Friday, April 22, 2016

தேர்தல் டெம்லேட்ஸ்....

திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்
பொய்யை உண்மை போலாக்கி பின்
உண்மையாக்கி விடமுடியும் என்கிற
கோயபெல்ஸ் தியரிப்படி...

அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை
நிரந்தர நண்பனும் இல்லை என்பதை
நம்ப வைத்த மாதிரி....

ஒரு கட்சி பிடிக்கவில்லை எனில்
அடுத்து வர வாய்ப்புள்ளக் கட்சிக்கு
ஓட்டுப் போடவேண்டும் இல்லையெனில்
நம் ஓட்டு பயனற்றதாகிப் போகும்
என்கிற தியரியை நம்ப வைக்க தொடர்ந்து
முயற்சிக்கிறார்கள்

உண்மை அப்படியில்லை

இப்போது இந்தத் தேர்தலில்
விஜயகாந்த அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட
கூடுதல் முக்கியத்துவமே அவர் அதிக இடங்களைப்
பெற வில்லையாயினும்

அதிக சதவீத ஓட்டுக்கள் பெற்றதால்தான்.

முன்னணியில் உள்ள கட்சிகள் இரண்டும்
தங்கள் பண பலத்தின் மூலம் இதுவரை
இவர் இல்லை நான் என்கிற ஒரு பொய்யான
ஒரு பிம்பத்தை உண்டாக்கி நம்மை
ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

நிச்சயமாக இந்த முறை புதிதாக வாக்களிக்க உள்ள
இளைஞர்களிடம் இந்தப் பம்மாத்துப் பிரச்சாரம்
எடுபட வாய்ப்பில்லை எனவே நினைக்கிறேன்

எனவே

இந்தத் தேர்தலில் ஜெயிக்கும் ஜெயிக்காது என்கிற
எண்ணத்தைவிட்டு ஜெயிக்கவேண்டிய கட்சி
என்பதற்கு ஓட்டளிப்போம்

அது எத்தனை சிறியதாயினும்...

அதுவே அரசியலில் நல்லவர்கள்
நம்பிக்கை கொள்ளவும்
துணிந்து ஈடுபடவும் வைக்கும் என்பதை
தேர்தல் நாளில்
மறவாது மனதில் கொள்வோம்

15 comments:

Selvadurai said...

நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். களத்தில் இருக்கும முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாறி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.

Yarlpavanan said...

அருமையான திறனாய்வுப் பார்வை

உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அரசியலில் நல்லவர்களா?

G.M Balasubramaniam said...

nota பட்டனை அழுத்தி யாருமே சரியில்லை என்று தெரிவித்து அதன் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால் யார் வெற்றி பெற்றதாகக் கொள்வது ?

Selvadurai said...

அரசியல் ஒரு சாக்கடை என்று அனைவரும் ஒதுங்கி நின்றால் யார் தான் அதை சுத்தம் செய்வது? சாக்கடை நின்றுகொண்டு இருந்தால் நாறும். அதுவே ஓட ஆரம்பித்தால் அனைவருக்கும் நல்லது. அந்த சாக்கடை நன்றாக ஓடி நம் அவலங்களை எல்லாம் அடித்துச் சென்றால் எவ்வளவு நல்லது!!!!. நல்லவர்கள் நம்பிக்கை இழந்துவிடாமல் இந்த சாக்கடையை ஓட வைக்க இயன்றவரை பாடுபடுவோம்!!

அப்பாதுரை said...

ஜெயிக்க வேண்டிய கட்சி என்று இருக்கிறதா என்ன? அத்தனையும் ஊழல் அல்லது சோம்பேறிக் கூட்ட கட்சிகள்.

அப்பாதுரை said...

ஜெயிக்க வேண்டிய கட்சி என்று இருக்கிறதா என்ன? அத்தனையும் ஊழல் அல்லது சோம்பேறிக் கூட்ட கட்சிகள்.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல ஆலோசனை!

V Mawley said...

திரு . G M .B அவர்களின் சந்தேகம் எனக்கும் தான் ..இந்த வழி முறையை ஏற்படுத்தியவர்களே இந்த சாத்திய கூற்றுக்கு விடை
வரையறுத்து விட்டதாக தெரியவில்லை ...?

மாலி

V Mawley said...


மரவெட்டி ராமதாஸ் is only Taminadu counterpart of Bal thakare !

மாலி

V Mawley said...

திரு . G M .B அவர்களின் சந்தேகம் எனக்கும் தான் ..இந்த வழி முறையை ஏற்படுத்தியவர்களே இந்த சாத்திய கூற்றுக்கு விடை
வரையறுத்து விட்டதாக தெரியவில்லை ...?

மாலி

Unknown said...

நேர்மையான அரசியல்வாதி யார்.இதுபோல் ஒருகுழப்பமானதேர்தல்சூல்நிலைஎத்தேர்தலிலும் தமிழகம்பார்க்கலே

Unknown said...

நேர்மையான அரசியல்வாதி யார்.இதுபோல் ஒருகுழப்பமானதேர்தல்சூல்நிலைஎத்தேர்தலிலும் தமிழகம்பார்க்கலே

Unknown said...

நேர்மையான அரசியல்வாதி யார்.இதுபோல் ஒருகுழப்பமானதேர்தல்சூல்நிலைஎத்தேர்தலிலும் தமிழகம்பார்க்கலே

Unknown said...

நேர்மையான அரசியல்வாதி யார்.இதுபோல் ஒருகுழப்பமானதேர்தல்சூல்நிலைஎத்தேர்தலிலும் தமிழகம்பார்க்கலே

Post a Comment