வளத்துடன் நன்றி
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குடிமகன்களைப் பற்றிய யதேச்சையான கவிதை.

கீதமஞ்சரி said...

வேதனை தரும் யதார்த்தம்..

Avargal Unmaigal said...

மாதுவின் ஆட்சியில் மதுவும் கூட சேர்ந்து ஆட்சி செய்கிறது என்று சொல்லுவதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்

G.M Balasubramaniam said...

மது தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா தென் மாநிலங்களிலும் ஆறாய் ஓடுகிறது என்ன வித்தியாசம் தமிழகத்தில் அரசே இதை நடத்துகிறது ஊக்குவிக்கிறது

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உண்மையின் யதார்த்தம் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

kowsy said...

இப்போ என்ன சொல்ல வருகின்றார்கள். குடி நாட்டையும் வீட்டையும் ஆஆட்டிப் படைக்கும் என்றா? வலிக்காமல் குத்தும் கலை எல்லோருக்கும் வாய்க்காது. விளங்குபவர்கள் விளங்கித் திருந்தினால் சிறப்புத்தான்.

Thulasidharan V Thillaiakathu said...

வேதனையான யதார்த்தத்தை அழகுற சொல்லிவிட்டீர்கள்...

Post a Comment