Sunday, August 21, 2016

ரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )

                                  காட்சி-1  

(ரஜனி  சுற்றிலும் கண்ணாடிப் பதித்த தனது
அறைக்குள் அதீதச் சிந்தனையுடன்
தன் மோவாயைத் தடவியபடி ஆழ்ந்த யோசனையில்
இருக்கிறார்.

சட்டென நெற்றியைத்
தேய்த்தபடியும்,சடாரெனத் திரும்பியப்படியும்
கண்களை கண்ணாடியின் மிக அருகில்
கொண்டுபோய்விழித்துப் பார்ப்பதும்
ஏதோ அவசியமாய் ,அவசரமாய்
ஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்
இருப்பதை நமக்குப் புலப்படுத்துகிறது

திடீரென சட்டென முன்பிருந்த கண்ணாடி டேபிளில்
ஓங்கிக் குத்தியபடி நிமிர்கிறார்

கண்ணாடியில் அவர் மெல்லப் புன்னகைப்பது
நமக்குத் தெரிகிறது.அவசரமாய் கதவைத் திறந்து
வெளியேறுகிறார் )


               காட்சி -2

( கல்யாண மண்டபம் போல் இருக்கிற ஹாலின்
ஊஞ்சலில்  எங்கோ வெறித்துப் பர்ர்த்தபடி
மிக வேகமாக ஆடியபடி இருக்கிறார் ரஜினி
இடது புறம் அவர் மனைவி லதா அவர்களும்
வலது புறம் இரண்டுப் பெண்களும் பதட்டத்துடன்
நிற்கிறார்கள். வேகமாக ஒரு முறை ஊஞ்சலை
ஆட்டிவிட்டு அதுவாக ஓய்கிறவரை விட்டு விட்டு
அது நின்றவனுடன் பேசத் துவங்குகிறார் )

ரஜினி  (மனைவியைப் பார்த்தபடி )
            எஸ் எஸ். நானும் ரெண்டு நாளா நீ
            சொன்னதையெல்லாம்..
            ஆமாம்..நீ.... சொன்னதையெல்லாம்...

            (என்றபடி தன் மூத்த மகளைப்பார்க்கிறார்
             அவர் தரையைப் பார்த்தபடி குனிந்து நிற்கிறார் )

            பின் தன் மனைவியைப்பார்த்தபடி

            ..."அடுத்து ஒரு படம் நடிக்க
             முடிவெடுத்து விட்டேன்
             சந்தோஷந்தானே "

அதுவரை எட்டி இருந்த இரண்டு பெண்களும்
ஓடி வந்து  அப்பாவை
அணைத்துக் கொள்கிறார்கள்

மெல்ல நடந்து வந்த அவரது பின்புறம் வந்த
அவரது துணைவியார்  மெல்ல அவரது கழுத்தைக்
கைகளால் சுற்றியணைத்துக் கொள்கிறார்
.
அந்த அன்புப் பிடியில் சிறிது நேரம் கண்மூடி
இருந்தவர்..பின் பேசத் துவங்குகிறார்...

           (எதிரே இருந்த ராகவேந்திரர் படைத்தை
            வெறித்து நோக்கியபடி )

           "ஆம் நடிக்கமுடிவெடுத்து விட்டேன்
            ஆனால் எப்போதும் போல இல்லை
            மிக வித்தியாசமாய்... ஆம்  
             மிக மிக வித்தியாசமாய்
            படத்தில் மட்டுமல்ல...எல்லா விதத்திலும்
            ஆம் எல்லா விதத்திலும் ...

           எனச் அழுத்தமாய்ச் சொல்லியபடி அவருக்கே
           உரித்தா அந்த "ஹா...ஹா.." என்று
          சப்தமாய்ச் சிரிக்கிறார்
            எல்லோரும் என்ன சொல்லப் போகிறாரோ என
            ஆவலுடனும் அதிர்ச்சியுடனும் அவரைப்
             பார்த்தபடித்  திகைத்து நிற்கிறார்கள்

             பின் அவரே தொடர்கிறார்

ரஜினி  ( தன் மனைவியை நோக்கி )
            உடன் தாணுவுக்கும்ரஞ்சித்துக்கும்
            ஒரு போன் போட்டு அவர்களுடன்
           ஒரு படம் பண்ண விரும்புவதாகச் சொல்லு
           இன்னைக்கே..அதாவது இன்னைக்கே "

           எனச் சொல்லியபடி பெண்கள் இருவரின்
           கன்னங்களில்அன்பாய்த் தட்டியபடி
           எழுந்து செல்கிறார்
         
           லதா ரஜினி அவர்கள் மெல்ல திரும்பிக்
            காலண்டரைப் பார்க்க அதிலிருந்த
            வியாழக்கிழமைப் பெரிதாகி பெரிதாகி
            திரை மறைக்க காட்சி முடிகிறது

16 comments:

வெங்கட் நாகராஜ் said...

அசத்தலான தொடக்கம்... தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

Dr B Jambulingam said...

விறுவிறுப்பான தொடக்கம்.

தி.தமிழ் இளங்கோ said...

நீங்களும் கபாலிடா ... வா?

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு
தொடருங்கள்
தொடருவோம்

புலவர் இராமாநுசம் said...

நல்லாதான் இருக்கு!இரமணி! நலமா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

தொடக்கமே அமர்க்களம் தொடருங்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

என்னதான் சொல்லப் போகிறீர்கள்? தொடர்கிறேன்

‘தளிர்’ சுரேஷ் said...

தொடர்கிறேன்!

Thulasidharan V Thillaiakathu said...

அட இது உங்கள் கபாலியா!!!! அருமை தொடர்கின்றோம் இதோ அடுத்த பகுதிக்கு

Ramani S said...

வெங்கட் நாகராஜ் said...//
அசத்தலான தொடக்கம்..//

தங்களின் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

கரந்தை ஜெயக்குமார் said...//
ஆகா//

தங்களின் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Dr B Jambulingam said...//
விறுவிறுப்பான தொடக்கம்.//

தங்களின் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

தி.தமிழ் இளங்கோ //

தங்களின் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...//
அருமையான பதிவு
தொடருங்கள்//

தங்களின் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

புலவர் இராமாநுசம் said...//
நல்லாதான் இருக்கு!இரமணி!//

தங்களின் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Post a Comment