Monday, April 11, 2016

நவயுகக் கவியிவன் என்றுனை உலகிது.....

கனவு வானில்
காலம் மறந்து
நீந்த முடிந்தால்

நினைவு அலையை
முற்றாய்க் கடந்துப்
பறக்க முடிந்தால்

வார்த்தைக் கான
பொருளினை வேறாய்க்
காட்டத் தெரிந்தால்

வார்த்தையை மீறி
உணர்வு தன்னைக்
கூட்டத் தெரிந்தால்

அறிவினைக் கடந்து
மனதுடன் நெருங்கி
இருக்கத் தெரிந்தால்

அறிவினை மடக்கி
மனதினுள் நுழையும்
நுட்பம் அறிந்தால்

சந்தச் சக்தி
அறிந்து தெளிந்து
மயங்கிடத் தெரிந்தால்

சந்த மணமது
குறையா வண்ணம்
வழங்கிடத் தெரிந்தால்

கவியது நதியென
உன்னுள் பெருகி
பரவி விரியாதோ ?

நவயுகக்  கவியிவன்
என்றுனை உலகிது
போற்றிப் புகழாதோ ?

6 comments:

UmayalGayathri said...

வார்த்தைக் கான
பொருளினை வேறாய்க்
காட்டத் தெரிந்தால்

வார்த்தையை மீறி
உணர்வு தன்னைக்
கூட்டத் தெரிந்தால்//

ஆம் நவயுக கவியிவன் என்று கட்டாயம் சொல்லும் உலகம்.

நவயுக கவியின் கவிதை அருமைஅருமை ஐயா

UmayalGayathri said...

தம 1 போட்டேன்..சுற்றி முடிக்க இது 2 ஆகி விட்டது

தம 2

சாந்தி மாரியப்பன் said...

//அறிவினைக் கடந்து
மனதுடன் நெருங்கி
இருக்கத் தெரிந்தால்

அறிவினை மடக்கி
மனதினுள் நுழையும்
நுட்பம் அறிந்தால்//

அருமை.. அருமை.

Unknown said...

உண்மை! ஓதிய பாடல் முற்றும் உண்மை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கனவு வானில் காலம் மறந்து நீந்த முடிந்தால்,

நினைவு அலையை முற்றாய்க் கடந்துப் பறக்க முடிந்தால்,

வார்த்தைக்கான பொருளினை வேறாய்க் காட்டத் தெரிந்தால்,

வார்த்தையை மீறி உணர்வு தன்னைக் கூட்டத் தெரிந்தால்,

அறிவினைக் கடந்து மனதுடன் நெருங்கி இருக்கத் தெரிந்தால்,

அறிவினை மடக்கி மனதினுள் நுழையும் நுட்பம் அறிந்தால்,

சந்தச் சக்தி அறிந்து தெளிந்து மயங்கிடத் தெரிந்தால்,

சந்த மணமது குறையா வண்ணம் வழங்கிடத் தெரிந்தால் .....

’முடிந்தால்’, ’தெரிந்தால்’, ’அறிந்தால்’ இவையெல்லாம் ஒன்றுமே தெரியாமல்தானே திண்டாடி வருகிறோம்.

//கவியது நதியென உன்னுள் பெருகி பரவி விரியாதோ?//

எங்களுக்கெல்லாம் குறிப்பாக எனக்கு அந்த சான்ஸே இல்லை.

//நவயுகக் கவியிவன் என்றுனை உலகிது போற்றிப் புகழாதோ ?//

இவை அனைத்தும் ஒருங்கே பெற்றுள்ள தங்களை மட்டுமே நான் ’கவிஞர்’ என்று போற்றிப் புகழ விரும்புகிறேன்.

நல்லதொரு நயமான பதிவை ரஸிக்க முடிந்ததில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், சார். அன்புடன் VGK

Thulasidharan V Thillaiakathu said...

வார்த்தைக் கான
பொருளினை வேறாய்க்
காட்டத் தெரிந்தால்

வார்த்தையை மீறி
உணர்வு தன்னைக்
கூட்டத் தெரிந்தால்

அறிவினைக் கடந்து
மனதுடன் நெருங்கி
இருக்கத் தெரிந்தால்//

அருமை அருமை ம்ம்ம் சந்தநயமும் கூடிவிட்டால் கவிதை ஆனந்தநடமாடும்தான்...

Post a Comment