Wednesday, October 14, 2015

பதிவர்கள் ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

பதிவெழுத்தினை நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை
ஏனெனில் அதில்
அந்தரங்களைப் பதிவு செய்வதில்லை
ஆயினும் அந்தரங்கங்களின்
சாரத்தைப் பதிவு செய்வதால்
இது நாட் குறிப்பினும் மிகச் சிறந்ததே

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை
ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை
ஆயினும் அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்
பதிவர்களின் படைப்புகள்
கவிதையினும் அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை
ஏனெனில் ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை
ஆயினும் சுயக் கட்டுப்பாடும்
ஒரு நொடியில்
உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்
பதிவுகள் ஊடகத்தினும் உயர்வானதே

பதிவர்கள் ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை
ஆயினும் ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு
நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவர்கள்  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

(மிகச் சிறப்பாக பதிவர் திரு விழாவினை
 நடத்திக் கொடுத்த புதுகைப் பதிவர்களுக்கும் 
சிறப்பாக நடைபெற அனைத்து விதத்திலும்
ஒத்துழைத்த பதிவர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்  )

17 comments:

KILLERGEE Devakottai said...

நல்லதொரு அலசல் கவிஞரே அருமை
தமிழ் மணம் 2

ஸ்ரீராம். said...

அருமையாகச் சொன்னீர்கள்.

சென்னை பித்தன் said...

அருமை.(அதனால்தான் நான் என் கவிதையைச் சில நேரம் கவுஜ என்று சொல்லுவேன்!)

இளமதி said...

உண்மை! உண்மை!

உள்ளதை உள்ளபடி சொல்வதில்
உங்களுக்கு நிகர் நீங்கள்தான் ஐயா!

வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ஐயா! உங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை!

வெங்கட் நாகராஜ் said...

அருமை....

ananthako said...

arumai.முதல் முறையாக வலைப்பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள வந்தேன்.

தயக்கம் செல்லவேண்டுமா ?வேண்டாமா ? என்ற இர ண்டுங்கெட்டான் நிலை.

அங்குவந்ததும் பழனி கந்தசாமி அவர்கள் ரமணி செல்லப்பா கர்னல் புலவர் ராமனுஜம் பாலசுப்ரமணியம் என்ற மூத்த பதிவர்கள் நேரில் சந்தித்த மகிழ்ச்சி. ஆரம்பம் முதல் இறுதிவரை அருமையான நிகழ்ச்சி இடையில் செல்வி சுபாவின் பாரதியார் பாடல்கள் .அடுத்த சந்திப்பு என்ற ஆர்வம்

Seeni said...

நல்லா சொல்லிடீங்க அய்யா

தனிமரம் said...

சிறப்பாக சொன்னீ ங்கள் ஐயா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நன்றி சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள்
தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சசிகலா said...

மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐயா. தங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

கே. பி. ஜனா... said...

சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

G.M Balasubramaniam said...

பதிவர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் எல்லாமே உவத்தலின் கண் அமைந்தது
@சேதுராமன் அநந்தகிருஷ்ணன் முகம் தெரியா பதிவர் சங்கமத்தில் உங்களை நீங்களே அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கலாம் சந்திப்பு வேறு அறிமுகம் வேறு அல்லவா

Thulasidharan V Thillaiakathu said...

அழகாகச் சொல்லிச் சென்றிருக்கின்றீர்கள்..

மணவை said...

அன்புள்ள அய்யா,

பதிவர்கள் உயர்வானவர்கள் என்பதை உள்ளத்தில் உள்ளபடி அழகாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள்.

நன்றி.
த.ம.9

தி.தமிழ் இளங்கோ said...

நன்றி அய்யா! தொடர்கின்றேன்!

Geetha said...

மிக்கநன்றி சார்.

Post a Comment