Thursday, April 28, 2016

தேர்தலில் விஷ ஊற்று

விஷ ஊற்றை அடைக்காது
தூர்வாரி
கிணற்றைச் சுத்தப்படுத்த நினைத்தல்
நிச்சயம் பேதமையே

ஜாதி மத இனப் பிரிவுகளுக்கு
அடிப்படையாய் இருப்பதும்
அவைகளை வளர்த்தெடுப்பதும்
தேர்தல் களமே

தேர்தலில்
விஸ்வரூபம் எடுக்கும் அதை
ஜாடிக்குள் அடைக்காது
பின் போரிட்டு நோதல்
நிச்சயம் அறிவீனமே

தலையோ
நெற்றியோ
கழுத்தோ
உடலில்
மதச் சின்னம் தாங்கி வருபவன்
உள்ளத்திலும் அதைத் தாங்கித்தான் வருவான்

குறைந்தபட்சம்
இவர்களையாவது மாற்ற முயல்வோம்

எண்ணத்தை
இறக்க முடியவில்லையெனில்
மதச் சின்னத்தையாவது
இறக்கி வைக்கப் பணிப்போம்

ஏனெனில் இவர்கள்
தன் மதத்தினரை
மதச் சின்னத்தால்
திருப்திப் படுத்திவிட்டு
மற்ற மதத்தவரை
எளிதாய் ஏமாற்றவே
"மதச் சார்பற்றவற்றவன் " என
வார்த்தை ஜாலம் காட்டுவார்கள்

நீங்கள் மதச் சார்ப்பற்றவர் எனில்
இவர்கள் விஷயத்தில்
எச்சரிக்கையாய் இருங்கள்

அவர் எந்த மதத்தினராயினும் சரி

போலி மதச்சார்பின்மை
மதச் சார்பினை விட
மிக மிக ஆபத்தானது

எண்ணங்களின்
அதீத வெளிப்பாடே  மதச் சின்னங்கள்

மதச் சின்னங்களே
நம் ஒற்றுமையை
சின்னாபின்னப்படுத்தும்
வலிமை  மிக்க முதல் காரணிகள்

இந்தத் தேர்தலிலேனும்
விஷ ஊற்றுக்களை
அடைக்க முயல்வோம்

பின் படிப்படியாய்
சமுதாயக் கிணற்றில்
தூர்வாரத் துணிவோம்

6 comments:

ஸ்ரீராம். said...

போலி மதச்சார்பின்மை ஆபத்தானது. ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பவர்களும் மதச்சார்பின்மை என்று கூறிக் கொள்வது வேடிக்கையானது!

நம்பள்கி said...

[[[தலையோ
நெற்றியோ
கழுத்தோ
உடலில்
மதச் சின்னம் தாங்கி வருபவன்
உள்ளத்திலும் அதைத் தாங்கித்தான் வருவான்]]

எம்மதமும் சம்மதம் அல்ல!
மதம் மனிதன் உண்டாக்கிய விஷம்.
ஜாதி [இந்தியர்களுக்காக] மனிதன் உண்டாக்கிய விஷம்.

G.M Balasubramaniam said...

சின்னத்தைக் குறிவைப்பதைவிட சிந்தனையை குறிவைக்க வேண்டும்

வலிப்போக்கன் said...

சமுதாயக் கிணற்றில்
தூர்வாரத் துணிவோம்! அய்யா....

Yarlpavanan said...

நன்றாக அலசி உள்ளீர்கள்

தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topic

Unknown said...

யாராள வந்தாலும் ஊழல் ஒழியாது!நண்பரே!

Post a Comment