Tuesday, April 19, 2016

தேர்தலில்...இப்படி நடந்தால் சந்தோஷம் தான்..

புலிவாலைப் பிடித்த நாயர் படுகிற அவஸ்தை
என்கிற சொற்றோடர் கூட நமது
புரட்சித் தலைவர் அவர்கள் ஒருமுறை
கோடிட்டுக் காட்டியதால் பிரபல்யமானது
என நினைக்கிறேன்

அந்த வகையில் 90 வயது கடந்தும்
அரசியல் போர்க்களத்தில் முன்னணியில்
இருக்க வேண்டிய நிலையில் கலைஞர்
அவர்களும்

நின்று பேசக் கூட முடியாத சாலை வழி
பயணம் செய்ய முடியாத நிலையில்
புரட்சித் தலைவி அவர்கள் படுகிற
அல்லல்களையும்

பேசக் கூட முடியாத நிலையில்
கேப்டன் அவர்கள் படுகிற
துயரையும் பார்க்க உணமையில்
மனது சங்கடமாகத்தான் உள்ளது

அவர்களாக முன்னிலையில்ருந்து
விலக மாட்டார்கள் என்பதால்

அந்த அந்தக் கட்சியில் அபிமானம்
உள்ளவர்கள் , தங்கள் தலைவர்கள்
மீது உணமையான அன்பும் பாசமும்
கொண்டிருந்தால்

இந்த மூவரை மட்டும் முதல்வர் பதவி
ஏற்காத வகையில்  தேர்தலில்
தோற்கச் செய்துவிட்டால்
நிச்சயம் தனிப்பட்ட முறையில்
அவர்களுக்கு நாம் மிகப் பெரிய நன்மை
செய்ததாகவே இருக்கும்

அப்படிச் செய்தால் கட்சித் தலைவர்
என்கிற முறையில்
அவர்களது அனுபவமும்,ஆற்றலும்
அவர்களுடைய அடுத்த நிலையில் உள்ள
தலைவர்கள் மூலம் இவர்கள்
உடல் ரீதியாகக் கஷ்டப்படாமல்
செயலாக்க முடியும் தானே / இல்லையா

(இவர்கள் மட்டுமில்லை
அறுபதைக் கடந்து உடல் ரீதியாக
இயலாமல் இருக்கிற எந்தக் கட்சி வேட்பாளர்களாக
இருந்தாலும் )

16 comments:

ஸ்ரீராம். said...

நல்ல யோசனை.

KILLERGEE Devakottai said...

நல்ல யோசனைதான் கவிஞரே மக்கள் ஏற்பார்களா ?
தமிழ் மணம் 3

வை.கோபாலகிருஷ்ணன் said...

அறுபதிலும் ஆசை வரும் !

-oOo-

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது !

-oOo-

வயது நூறானாலும் பதவி ஆசை
யாரையும் விடாது.

அதனால் தாங்கள் சொல்வது நல்ல யோசனையே என்றாலும் நடைமுறைக்கு ஒத்துவராது.

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல யோசனைதான். ஆனால் கட்சியை வழி நடத்திட இவர்களைத்தானே காட்ட வேண்டி இருக்கிறது. அமெரிக்காவைப் போல் 'ஒருவர் இரண்டு முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது' என்ற சட்டம் இங்கும் வந்தால் நிலைமை மாறலாம்.

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

நல்ல சிந்தனை வாக்காளர்கள். செய்வார்களா???

Yarlpavanan said...

மக்கள் வாக்கு மாற்றம் தருமா?
காலம் பதில் சொல்லுமே!

http://tebooks.friendhood.net/

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். அவர்கள் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும்.

கீதமஞ்சரி said...

அவர்களாக ஒதுங்கி வழிவிடவில்லையெனில் மற்றவர்களால் ஒதுக்கப்படத்தான் வேண்டும்.. அனைவரும் உணர்வார்களா?

kowsy said...

ஆலோசனை வழங்கி ஆட்சியாளர்களுக்கு பின்னிருந்து தட்டிக் கொடுக்கின்றது வேண்டிய மனம் யாருக்குத்தான் வரும். அரசியல் ஆசை பொல்லாத்து என்பதை எத்தனைத் திரைப்படங்கள் மூலம் பார்த்திருக்கின்றோம்.

Bhanumathy Venkateswaran said...

நல்ல யோசனை! ஆனால் அரசியலில் ஒருவன் தொண்டனாக நுழைந்து, தனி வாழ்வில் பல தியாகங்களை செய்து, ஒரு நிலைக்கு வந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே 40 வயதுக்கு மேல் ஆகி விடுகிறது. ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் 40 வயதை கடந்த பிறகுதான் அரசியலுக்கே வந்தார்கள். அப்படி இருக்க, அவர்களை 60 வயதாகி விட்டது அரசியலில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்றால் செய்வார்களா? ஏன் முதியவரான மகாத்மா காந்தியாலேயே இளைஞரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரெஸ் கட்சி தலைவராக ஆனதை சகித்துக் கொள்ள முடியவில்லையே? அதனால்தானே சுபாஷ் சந்திர போஸ் காங்கிரெஸ் ஐ விட்டு விலகினார். இவ்வளவு ஏன் எத்தனை மாமியார்கள் மருமகளுக்கு சமையலறையை விட்டு கொடுக்கிறார்கள்? அதிகாரம் தரும் போதை அது. அதோடு புகழும் செல்வாக்கும் சேரும் போது கேட்கவா வேண்டும்?

Anonymous said...

not necessary that someone should be MLA to sworn in CM.. they can take over CM seat and can win in a by-election within six months.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல ஆலோசனை ஐயா
தம +1

G.M Balasubramaniam said...

கட்சியின் தலைமையே இவர்கள்தானேஇவர்கள் போட்டியிடும் தொகுதி மக்கள் கையில் இருக்கிறது கருணாநிதிக்குப் பின் யார் என்பதில்தானே திமுகவில் இழுபறி. ஜெயலலிதாவுக்குப் பின் யாருமே அதிமுகவில் இல்லாததுதானே பிரச்சனை. ஒரு ஆலமரத்தின் கீழ் எந்த பயிரும் வளராதென்பார்கள் ஜெயலலிதாவின் கீழ் யாருமே வளர முடியாது. யோசனை நல்லதுதான் பார்ப்போம்

Thulasidharan V Thillaiakathu said...

பார்க்கப் போனால் எதிர்கால அரசியல் ஆட்சி இளைஞர்கள் கையில் வந்தால் நல்லது. ஒன்று பெரிய தலைகள் தங்கள் இயலாமையை அதாவது உடம்பு ரீதியான இயலாமையை ஏற்றுக் கொண்டு இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைந்து வழி கொடுக்க வேண்டும் இல்லையேல் அவர்கள் ஒதுக்கப்பட வேண்டும்...நல்ல யோசனை சார்...எங்களுக்கும் இது அடிக்கடித் தோன்றிய யோசனை...மத்திய ஆட்சிக்கும் இது பொருந்தும்...

S.Venkatachalapathy said...

சிந்திக்கும் மக்கள் ஒருபுறம், கட்சி அபிமானிகள் ஒருபுறம், பணம் வாங்கி ஓட்டுப் போடுபவர்கள் ஒருபுறம். ஆக இருவரில் ஒருவர் என்றுதான் தேர்தல் கணிப்புகள் சொல்லும். மதுரையில் தென்படும் மார்பில் கம்பெனி விளம்பரம் ஒன்று போல் முகத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

Post a Comment