Friday, May 19, 2017

நண்பர்களும் பகைவர்களும்

முள்ளும் மலருமே
ரோஜாவை
அடையாளம் காட்டிப் போகின்றன
செடிக்கு
அழகு சேர்த்துப் போகின்றன

நண்பர்களும்
 பகைவர்களுமே
வாழ்க்கையினை
அர்த்தப்படுத்திப் போகிறார்கள்
தொடர்ந்து
முன்னெடுத்துப் போகிறார்கள்

நீரும் நெருப்பும் போல
நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல

இடம் மாறத் தக்கவை எப்படி
எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?

நம் வளர்ச்சி கண்டு
குமுறித் தவிக்கும் நண்பன்
மோசமான எதிரியாகிறான்

நாளடைவில்நய வஞ்சகனாய்
உருமாறிப் போகிறான்

நம் தரம் கண்டு
மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
உண்மை நண்பனாகிறான்

பின்  ஒரு நாள் உ யிர்த் தோழனாய்
நிலை மாற்றம் கொள்கிறான்

நண்பர்கள் என
அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்

பகைவரென
அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்

நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்

இடம் மாறத் தக்கவைகளிடம்
அலட்சியம் கொள்வது
அறிவுடமையல்ல

இன்றைய நிலையில்...

அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட

நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை

10 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க..

//நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்//
உண்மைதான் எதுக்கும் எல்லை வைப்பது நல்லது.

திண்டுக்கல் தனபாலன் said...

மாறத் தக்கவை என்றும் எதிரானவை அல்ல என்று சொன்னவிதம் அருமை ஐயா...

Angel said...

/அன்றாட வாழ்வில் கூட

நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை/

மிகவும் அருமையான உண்மையான வரிகள்

Unknown said...

மாற்றம் வரும் என்பதில் மாற்றமே இல்லை என்பது இதற்கும் பொருந்துமோ :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நண்பர்கள் என அதிகம் கொண்டாடி நட்பிழக்கவும் வேண்டாம்

பகைவரென அழிக்கமுயன்று நிலை குலைதலும் வேண்டாம்//

உண்மையை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

Kasthuri Rengan said...

வாழ்வே அரசியலாகிவிட்டது என்பதுதான் உண்மை..
தம +

Avargal Unmaigal said...

காலச் சூழலில் எல்லாம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது அதனால் நாம் எதிலும் அதிகப்பற்றோ அல்லது வெறுப்போ கொள்ளலாமல் ஞானியக இருக்க வேண்டியதுதான்

கரந்தை ஜெயக்குமார் said...

நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்

அருமை
நன்று சொன்னீர் ஐயா

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். இறுதியில் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.

கோமதி அரசு said...

//அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட

நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை//

உண்மை.
அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

Post a Comment