Monday, April 25, 2016

தேர்தல்--- இதையும் யோசித்து வைப்போம்

இன்னும் மிகச் சரியான முடிவுக்கு
வரமுடியாமல் வாக்காளர்கள் எல்லாம்
குழம்பிக் கிடக்கிறார்கள்

பிரச்சாரத்தின் உச்சக் கட்டத்தில்
புதிது புதிதாக   எதையாவதுச் சொல்லி
இன்னும் குழப்புவார்கள்

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்

இந்தத் தேர்தலில் ஒருவேளை
தி.மு.க மெஜாரிட்டிப் பெற்று
ஆட்சி அமைக்குமானால் ஏதாவது
ஒரு காரணம் சொல்லிப் புரட்சித் தலைவி அவர்கள்
சட்டசபை செல்ல மாட்டார்கள்

ஒருவேளை அ.இ அ.தி.மு.க மெஜாரிட்டிப் பெற்று
ஆட்சி அமைக்குமாயின் ஏதாவது
ஒரு காரணம்சொல்லி கலைஞர்
அவர்களும் சட்டசபை செல்லமாட்டார்கள்

இவர்கள் இருவரில் யார் ஜெயித்து
ஆட்சி அமைத்தாலும் கேப்டன்
சட்டசபை செல்ல மாட்டார்

இதில் யாருக்கும் சந்தேகமில்லை

ஆகையால் முடிவு எப்படி இருக்கும்
எனத் தெரியாத பட்சத்திலும்

இவர்கள் மூவரும் ஆட்சிப் பொறுப்பு இல்லையெனில்
சட்டசபை செல்ல மாட்டார்கள் என்பது
சர்வ நிச்சயம்

எனவே  இந்த மூவரும் நம்மை, நம்
வாக்கினை உதாசீனப் படுத்த வாய்ப்புத் தராமல்
நாம் ஆரம்பத்திலேயே அவர்களை
உதாசீனப்படுத்திவிட்டால்
தோல்வியுறச் செய்துவிட்டால்.......

ஒரு கட்சி ஜெயித்துத்  தோற்றத் தலைவர்
மீண்டும் மறுதேர்தலில் நின்று ஜெயித்துவிட்டுப்
போகட்டும்

மற்றபடி தலைவர்கள் அல்லாத
இரண்டு எம்.எல் ஏக்களாவது தங்கள் தொகுதி சார்பாக
சட்டசபையில் இருக்க வாய்ப்புண்டு இல்லையா ?

அல்லது

ஆட்சிக் கட்டிலில் அமரவில்லையாயினும்
சட்டசபை சென்று ஜன நாயகக் கடமை ஆற்றுவேன்
ஓட்டளித்த தொகுதி மக்களை ஏமாளியாக்க மாட்டேன்
என்கிற வாக்குறுதியை இந்தப் பிரச்சாரக்
காலத்திலேயே தர  வேண்டும் என்பதை
கோரிக்கையாக  வைக்கலாமா ?

இதையும் கொஞ்சம் யோசித்து வைப்போமே ?

4 comments:

Avargal Unmaigal said...

சொன்னா நம்ப மாட்டீங்க இதையேதான் நான் இன்று நினைத்தேன் அதை எழுத வேண்டும் என்றும் நினைத்து இருந்தேன் ஆனால் அதையே நீங்கள் உங்கள் பாணியில் எழுதிவிட்டீர்கள்

தி.தமிழ் இளங்கோ said...

தேர்தலில் நிற்கும் எந்தக் கட்சியுமே யோக்கியதையாய் இல்லை என்பார்களாம். ஆனாலும் அவற்றுள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை ஆத்தோ ஆத்து என்று ஆத்த வேண்டும் என்றும் சொல்வார்களாம். நல்ல கூத்து.

ஒருவர் ஒருமுறைதான் போட்டியிட வேண்டும் என்று சட்ட திருத்தம் வர வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் அரசியல் ஆரோக்கியமாக இருக்கும்.

G.M Balasubramaniam said...

யார் ஆட்சிக்கு வந்தாலும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அவசியம் சட்டசபைக்குச் செல்ல வேண்டும் அப்படிச் செய்யவில்லைஎன்றால் அவர்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் தம்மைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை மதிப்பதில்லை என்றும் அர்த்தம்

”தளிர் சுரேஷ்” said...

அருமையா சொன்னீங்க! எல்லோரும் இப்படி நினைக்க ஆரம்பித்தால் அரசியல் உருப்படும்!

Post a Comment