Monday, April 11, 2016

படிப்படியாய்க் "குறைப்பதா "அல்லது "அளப்பதா "

மது விலக்குக் குறித்த
"அம்மாவின் " பேச்சு
எதன் அடிப்படையில் இருக்கச் சாத்தியம் ?

அவர்களின்
சுயச் செல்வாக்கின் மீது கொண்ட
அதீத நம்பிக்கையிலா ?

மக்களின்
சுய அறிவின் மீது கொண்ட
கேவலமான அபிப்பிராயத்திலா ?

இதில்
எதன் அடிப்படையில் இருக்கச் சாத்தியம் ?

இதுவரை
அதிகாரப் பதவியில் இல்லாதோர்
மதுவை ஒழிப்பதாகச்
சொல்வதைக் கூட
நம்பி வைக்கலாம்
கண்மூடித்தனமாக

அதிகாரப் பதவியில்
இருந்து இழந்தவர்கள்
சொல்வதைக் கூட
நம்பி வைக்கலாம்
பட்டுத் திருந்திருக்கலாம்
எனும்படியாகக் கூட

அசுர பலத்தோடு
ஐந்தாண்டு காலம்
ஆட்சியில் இருந்தும்

மனத்தால் கூட
எதிர்ப்பினை எண்ணப் பயந்த
மந்திரிகள் இருந்தும்

செய்ய எண்ணாததை
செய்ய முயலாததை..

"படிப்படியாய் "
இனிக் குறைப்பதாய்ச் சொல்வது
எந்த வகையில் சேர்த்தி ?

மதுவுக்கு எதிராகக்
குரல் கொடுப்போரை
கைது செய்தும்
தேசத் துரோகியென
குற்றம் சாட்டியும்

மதுவுக்கு ஆதரவான
மக்களுக்கு எதிரான
தங்கள் மனோவிகாரத்தை
பகிரங்கப் படுத்தியவர்கள்.....

மது விலக்குக் குறித்து
இன்று முழங்குவது
எதனால் சாத்தியமானது ?

அவர்களின்
சுயச் செல்வாக்கின் மீது கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?

மக்களின்
சுய அறிவின் மீது கொண்ட
கேவலமான அபிப்பிராயத்தினாலா ?

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவர்கள் சொன்னால் சொன்னபடி, படிப்படியாகச் செய்வார்கள், என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

உதாரணமாக, இன்று தமிழ்நாட்டுக்குள் மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை என்றாலும்கூட, எப்படியோ மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?

ஒளிமயமான நிகழ்காலம் என்ற இந்த ஒரு சாட்சி போதாதா?

அவர்களின் சுயச் செல்வாக்கின் மீது கொண்ட
அதீத நம்பிக்கையினால் மட்டுமே என நினைக்கத் தோன்றுகிறது, படிப்படியான மது இல்லா எதிர்காலம் என்பதும்.

எதையும் யாராலும் உடனடியாக முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.

சும்மா வாய் புளிச்சுதா அல்லது மாங்காய் புளிச்சுதா என பேசிக்கொண்டிருப்பதில் பயன் ஏதும் இருக்கப்போவது இல்லை.

இது என் சொந்தக்கருத்து மட்டுமல்ல, பெரும்பாலான பொதுமக்களின் கருத்து என எனக்குத் தோன்றுகிறது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே .. இன்னும் கொஞ்சம் நாட்கள்தானே உள்ளது. பார்ப்போம்.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். பெரும்பாலான மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ஆகும்.

Unknown said...

சரியான கேள்வி!நன்றி இரமணி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தலைப்பில் அனைத்தும் அடங்கிவிட்டது. அருமை.

S.P.SENTHIL KUMAR said...

சரியான சாட்டையடி. எலும்பில்லா நாக்கு எப்படியும் புரண்டு பேசும் என்பதற்கு இந்த அறிவிப்பு நல்ல சாட்சி.
த ம 3

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கேள்விகள்! அருமையான வரிகள்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment