Saturday, May 6, 2017

எல்லோரையும் போல அவனும்....

"இன்னும் கொஞ்சம் "
எனும் வார்த்தை அவனுள்
எப்போது குடிகொண்டது ?

அது அவனுக்கே நினைவில்லை

நல்ல கல்லூரி கிடைக்காதபோது

"இன்னும் கொஞ்சம் நன்றாய்
படித்திருந்தால்.. :?
எனத் துவங்கி

 நல்ல வேலை கிடைக்காதபோது

"இன்னும் கொஞ்சம்
முயன்று இருந்தால் ?"
எனத் தொடர்ந்து

அழகான பெண் கிடைக்காதபோது

'இன்னும் கொஞ்சம்
பொறுத்திருந்தால் ?"
என மயங்கி

இப்படித் துவங்கிய
"இன்னும் கொஞ்சம் ...

 கிடைத்திருந்தால்...
கேட்டிருந்தால்....
வாங்கி இருந்தால்...
கொடுத்து இருந்தால்...
பணிந்து இருந்தால்...
போராடி இருந்தால்....

என ஒவ்வொன்றும்
முடிந்த பின்னும்
தான் கொண்ட எண்ணம்
எத்தனை மடத்தனமானது
என எண்ணி எண்ணி
நொந்து வாழ்ந்தவன். .  ...

இப்போது கூட
மரணப்படுக்கையில்
"இன்னும் கொஞ்சம்...
தான்வாழ முடிந்தால்..".

என எண்ணி மாய்கிறான்
 எல்லோரையும் போலவே 
அவனும்

11 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
ஒவ்வொரு மனதிலும் ஓடும்சிந்தனை வேறு வேறு என்பதை புரிகிறது. அழகாக சொல்லியுள்ளீர்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து!

KILLERGEE Devakottai said...

மன ஓட்டம் அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குடி கொண்டது...என்றவுடன் புரிந்துகொண்டேன்.

இராய செல்லப்பா said...

அழகான கவிதை..ஆழமான கருத்து!

வெங்கட் நாகராஜ் said...

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.,. அதை உணர்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’எல்லோரையும் போல அவனும்....’ என்ற தலைப்பும், சொல்லியுள்ள கருத்துக்களும், அதற்கான உதாரணங்களும் அருமையோ அருமை. பாராட்டுகள்.

ராஜி said...

சாப்பாட்டை தவிர போதும்ன்னு சொல்ல நமக்கு மனசு வராதே

Angel said...

இருப்பதே போதும் கொஞ்சம் ..கொஞ்சம்கொஞ்சமாக கூடும் வேண்டாததையும் கூட்டும் .அருமையான கவிதை வரிகள்

Thulasidharan V Thillaiakathu said...

போதும் என்ற சொல்லை மனிதன் எப்போது கற்கிறானோ அப்போது வாழ்வின் ஆனந்தம் பெருகும்...நல்ல கருத்து

ஆன்மீக மணம் வீசும் said...

சராசரி மனிதனின் சிந்தனை

இதிலிருந்து மீண்டால் வாழ்வு இனிக்கும்.

நம் வாழ்வு நம் கையில்.

அருமை

Post a Comment